135. அந்தணர் என்போர்…

இன்று முகநூலில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவு என் மனதைத் தொட்டது.  அவர் தனக்கென்று வாங்கி வைத்திருந்த பரோட்டாவையும் சால்னாவையும் ஒரு நாய் வந்து சாப்பிட்டு விட்டது.  மற்ற சமயமாக இருந்தால் அடி பின்னி எடுத்திருப்பார்.  நேற்று ஏதோ என் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டார்.  இன்று அந்த நாய்க்கு செம உதை இருக்கிறது.  அதைத் தடுக்கவே இந்தப் பதிவு.

எல்லா உயிரிலும் இருப்பது நம்முடைய ஆன்மாதான், எல்லா உயிருமே நாம்தான் என்றெல்லாம் நான் ராஜேஷுக்கு சொல்ல வரவில்லை.  அதுதான் உண்மை என்றாலும் கூட.  என் கேள்வி என்னவென்றால், அந்த நாயை ஏன் உங்களால் உங்களுடைய ஒரு குழந்தையாகப் பார்க்க முடியவில்லை என்பதுதான்.  நான் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கப் போகிறேன் என்று சொன்னவர்தானே நீங்கள்?  நாயை ஏன் தத்துக் குழந்தையாகப் பார்க்கக் கூடாது?  சரி, பெங்களூரில் உள்ளவர்களுக்கு நாய் அலர்ஜி உண்டு.  ஏனென்றால், பெங்களூர் தெருநாய்கள் மிகவும் மூர்க்கமானவை.  அங்கே நாய்க்கடி பட்டவர்கள் ஏராளம்.  சரி, நாயை ஏன் தெருவில் உலவ விடுகிறோம்?  அது யாருடைய தவறு? வளர்ச்சி அடைந்த நாடுகளில் தெருநாய்கள் கிடையாது.  எங்கெல்லாம் தெருநாய்கள் இருக்கின்றனவோ அதெல்லாம் வளர்ச்சி அடைந்த நாடு இல்லை.  தெருவில் நாய்கள் அலைவதும் மனிதர்கள் அலைவதும் ஒன்றுதான்.  இந்தியாவில் மனிதர்களுக்கே வீடு இல்லாததால் நாய்கள் தெருவில் லோல் படுவதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏதோ குளறுபடியால் நாய்கள் மனிதனோடு வாழப் பழகி விட்டன.  வனத்தில் இல்லை.  அப்படியானால் அவை தெருவில் இருக்கக் கூடாது.  தெருநாய்கள் கன்னாபின்னாவென்று குட்டி போடும்.  அதையும் தடுக்க வேண்டியது மனிதர் கடமை.  மனிதனுக்கு இருக்கும் வாய்ப்பும் நாய்க்கு இருக்கும் வாய்ப்பும் ஒன்றா?  நீங்கள் என்ன நான் கடவுள் படத்தில் வரும் ஆர்யாவா?  உடல் ஊனமுற்றவர்களுக்கு இந்த பூமியில் வாழத் தகுதி இல்லை, செத்துப் போ என்று சொல்வதற்கு?  ஹிட்லர் அப்படித்தானே சொன்னார்?  உணவுக்கு வழியற்றவைகள்தானே நாய்கள்?  அப்படியானால் நாம்தானே அவைகளுக்கு உணவிட வேண்டும்? 

நான் வாசகர்கள் அனுப்பும் பணத்தில் வாழ்கிறேன்.  இதில் எனக்குக் கொஞ்சமும் கௌரவக் குறைச்சலோ மன உளைச்சலோ இல்லை.  என் மகனின் பணத்தில் வாழ்ந்தால்தான் கௌரவக் குறைச்சல்.  ஏனென்றால், என் எழுத்தை அவன் படித்ததில்லை.  அவனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை.  எதையும் நான் வற்புறுத்துவதும் இல்லை.  படித்திருந்தால் பணம் குட்ரா ராஸ்கல் என்று கேட்டிருப்பேன்.  ஆக, எனக்குத் தரப்படும் நூறு ரூபாய், இருநூறு ரூபாய், முன்னூறு ரூபாய், ஐநூறு ரூபாய், அத்திப் பூத்தாற்போல் ஐயாயிரம் என்று வருகின்ற பணத்தில்தான் பதினேழு பூனைகளுக்கு உணவு போடுகிறேன்.  கீழே தரைத் தளத்தில் பத்து பூனைகள்.  வீட்டில் இருந்த ஏழு பூனைகளை socity for the prevention of cruelty to animals (SPCA) என்ற ஷெல்டரில் கொடுத்து விட்டேன்.  ஆனாலும் கை கழுவி விட்டோம் என்று இருக்காமல் மாதாமாதம் அவைகளுக்கான உணவை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.  ஷெல்டரின் விட்ட காரணம், கொரோனா.  அவை வெளியில் போக அடம் பிடிக்கின்றன.  வெளியில் போனால் இந்தக் குடியிருப்பின் உள்ளே, அதாவது என் வீட்டுக்கு உள்ளே வர இங்கே உள்ளவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  அதுதான் சரியும் கூட.  அதனால்தான் ஷெல்டரில் விட நேர்ந்தது.  அங்கே அவை சுதந்திரமான பெரிய மைதானத்தில் கூட்டாக வாழ்கின்றன. 

