நிலவு தேயாத தேசம்

பொதுவாக என் பயணக் கதைகளை நாவலோடு இணைத்து விடுவது வழக்கம். என் பாரிஸ் பயணம் ராஸ லீலாவில் உள்ளது. மற்ற இமாலயப் பயணம் கொஞ்சமாய் எக்ஸைலில் உள்ளது. ஆனால் துருக்கி பயணத்தை அப்படிச் செய்யவில்லை. தனியாகவே அந்திமழையில் தொடராக எழுதினேன். மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட நூல் அது. அது பற்றி அக்னி பிரஸாந்த் தன் முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

நிலவு தேயாத தேசம்
நான் படித்த முதல் பயண நூல். மேலும்  படித்தே ஆகவேண்டிய  ஒன்றாய் என்னிடத்தில் இடம் பெற்ற நூல். படித்து ஒரு நாளாகிவிட்டது. தாக்கத்திலிருந்து விடுபெறமுடியமால் சாருவின் எழுத்து அலைகளாய் இதயத்தைத் தொட்டு கொண்டே இருக்கிறது எனச் சொல்லலாம். இல்லையென்றால்  இந்நூல் எண்ணில் அடங்கா பல வகை மீன்களைப்   போல் வரலாறுகளைக் கொண்ட கடல் என்றும் விவரிக்கலாம். சுருங்கச் சொன்னால்  அதிஅற்புதமான  நூல்.

இந்தப் பயணத்தில் சாரு நமது கைகளைப் பிடித்துக்கொண்டு ” வாருங்கள் வாசகர்களே, இதைப் பார்ப்போம் ” என அங்கும் இங்கும் பார்த்த இடங்களை மட்டும் விவரித்துச் செல்லவில்லை.  அங்கேயே ஒரு சாருவாக வாசகர்களை நிறுத்துகிறார் . ஆரம்பத்திலிருந்து முடியும் வரை துருக்கி  நாட்டுப் பயணத்தில் வாழ்ந்துவிடுவோம். அவ்வளவு தெளிவு இருக்கும். அங்குள்ள மனிதர்களின் உணர்வுகளை மேம்போக்காக எழுதிவிடமால் அவர்களிடம் உரையாடுவதிலிருந்து வரும் செய்திகளை வைத்து அடுக்கடுக்காக நாம் அங்கு வாழும் மனிதர்கள் பற்றி எண்ணிக்கொண்டு இருக்கும்  பொய்யான பிம்பத்தை உடைக்கிறார். அங்கு அவர் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிலிருந்தும் ஓர் வரலாற்றுக் கதை பிறக்கிறது. இது அந்த மனிதர்களின் சந்திப்பின் அழுத்தை உணரவைக்கும். இவ்வாறு நூலின் பக்கங்கள் திருப்ப திருப்ப ” ஏ…ப்பா.. ” என பிளக்க செய்யும் விஷயங்கள். எல்லாவற்றையும் நம் கண்முன்னே நிற்கும் ஏனென்றால ஒரு துண்டு வரலாற்றுக்கும் இணையதளம் லிங்க் கொடுக்கபட்டு இருக்கும். அதில் வரும் காணொளி அல்லது படங்கள் தம்முடைய  கற்பனைக்குக்  கொண்டு செல்லாமல் நிஜ வாழ்வியலுக்குள் புகுத்தி விடும். எவ்வளவு ஆழமான எழுத்து. இனம் மொழி மதத்தினால் நிகழ்ந்த பிரச்சனைகள் அதற்காக போராடிய மக்கள் . அவர்களை வழிகாட்டிய இலக்கியவாதிகள். அதற்குத் தடையாய் இருந்த அரசுகள். ஒரு பக்கம் அழகான பூக்கள் பெண்கள் கட்டுமானங்கள் என போகும் மறுபக்கம் அதே பூக்களின் தலை கிள்ளும் பெண்களின் வன் கொடுமையின் வரலாறு பேசும் கட்டுமானங்களால் விளைந்த சூழலை சொல்லும் இப்படி பக்கத்துக்கு பக்கம் வாசகர்களை  திருப்புகிறார் சாரு. 
குர்து என்னும் மொழிக்காகப் போராடிய மக்கள் இலக்கியவாதிகள் பாடகர்கள் என விவரித்த போது நாம் நம் மொழிக்காக என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்ற கேள்வி இதைப் படிக்கும் போது நிமிர்ந்து யோசிக்க வைக்கிறது. பயணத்தில் சாரு கால் பதித்த இடம் மட்டுமல்ல,  சுற்றிலுள்ள ஏனைய நாடுகளின் வரலாற்று அற்புதங்களையும் அவலங்களையும் விளக்கி அதனின் ஆரம்பித்த தலையிலிருந்து முடியும் வால் வரை நறுக்கென பதிய வைக்கிறார். எதுவும் நாம் துகள் அளவுகூட கேள்விப்படாத ஒன்றாய் இருக்கும். அங்கிருக்கும் பெண்கள் கலாச்சாரம் தொழில்முறை என பலவற்றை போய்க் கொண்டிருக்கையில் குர்து மொழியினைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும்போது  நம்மை நிலைகுலைய வைக்கும். அதுவும் 18வது அத்தியாத்தில் தொடக்கத்திலே “செல்லும் இடங்களில் அதிகம் மனிதர்கள் பற்றியே எழுதுகிறீர்கள் . மிகவும் பிடித்திருக்கிறது ” என மனுஷ்யபுத்திரன் சாருவை பாராட்டுவார் . அதன் பின் குர்து மொழி போராளி ஹைதரை சந்திப்பார் சாரு .எழுத்தாளன் என்ற  அறிமுகத்தில்  தொடங்கிய உரையாடல்.  மொழிக்காக சிறைசித்திரவதைகளை அனுபவிக்கும் மக்கள் என விவரிக்கும் போது அது கற்பனை செய்து பார்க்க முடியாதவதாக இருக்கும். எப்படி என்றால் பாராளுமன்றத்தில் ஓரிரு வார்த்தைகள் குர்து மொழியில்  பேசியதால் பிரிவினைவாத தூண்டியதாக பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபடுகிறது அவள்தான் லைலா அமைதிக்கான நோபல் பரிசு சிபாரிசு செய்யப்பட்ட பெண்‌. அப்பொழுது நினைத்துப் பாருங்கள் சாதாரண மனிதர்களின் அவலநிலையை கொஞ்சமாக அல்ல கொடுரமாக இருக்கும். மலப் பீப்பாயில் கழுத்துவரை உட்காரவைப்பது. கைகளைப் பின்னாடி கட்டித்தொங்கவிட்டு மின்சாரத்தைச் செலுத்துவது என மக்களை ரணமாக்கிய அரசைச் சொல்லும் போது நெஞ்சம் பதைபதைக்க வைக்கும்.

