அவந்திகாவுக்கு ஒரு பரிசு

செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் என் வீட்டில் ஆன்மீக வகுப்பு நடக்கும்.  இருபது பேர் வருவார்கள்.  மனிதர்கள் மாறி மாறி வருவார்கள்.  சினிமா தயாரிப்பாளரிலிருந்து ஆட்டோ ஓட்டுநர் வரை.  சமயங்களில் கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து என்னை ஆச்சரியப்படுத்துவார்கள்.  இன்றுதான் அவந்திகாவின் பிறந்த நாள் என்றாலும் நேற்றைய ஆன்மீக வகுப்பை முன்னிட்டி நேற்றே கேக் வாங்கிக் கொடுத்து விட்டேன்.  பத்மஸ்ரீ என்ற கடையில் கேக் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.  அது போன்ற கேக் ஐரோப்பாவில்தான் கிடைக்கும்.  சிஐடி நகரில் … Read more

Brilinta 90 mg (சிறிய மாற்றத்துடன்…)

சென்னை வெள்ளம் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.  சென்னை முழுவதும் வெள்ளத்தில் மிதந்த போது – சில இடங்களில் ஐந்து அடி உயரத்தில் தண்ணீர், சில இடங்களில் பத்து அடி, சில இடங்களில் ஐம்பது அடி, அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளம் வரை வெள்ளம் – இப்படியாக இருந்த நாட்களில் மைலாப்பூரில் மக்கள் காலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.  என்னை நம்பவில்லை என்றால் மைலாப்பூர்வாசி யாரையாவது கேளுங்கள்.  காய்கறிக்கார அம்மாள் வந்தார். … Read more

கலை, கலகம், லும்பன்

பிரபல பத்திரிகைகளில் பொதுவாக என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தர மாட்டார்கள்.  ஆனால் சிம்பு அநிருத் பற்றிய கட்டுரையில் அந்த விபரம் இருந்தது.  நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்திருந்தன. ஆச்சரியமாக இருந்தது.  இன்னொரு ஆச்சரியம், அந்த நூறு பேரில் ஒருவர் கூட என் எழுத்தைப் படித்தவர் இல்லை.  தயவுசெய்து நம்புங்கள்.  ஒருவருக்குக் கூட என் எழுத்து பரிச்சயமாக இல்லை.  நான் புனைகதைகள் மட்டும் அல்ல; கட்டுரைத் தொகுப்புகளே ஐம்பதுக்கு மேல் எழுதியிருப்பேன்.  அதெல்லாம் ஒருவருக்குத் தன் வாழ்வை மேலும் … Read more

சிம்பு அனிருத் – கார்ல் மேக்ஸ்

”என்னா **டைக்கு லவ் பண்றோம்” – கார்ல் மேக்ஸ் ஆங்கிலத்திலும் மற்றைய மொழிகளிலும் இதை விட ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு நிர்ப்பபப்டுகிற பாடல்களை எளிதாகக் கடந்துவிடும் நாம், தமிழில் அத்தகைய ஒரு பாடலைக் கேட்கிறபோது ஏன் துணுக்குறுகிறோம்? ஒரு பாடலைப் பாடலாக மட்டுமேக் கடக்க முடியாமல் ஏன் அச்சமடைகிறோம்? ஏனெனில் நம்மிடம் சினிமா என்பது நமது ரத்தத்தில் கலந்த ஒன்று. நமது சிந்தனை முறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அதன் வீச்சு உண்டு. நமது உடலின் ஒரு … Read more

திரும்பவும் கார்ல் மேக்ஸ் அக்குறும்பு…

இந்தக் கார்ல் மாக்ஸ் யாருங்க?  இவரோட பேக்ரவ்ண்ட் என்னா?  அநியாயத்துக்கு எளுதுறாரே?  ரொம்பப் பொறாமையா இருக்கே?  நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள எழுதி முடிச்சி போஸ்டிங்கும் போட்டுத் தொலைச்சிர்றாரே?  இவ்ரு எந்த ஊரு?  என்னா ஜாதி?  கம்யூனிஸ்டா?  ஆரெஸ்ஸெஸ்ஸா?  இல்லே, நடுவுலயா?  தீமூகாவா? ஆதீமூகாவா?   இல்ல, வேறயா?  ஒன்னுமே புரில.  ஆனா நான் யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள போஸ்டிங் போட்டுர்றாரு…   இப்போ பாருங்க இன்னோரு அக்குறும்பு.  அவுருதான்… கார்ல் மேக்ஸ்… அவரோட ஃபேஸ்புக் பேஜ்லேர்ந்து சுட்டது… குறுப்பு … Read more