M&L இதழ்கள் வேண்டாம். அது ஒன்பது இதழ்கள்தான் வந்துள்ளன. அதிலும் ஒருசில இதழ்களில்தான் எனக்குத் தேவையான விஷயங்கள் உள்ளன. அவற்றைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு விட்டேன்.
https://en.wikipedia.org/wiki/Sulfur_(magazine)
மேற்கண்ட இணைப்பில் ஸல்ஃபர் என்ற பத்திரிகை பற்றிய விபரங்களைக் காணலாம். அது போன்ற ஒரு பத்திரிகையை என் அனுபவத்தில் வாசித்ததில்லை. என்னை உருவாக்கிய பத்திரிகைகளில் அது ஒன்று. இன்னொன்று, கூபாவிலிருந்து வாராவாரம் வந்து கொண்டிருந்த Granma என்ற டேப்ளாய்ட் பத்திரிகை. ஸல்ஃபர் 1981இலிருந்து 2000 வரை வந்தது. முதலில் ஆண்டுக்கு மூன்று இதழ்கள். பிறகு இரண்டு இதழ்கள். 2000-இல் அதை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் பத்திரிகை நின்று விட்டது. பல்கலைக்கழகங்களோ அரசு மானியமோ மக்கள் உதவியோ எதுவும் கிடைக்கவில்லை. கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் Poet in Residence ஆக இருந்த Clayton Eshleman என்பவரால் நடத்தப்பட்ட பத்திரிகை.
உங்களுக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தால் அதன் தொகுப்பு நூலை நீங்கள் படித்துப் பார்க்கலாம். அதை என் நண்பர் ஒருவர் மூலம் நான் வாங்கிக் கொண்டு விட்டேன். அந்த நண்பர் ஜெயமோகனின் தீவிர வாசகர் என்பது உபரி தகவல்.
பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய விழாவில் எடுத்த புகைப்படம் இது. புகைப்படத்தில் உள்ள நண்பர் யார் என்று மறந்து விட்டேன். அவர் என் மறதியை மன்னிக்க வேண்டும்.
புகைப்படம் எடுத்த நண்பர்: அன்புக்கரசு