ஷ்ருதி டிவி

எனது உரைகளையும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளையும் தொடர்ந்து பதிவுசெய்து வரும் ஷ்ருதி டிவிக்கு நாம் செய்யும் சிறு உதவியாக, அவர்கள் youtube பக்கத்தை subscribe செய்வோம். https://www.youtube.com/channel/UC22cpNxti7TfrYzcPVsiJOA?sub_confirmation=1

விழா பதிவுகள் – 19

புத்தக வெளியீட்டு விழா நடந்த ராஜா அண்ணாமலை மன்றத்தின் கொள்ளளவு 800.  அவ்வளவு பேரும் வந்து விடுவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்த்தேன்.  அதில் எனக்கு சந்தேகமே எழவில்லை.  சென்ற ஆண்டைப் போல் நோட்டீஸ் அடிக்கவில்லை; 70000 ரூ செலவு செய்து நகரம் பூராவும் விளம்பர போர்டுகள் வைக்கவில்லை (காசு இல்லை).  தினசரிகளில் சென்ற ஆண்டைப் போல் விளம்பரம் கொடுக்கவில்லை.  இந்துவிலும் தினமணியிலும் மட்டும் இன்றைய நிகழ்ச்சியில் வந்திருந்தது.  ஆனாலும் 800 பேரை எதிர்பார்த்தேன்.  அதற்கு இரண்டே காரணங்கள்தான். … Read more

நிலவு தேயாத தேசம் – 18 & 19

மீண்டும் சொல்கிறேன்.  துருக்கி பயணக் கட்டுரையை நீங்கள் இப்போதே இணையத்தில் படிக்கவில்லையானால் பல விஷயங்களைத் தவற விடுகிறீர்கள் என்று பொருள்.  பல நண்பர்கள் இந்தத் தொடரை புத்தகமாக வந்த பிறகு படித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.  இந்தத் தொடர் இணைய இதழுக்காக எழுதப்படுவது.  இதில் உள்ள புகைப்படங்கள், காணொளிகள் புத்தகத்தில் வரும் சாத்தியம் இல்லை.  எனவே இப்போதே படித்து விடுங்கள். http://andhimazhai.com/news/view/nilvavu-18.html  http://andhimazhai.com/news/view/charu07316.html