நிராகரிப்பும் தடையும் (4)

சாரு நிவேதிதா ஏன் பெருமாள் முருகன் ஆக வேண்டும்? ஆர். அபிலாஷ் 16.02.20 த. ராஜனின் “சாரு நிவேதிதாவால் ஏன் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை?” என்னும் கட்டுரையுடன் என்னால் முழுக்க உடன்பட முடியவில்லை. ஏன்? சொல்கிறேன். தன்னை ஏன் தமிழ் சமூகம் பொருட்படுத்தவில்லை என சாரு அடிக்கடி சாடுவதுண்டு – அதில் பொறாமையும் உண்டு, நியாயமான வருத்தமும் உண்டு. சாருவின் அழகே அவர் தன் பொறாமைகளையும் ஆசைகளையும் லட்சிய முகமூடிகளின் பின்னால் மறைப்பதில்லை என்பது. ஆனால் … Read more

நிராகரிப்பும் தடையும் (3)

நிர்மல் சி. ம்ரின்ஸோ 16.02.20 நாம் தனிநபர்களே என்கிற உண்மை தெரிந்தவர்களாலும் , சமூகக் குழுமங்களோடு உரையாடாமல் தவிர்ப்பதன் மூலம் சமூகக் குழுமங்களிடமிருந்து தப்பிக்க நினைக்கிறவர்களும் சாருவோடு அடையாளப்படுத்திக்கொள்ள சிறிய அளவு வாய்ப்பு உண்டு . சாரு தன்னைத் தானே விமர்சித்துக் கொள்வது, தன் வாழ்க்கை குறித்த விமர்சனங்களை எழுதுவது போன்றவற்றையும் மற்ற எழுத்தாளர்களோடு ஓப்பிட்டு பார்த்தும் கட்டுரையில் எழுதியிருக்கலாம்.

நிராகரிப்பும் தடையும் (2)

தமிழ் இந்து – மனுஷ்ய புத்திரன் – அடியேன் சாரு நிவேதிதா 16.02.20 என் எழுத்து பற்றிய த. ராஜனின் கட்டுரை ஒன்று தமிழ் இந்து நாளிதழில் இன்று வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அது மிக நல்ல ஒரு கட்டுரை.  தமிழ்ச் சமூகத்திலிருந்து அந்நியமாகி விட்ட ஒருவனை அந்த சமூகம் எப்படி எதிர்க்கும் அல்லது எதிர்கொள்ளும்?  எனவே சாருவின் மீதான இந்தப் புறக்கணிப்பு புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்பது ராஜன் கட்டுரையின் அடிச்சரடு.  அக்கருத்தோடு எனக்கு … Read more

நிராகரிப்பும் தடையும் (1)

தமிழ் இந்துவில் சாருவின் எழுத்து குறித்து வெளியான கட்டுரையும் அதற்கான எதிர்வினைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. சாரு நிவேதிதாவால் பெருமாள்முருகனாக முடியவில்லை ஏன்? த. ராஜன் இந்து தமிழ் திசை 16.02.2020 சமீபத்தில் சாரு நிவேதிதா ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்: “விமர்சிக்கப்பட்டதாலும் அச்சுறுத்தப்பட்டதாலும்தானே பெருமாள்முருகன் இன்று சல்மான் ருஷ்டி அளவுக்குப் புகழ்பெற்றார்? வேறு என்ன காரணம்? ஒரு சுரணையுள்ள சமூகத்தில் என்னுடைய காமரூப கதைகள் நாவலைத் தடைசெய்திருப்பார்கள். அதன் மூலம் நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே பெருமாள்முருகனைப் போல் … Read more

பூனைகளும் நானும்…

பூனை புராணம் போதுமே சார் என்றார் பத்திரிகை ஆசிரியர்.  வாசகர்களை ரொம்பவும் போட்டுத் தாளிக்கக் கூடாது அல்லவா, அவர் சொல்வதும் சரிதான் என்று ஏற்றுக் கொண்டேன். சாரு ஆன்லைனிலும் எழுத வேண்டாம் என்றார்கள் நண்பர்கள். ஏற்கவில்லை.  எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறதே, என்ன செய்ய? ஆனால் ஒரு உத்தரவாதம் கொடுக்க முடியும்.  எழுதியதையே திரும்ப எழுத மாட்டேன்.  எனவே பூனை விஷயம் பிடிக்காதவர்கள் கொஞ்ச நேரம் ஒதுங்கிக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முன்கதையை மட்டும் … Read more

ஃபாஸிஸத்தின் முகங்கள்

ஹேராம் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. படம் வெளியான போது சாரு நிவேதிதா எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது. 1947 பிரிவினையின்போது சாகேத் ராமின் மனைவி ராணி முகர்ஜியை முஸ்லீம்கள் கற்பழித்து, அவள் கழுத்தையும் அறுத்து, கொன்று போட்டுவிடுகிறார்கள். இந்தக் காட்சி மிகவும் விபரமாக, நுணுக்கமாக, ஆவேசமாக, பார்வையாளர்களை வெறி கொள்ளச் செய்யும்படி அணு அணுவாக விவரிக்கப்படுகிறது. கற்பழிக்கும் கும்பலைச் சேர்ந்த அல்தாஃப் என்ற இளைஞன் சாகேத் ராம் குடும்பத்திடம் கூலி வாங்கிப் பிழைத்தவன். … Read more