சமீப காலத்தில் இப்படி ஒரு கதையைப் படித்ததில்லை. அற்புதம். மனித வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத சிடுக்குகளை மகத்தான கதைசொல்லல் மூலம் கலையாக்குகிறார் சாதனா. தொடர்ந்து ஒருவர் இப்படி இதே மாதிரியான கதைகளை வலு குறையாமல் எழுதிக் கொண்டே இருப்பது எனக்குப் பரவசத்தை ஏற்படுத்துகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கிய மேதைகளின் வாரிசு இவன். படித்துப் பாருங்கள்.