மேலே சொன்ன லைலா என்ற பெண் பேசும்  காணொளி லிங்க் அத்தியாயம் முடிவில்  இருக்கும்.  அதைப் பார்த்தால் குவியலாய் ஆண்கள் சூழ  பெண் சிங்கம் போல் குர்து மொழியில் கர்ஜித்து வீரமங்கையாய் இறங்குவது போன்று இருக்கும்  . இப்படி மொழிச் சுதந்திரத்திற்காக பாடுபட்டு தீர்வே இல்லாத கொலைமிரட்டலில் வாழ்வு போய்க்கொண்டு இருக்கும் பாடகர்கள்  இலக்கியவாதிகள் பற்றியும்   சாரு மெய்சிலிரத்து எழுதிருக்கிறார் . முன்னே சொன்னது தான் எழுத்தாளன் எனத் தெரிந்ததுமே ஹைதர் தனது வாழ்க்கையே விவரித்தார் ஏன் என்ற கேள்வியை நம்முள் எழுப்பிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அங்கிருக்கும் மனிதர்களிடம் இலக்கியவாதிகள் மீதான நாட்டம் அதிகமாக இருப்பதனால் அவன்  போராளியாக அல்லாமல் எதிராளியாக இருந்தாலும்  கூட அவர்களை கவனித்துப் பேசும் மக்களாக இருக்கின்றனர். நம்மூர் போன்று வெறும் ‘தமிழன்டா ‘ என்ற ஃபேஷன் முழக்கத்தோடு செல்வது அல்ல, அங்கே மொழியின் இலக்கியவாதிகளை பின்தொடவர்வதே ஆகும்.

