காமெடி பீஸ் – 2

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.  நேர்காணலை காமெடி பீஸாக மாற்றிய ஒன்று, என்னுடைய தியான புகைப்படம்.  நாகேஸ்வர ராவ் பூங்காவில் சர்வதேச புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது.  அதில் மெக்ஸிகோவின் நம்பர் ஒன் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களுக்கு முன்பு நின்றும் நான் போஸ் கொடுத்தேன்.  அதுதான் என்னுடைய எழுத்துக்கும் என் வாழ்க்கைக்கும் என் எழுத்தின் செய்திக்கும் உகந்ததாக இருக்கும்.  அந்தப் புகைப்படங்கள் பத்து அடி அகலமும் ஐந்தடி அகலமும் கொண்டவை.  பிரம்மாண்டமானவை. விஷயம் என்னவென்றால், … Read more

காமெடி பீஸ்…

சில தினங்களுக்கு முன்பு விகடனிலிருந்து ஒரு நேர்காணலுக்குக் கேட்டார்கள்.  சரி என்றேன்.  எப்போதுமே ஒரு எழுத்தாளன் லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைய விருப்பப்படுவான் தானே? எனக்கு இப்போது வயது 63.  என் முதல் கதை வெளிவந்த போது என் வயது 23.  சாவி தான் வெளியிட்டார். கதையின் பெயர் கனவுகள் சிதையும்.  சாவி நடத்திய பத்திரிகை. பத்திரிகை பெயர் ஞாபகம் இல்லை. அப்புறம் தில்லி போய் விட்டேன்.  வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் ஆசை போய் விட்டது. கணையாழியில் … Read more

வருவதற்கு முன்பிருந்த வெயில்…

எதிர் வெளியீடு மார்ச் 19 முதல் வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்) ஜி. கார்ல் மார்க்ஸ் ரூ.100 கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ்இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய் விடும். கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு மகத்தான கலைஞன் தமிழில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறான். அவனை வாழ்த்துகிறேன். – சாரு நிவேதிதா

ஒரு இனிய சந்திப்பு

நேற்று மாலை பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்தவுடனே வரவேற்றது வோட்கா.  Pug இன நாய்.  தரையில் அமர்ந்து அதோடு கொஞ்சி விளையாடி விட்டுத்தான் பார்த்திபனுக்கு ஹலோ சொன்னேன்.  பிறகு பாரதிராஜா வீட்டுக்குச் சென்ற போது மணி எட்டரை.  பனிரண்டு வரை பாரதிராஜாவும் பார்த்திபனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.   ”சிங்கத்தில் நல்ல சிங்கம் கெட்ட சிங்கம் என்றெல்லாம் உண்டா, சிங்கம் சிங்கம் தானே, நான் சிங்கம்” என்பது போன்ற ஏகப்பட்ட பஞ்ச் டயலாகோடு பேசினார் பாரதிராஜா.  மிகப் பெரிய … Read more