எமிரேட்ஸ்/அமீரகம் நண்பர்களுக்கு…

அமீரகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கு

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலும், லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலும் தேவைப்படும் அமீரக நண்பர்கள் எனக்கு எழுதினால் அதை அமீரகத்தில் உள்ள ஒரு நண்பருக்கு அனுப்பி வைக்க முடியும். எத்தனை பிரதிகள் வேண்டும் என்ற விபரம் தெரிய வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வாங்காமல் இருந்தால் புத்தகங்கள் அமீரகத்திலேயே தங்கி விடும். அந்த சிரமத்தை மட்டும் அளிக்கக் கூடாது. இதற்கான விநியோக விஷயங்களைச் செய்ய என் நண்பர் ஒருவர் இசைந்துள்ளார். அவர் இலக்கியவாதி இல்லை என்பதால் அமீரக நண்பர்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் காரியத்தில் மிகவும் கெட்டிக்காரர். அவர் இலக்கியத்தில் நுழையாமல் இருப்பது என்னைப் போன்றவர்களுக்குப் பெரிய அனுகூலம்.

லத்தீன் அமெரிக்க சினிமா எல்லோருக்குமானது அல்ல. அதை சராசரி வாசகர்கள் படிக்க முடியாது. ஆனால் முகமூடிகளின் பள்ளத்தாக்கை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். 15 வயது இளைஞரிலிருந்து 100 வயது வரை, பேராசிரியரிலிருந்து டாக்ஸி/ஆட்டோ டிரைவர் வரை படிக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட யாரையாவது வாசிக்கச் சொல்லிக் கேட்டாலும் சுவாரசியமாக இருக்கும்.

இரண்டு புத்தகம் அல்லது ஒரு புத்தகம் தேவைப்படுவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்:

charu.nivedita.india@gmail.com