இருவர்

என்னை மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் சிலரில் ஆக முக்கியமானவர்கள் என இரண்டு பேரைச் சொல்லலாம்.  ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.  நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை.  சமீபத்தில்தான் ஒரு நண்பரிடம் எஸ்.ரா. சென்னையின் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக் கொண்டால்தான் உண்டு.  சமீபத்தில் அப்படிச் சந்திக்க நேர்ந்த போது ”ArtReview Asiaவில் நீங்கள் எழுதுவது மிகப் பெரிய விஷயம்; மிகப் பெரிய கௌரவம்” என்றார். இன்னொருவர் ஜெயமோகன்.  அவரும் … Read more

மோர் சாதமும் தாமதமாக வந்த அழைப்பும்…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முகநூலில் அடியேன் இட்ட பதிவுகள்: ப்ராமின் கேர்ள்ஸைக் கல்யாணம் செய்து கொள்வதில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. நம்மையும் ப்ராமின்னு நினைச்சுக்கிட்டு அடையார் ஆனந்த பவன் ஜிலேபி கொடுத்து விடுகிறார்கள் பக்கத்து வீட்டு எதிர்வீட்டு இஸ்லாமிய சகோதரர்கள்! பிரியாணி வாசனை நம்மை நாலா பக்கமும் தூக்கி அடிக்க அடையார் ஆனந்த பவன் ஜிலேபி சாப்பிடுவது எவ்வளவு கொடுமை தெரியுமா நண்பர்களே! 12 மணி. மோர் சாதம், தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயத்தோடு இன்றைய … Read more

படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா

படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா, 10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். சிறப்பு அழைப்பாளர்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா இயக்குனர் வஸந்த் இயக்குனர் ஜனநாதன் இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் பா. ரஞ்சித் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மாத இதழான படச்சுருள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு … Read more

சிக்கன் பஜ்ஜியும் சில தேவ கணங்களும்…

தடம் இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில்: தடம் இதழை இன்று மாலை தமிழ்மகன் தந்தார். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் செம்மையாக இருந்தது. என்னைப்பற்றி சாரு ஒரு கட்டுரை எழுதியிக்கிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து அதை படிக்கவிரும்பினேன். ஒரு சிநேகிதி காலையில் போன் செய்து ‘ தடத்தில் சாரு உன்னைப்பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு நானே சாரு உன் கவிதைகளைப் பற்றி அவர் ப்ளாக்கில் எழுதியதை படித்துதான் உன்னைத் தேடி வந்தேன். … Read more