நியூஸ் 7 விவாதம்
இன்று இரவு ஒன்பது மணிக்கு நியூஸ் 7 சேனல் விவாத நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன். விவாதத் தலைப்பு: திரைப்படப் பாடல்களில் ஆபாசம்.
இன்று இரவு ஒன்பது மணிக்கு நியூஸ் 7 சேனல் விவாத நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன். விவாதத் தலைப்பு: திரைப்படப் பாடல்களில் ஆபாசம்.
சிம்பு, அநிருத் விஷயமாக நான் எழுதியிருந்த பதிவை ’தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்றைய தினம் நடுப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்துவுக்கு நன்றி. அதில் சிம்புவின் பதில் பார்த்தேன். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கடவுள் இருக்கிறார். அவ்வளவுதான் சொல்ல முடியும். சினிமாத் துறையில் உள்ள சீனியர் நண்பர் ஒருவர் ஃபோன் செய்து, “காவாலித்தனம் என்றே தலைப்பு வைத்திருக்கலாம்” என்று சொன்னார். இவ்வளவு தூரம் சமூகத்தை சீரழிக்கும் நிலையிலும் யாரையும் புண்படுத்த மனம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. கார்ல் … Read more
ஏற்கனவே பலமுறை லாரா ஃபாபியான் பற்றி எழுதியிருக்கிறேன். ஃப்ரெஞ்ச் பாடகி. அவரிடம் இருப்பது போன்ற ஒரு ஆவேசத்தை மைக்கேல் ஜாக்ஸனிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் Je suis malade (I am sick). இந்த je என்ற வார்த்தையைத் தமிழில் எழுதுவது கடினம். ‘ஜ’வுக்கும் ‘ழ’வுக்கும் இடையே வரும் ஒலி. எழுத முடியாது. லாரா உச்சரிப்பதைப் பாருங்கள். தமிழில் உள்ள ‘ழ’ போல் வேறு எந்த மொழியிலும் இல்லை. அது போல் ஃப்ரெஞ்சின் je (நான்). … Read more
சிம்பு, அநிருத் இருவரின் செயலில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சினிமா ஹீரோ என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; கேட்க நாதி இல்லை என்ற அவர்கள் இருவருடைய திமிர் தான். பொதுவெளியில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனத்தை என் வாழ்நாளில் கண்டதில்லை. அயோக்கியத்தனம் செய்பவன் கொஞ்சம் ஒளிந்து கொண்டு, அடையாளம் தெரியாமல் செய்வான். ஆனால் இங்கே சினிமா ஹீரோ பொதுவெளியில் செய்கிறார். என்னுடைய மிக முக்கியமான ஆட்சேபணை எல்லாம், குழந்தைகளைப் பாழடிக்க இந்த ஆட்கள் யார்? … Read more
சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன். பிறகு நீண்ட நேரம் யோசித்தேன். ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன். ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான். இந்தப் பாடலுக்குப் பெயர் Beep Song. சினிமா வசனத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான். சிம்பு அந்தக் கெட்ட வார்த்தையைப் … Read more
வெள்ளத்தின் காரணமாக ஜனவரி ஒன்பதாம் தேதி நடக்க இருந்த என்னுடைய புத்தக வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27-க்கு ஒத்திப் போடப்படுகிறது. இனி இதில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே ஜனவரி 9-க்கு டிக்கட் முன்பதிவு செய்திருந்த நண்பர்கள் உடனடியாக மாற்றம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். ஃபெப்ருவரி 27 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு விழா பாரி முனை டெண்ட்டல் காலேஜுக்கு அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும். மனுஷ்ய புத்திரன், சமஸ், எடிட்டர் லெனின் … Read more