நூலில் சாரு சொல்வது போல் பெரும்பாலானோர் கம்பன் மற்றும் அற்புத கவி பாரதி யோடு நின்றுவிட்டார்கள். அதற்கு மேல் சென்றால் வைரமுத்து,மு வ போன்ற சிலர் மட்டுமே மூளையில் உதித்து முற்றிவிடுகிறார்கள். பின்வந்த மற்றும் தற்சமயம் இருக்கும் இலக்கியவாதிகளை யார் கண்களுக்கும் தெரியவில்லை . இல்லை‌. இல்லை..  தெரியவில்லை என்று சொல்லக்கூடாது பார்ப்பதில்லை அவர்களின் அற்புதமான படைப்புகளை கொண்டாடுவதில்லை . முன்னே சொன்னது போல் பாரதி என்ற கவி இருக்கும் போதும் ஏனையோர் அல்லாமல் சிலரிடம் மதிப்பு மட்டுமே பெற்றவராக இருந்தார். இறந்த பிறகு கொண்டாடிய கவிகளில் ஒருவரானார். அவரே  இப்பொழுது பிறந்தாலும் கூட மாற்றம் ஒன்றும் ஏற்படுவதாக தெரியவில்லை எவனும் கண்டுகொள்ள மாட்டான். ஏனென்றால் அவர் திரையில் வரமாட்டார் அல்லவா. நாம் யாரும் எம்.ஜி.ஆர் சிவாஜியோடு  முடித்துக்கொள்ள வில்லை சிவகார்த்திகேயன் வரை ஒவ்வொருத்தரையும் மனிதில் ஏற்று கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இலக்கியத்தில் கடைபிடித்தோமா என்று சொன்னால் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. இன்றும் பாரதி போல் ஓர் கவி இருந்து கொண்டு தான் இருக்கிறான். நாவலில் சாரு பல நாட்டவர்களோடு  தான் பயணம் செய்தார். அவர்களிடம் உரையாடுவதற்கு தேவையிருந்த இரண்டே விஷயம் தான் இலக்கியம் மற்றும் சினிமா.
சாரு பல மொழியின் இலக்கியத்தை படித்தவராக இருந்தனால் மட்டுமே அங்கு பலரிடம் தகவல் பெறுவதற்கு ஏதுவாக இருந்தது என சொல்லலாம். இறுதி கட்டத்தில் லெபனான் நாட்டு பெண்மணியோடு சாரு பயணிக்கும்போது அம்மொழியின் தலைசிறந்த நாவல்களின் உரையாடல் ஆரம்பிக்கும். அதுவே சந்திப்பின் அழுத்ததை உண்டாக்கும். லெபனான் நாடு நம்மில் பலருக்கும் தெரியாது. சமீபத்தில் வெடித்ததே Beirut நகரம் அது லெபனான் நாட்டின் தலைநகரம் தான். தொண்ணூறுகளில் நடந்த  உள்நாட்ப் போரினால் அவதிப்பட்ட மக்களின் துயரங்கள் அழுத்தமாக நாவலில் இருக்கிறது.  கதவை வேகமாக மூடினாலே குண்டுவிழுந்தாக என நடுங்கிய வண்ணம் இருந்த உணர்வுகளை  என விவரிக்கும் போது வேதனைகளை மனதில் குடியேற செய்கிறது. இதுபோன்ற நாடு இருப்பாதாகவே பல பேருக்கு தெரியாது அதுவும் உள்நாட்டு போர் பற்றியா வாய்ப்பே இல்லை . அதில் நானும் ஒருவன் தான் ஆனால் சில தினங்களுக்கு முன் ‘ Capernaum ‘ படம் மூலம் தெரியவந்தது. லொபனான் நாட்டு பிள்ளைகளின் துயரத்தை பிரதபலித்த படம் அற்புதமான இருக்கும் . நேரமிருந்தால் பார்த்து விடுங்கள்.
நாவலின் இறுதியாக நாஸிம் என்னும் மகாகவியின் வரலாறுகளையும் மற்றும் செபிரியா ராணுவத்தினால் போஸ்னியா பெண்கள் வனகலவி செய்யபட்ட அவலங்களையும் படிக்கும்போது இதன்  இரண்டு மட்டுமே இந்த நூலைப் பெரிய நாவலாக உணரக்கூடும். குறிப்பாக யாரையும் இங்கு முன்னிலைப் படுத்தவில்லை இயேசு மோனலிசா எகிப்தில் கிரேக்க மொழி கிளியோபட்ரா ஷேக்ஸ்பியர் சே குவாரா   இது போன்று பல அறிவார்ந்த விஷயங்களை பயணத்தில் ஒரு கைடாக அல்லாமல் தோழனாக விவரித்து அழைத்துச் செல்கிறார் சாரு.

செல்ஃபோன் வெளிச்சத்தில் வாழுகின்ற மக்களுக்கு . நிலவு தேயாத தேசம்  தினசரி வாழ்விலிருந்து விலகி புதிய பயண அனுபவமாக இருக்கும். . மேலும் நிலவு தேயாத தேசம் விசிறியாக இரண்டாம் பாகத்திற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.

கிடைக்கும் இடம்: