ஒரு விவாதம் (2)

ஒரு விவாதம் என்ற பகுதியைப் படித்து விட்டு இதைப் படிக்கவும்.  இது பற்றி இரண்டு முக்கியமான கடிதங்கள் வந்துள்ளன.  கடிதங்களைப் படியுங்கள்.  பிறகு நான் எழுதுகிறேன். Dear Charu, I had a thought to your question in the latest blog about Zero Degree’ I tried to write in Tamil; but found it was too difficult to translate. I strongly object to the ‘stance’ … Read more

பிடித்த எழுத்தாளர்

தமிழில் சமகால எழுத்தின் மீது என் அதிருப்தியை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  இருப்பினும் ஓரிருவர் என் மனம் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர்.  அவர்களில் ஒருவர் என். விநாயக முருகன்.  ஏற்கனவே இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  இவரது எழுத்தை முகநூலில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இவரது கவிதைகளும் எனக்குப் பிடிக்கும்.  உரைநடை அதை விடப் பிடிக்கும்.  இவர் எழுத்தில் உள்ள பகடி அலாதியானது.  பகடி செய்வது தான் மிகப் பெரிய பிரச்சினை.  சிலர் பகடி என்று நினைத்துக் கொண்டு … Read more

புறாவின் எச்சத்தில் ஆலம் விதை…

இன்று பூர்ணசந்திரன் பேசினார்.  ஒரு மாதமாக தொடர்பு இல்லை என்றதும் குழப்பமாக இருந்தது.  ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் அடுத்த நாளே என் மீது கொலை வெறியோடு திரிவதால் வந்தக் குழப்பம்.  சொன்னேன்.  சிரித்தார் பூர்ணா.  எவ்வளவு துரோகங்கள் நடந்தாலும் உள்வட்டம் உள்வட்டம்தான்.  உள் வட்டத்தில் இதுவரை குழப்பம் நடக்கவில்லை.  இனிமேலும் நடக்காது.  என் பொருட்டு எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை சகித்தவர் பூர்ணா.  தொடர்பு இல்லை என்றதும் தவறாக நினைத்தது என் தவறுதான்.  இனி இப்படி நடக்காது.  என்னால் … Read more

இமயமலைப் பயணக் குறிப்புகள்: நாள் ஐந்து : கணேஷ் அன்பு

இணையத்தில் ஒருவர் இமயமலைப் பயணக் குறிப்புகள் என்ற பெயரில் கூகிளில் உள்ளதையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.  மொழிபெயர்ப்பும் நல்ல காரியம்தான்.  ஆனால் வரிக்கு வரி தகவல் பிழைகள்.  யாராவது திருச்சி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தோம் என்று எழுதுவார்களா?  அவர் ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தோம் என்று எழுதுகிறார்.  அதோடு இந்திய எல்லையையும் கன்னாபின்னா என்று மாற்றுகிறார்.  அப்படியில்லாமல் கணேஷ் அன்புவின் பயணக் குறிப்புகள் authentic ஆக உள்ளன. http://anbueveryone.blogspot.in/2013/09/5_28.html