Cat food என்று சொல்லப்படுகின்ற பூனை உணவு, wet cat food என்று சொல்லப்படுகின்ற, விலை உயர்ந்த உணவு தவிர தினமும் காலையில் பூனைகளுக்குக் கோழிக்கறியும் கொடுப்பாள் அவந்திகா.  இரண்டு கிலோ வாங்கினால் வாரம் பூராவும் வரும்.  தினமும் எட்டு துண்டுகள் நாலு பூனைகளுக்கு.  மீதிப் பூனைகள் காலையில் வராது.  நேற்று அவந்திகா சொன்னாள், எட்டு துண்டு போதவில்லை, பத்துப் பன்னிரண்டு துண்டு போடு, சமயத்தில் எல்லா பூனையும் வந்து விடுகின்றன.  என்னம்மா இது, நான் இந்தக் கோழிக் கறியையே நிறுத்தி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்.  ஏம்பா, நீ தெனமும் சாம்பார் சாதமே சாப்பிடுவியா என்றாள்.  ஒருநாள் கோழிக்கறி தீர்ந்து விட்டது.  கீழே உள்ள பூனைகள் மதியம் இரண்டு மணி வரை அங்கே இங்கே நகரவே இல்லை.  கிழேயே கிடந்து கத்திக் கொண்டிருந்தன, அந்த ஒரு துண்டு கோழிக் கறிக்காக.  ரொம்பப் பரிதாபமாக இருந்தது.  ஆளை அனுப்பி வாங்கி வரச் சொல்லி போட்டேன்.  அப்போதுதான் கணக்குப் போட்டேன்.  பூனை உணவுக்கு எத்தனை செலவு ஆகிறது.  கோழிக்கறி மட்டும் 3000 ரூ.  மற்ற பூனை உணவு பதினேழு பதினெட்டு ஆயிரம்.  மொத்தம் இருபதாயிரம் ரூபாய்.  சரியாக இருபத்தேழு ஆண்டுகளாக இந்தச் செலவு ஓடிக் கொண்டிருக்கிறது.  முன்பு நாய்கள்.  இப்போது பூனைகளும் காகங்களும். 

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு கவளமும் ஒரு கறித்துண்டும் அந்த நாய்க்குப் போட்டால் என்ன?  இதையெல்லாம் எந்தப் புத்தகமும் படிக்காத என் அம்மாவும் உங்கள் அம்மாக்களும் செய்தார்களே?  இன்னமும் சேரிகளில் செய்து கொண்டிருக்கிறார்களே?  புத்தகப் படிப்பு நம் இதயத்தை அரித்துத் தின்று விட்டதா?  நாய் பூனை இல்லாத ஒரு சேரியையாவது இந்த மொத்த உலகிலும் நீங்கள் காண்பிக்க முடியுமா?  மீன் கழுவும் போது அந்தக் கழிவையெல்லாம் பூனைக்கும் நாய்க்கும் காகங்களுக்கும் கொடுத்து விடுவார்கள் சேரிப் பெண்கள்.  காகங்களுக்கும் உணவு கொடுத்து விட்டுத்தான் சாப்பிடவே சாப்பிடுவார்கள்.  இப்போது அடித்து விரட்டுகிறோம்.  காரணம், நாம் படித்தவர்கள். 

ஜீவகாருண்யனாக மாறியதற்குக் காரணம் ஆதி சங்கரரெல்லாம் இல்லை.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஒரு பூனை சமையல் அறையில் இருந்த பாலைக் குடித்து விட்டது.  அதை பயமுறுத்தி அடித்து விரட்டாமல், அதற்குக் கொஞ்சம் சோற்றில் நெய் கலந்து வைத்தேன்.  அது எப்படி சாப்பிட்டது தெரியுமா?  அந்தக் காட்சியைக் காண்பதற்காகவே ஏழு ஜென்மம் எடுக்கலாம்.  அப்படி விழுந்து விழுந்து சாப்பிட்டது.  எத்தனை நாள் பட்டினியோ.  அன்றிலிருந்து தினந்தோறும் வரும்.  நானும் சோறும் நெய்யும் போடுவேன். 

எனவே ராஜேஷ், இன்றிலிருந்து இரண்டு மீல்ஸாக வாங்குங்கள்.  அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்.  அறம் என்றால் என்ன என்ற கேள்விக்கும் பதில் சொல்லி விட்டார்.  எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுபவதே அறம். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai