விழா பதிவுகள் – 18

ரங்கநாதன் கோதண்டராமனின் முகநூல் பதிவு: எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா அழைப்பிதழ் மின்னஞ்சலில். ஒவ்வொரு ஆண்டும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பிலேயே கழிந்து, இறுதியில் கலந்து கொள்ள முடியாமலேயே போய்விடும். இந்த ஆண்டும் அப்படித்தான் (சனிக்கிழமையாய் இருந்தும்). சாரு எழுதிய புத்தகங்களை உடனே வாங்க வேண்டும் என முனைந்ததில் அறம் பொருள் இன்பம் (அந்திமழை) கடைசிப் பக்கங்கள் (கிழக்கு) பழுப்பு நிறப் பக்கங்கள் (கிழக்கு) இன்று தபாலில் வந்து சேர்ந்து விட்டன. … Read more

படத் தொகுப்புப் பயிற்சிப் பட்டறை

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை பயிற்சியளிப்பவர்: படத்தொகுப்பாளர் B. லெனின் நாள்: 25, 26 & 27, March 2016. (வெள்ளி, சனி, ஞாயிறு), வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை) இடம்: சென்னை, நேரம்: காலை பத்து மணி முதல் பயிற்சிக் கட்டணம்: 4500/- (மதிய உணவு உட்பட) கலந்துக்கொள்ளும் நண்பர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். நண்பர்களே இந்தியாவின் தலைசிறந்த படத்தொகுப்பாளரான B. லெனின் தமிழ் ஸ்டுடியோவிற்காக மூன்று நாள் படத்தொகுப்பு பயிற்சி … Read more

கோவையில் புத்தக வெளியீட்டு விழா (உயிர்மை)

வரும் 12-ஆம் தேதி கோவையில் நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் அடியேனும் பேசுகிறேன். இப்போதெல்லாம் கூட்டங்களில் எல்லோரையும் பாராட்டியே பேசுகிறீர்களே, வயதாகி விட்டதா என்று பலரும் கொஞ்சம் கிண்டல் தொனியுடன் கேட்கிறார்கள்.  திட்டினால் திட்டுகிறார் என்றும், பாராட்டினால் பாராட்டுகிறார் என்றும் புகார் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.  விஷயம் ஒன்றுமில்லை; பிடிக்காத புத்தகங்களைப் பற்றிப் பேசுவதில்லை.  அவ்வளவுதான்.  உண்மையில் விசாரணை பட விழாவில் ஒரு சிறிய அரங்கில் 1000 சினிமா ரசிகர்கள் குழுமியிருந்தார்கள். … Read more

விழா பதிவுகள் – 17

டியர் சாரு, கடந்த வாரம் நடந்த தங்களது புத்தக வெளியீட்டில் நானும் கலந்து கொண்டேன். முதன் முதலில் உங்களை நேரில் கண்டதும் அன்றுதான். இன்னும் என்னால் அந்த பிரமிப்பில் இருந்து மீள இயலவில்லை. சிறு வயதில் எங்களது கிராமத்தின் அருகில் நடைபெறும் தேர்திருவிழா கடைத்தெரு போல இருந்தது. அத்தனை excitement. அத்தனை கொண்டாட்டம். பிற வாசகர்களைப் போல் நிரம்பப் படித்தவனில்லை நான். கொஞ்சம் இலக்கியப் பரிச்சயம் உண்டு. உங்களது அட்டகாசமான எழுத்து நடைக்கு நிகர் பிறிதொரு எழுத்து … Read more