மைலாப்பூரில் கூழ் கிடைக்குமா?

ஃபேஸ்புக்கில் சீனி ஒரு மதிய வேளையில் கூழ் குடித்தது பற்றி எழுதியிருந்தார். என்ன ஆச்சரியம், நான் ஒரு நான்கு தினங்களாக கூழ் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இருபது வயது வரை கோதுமை, கேழ்வரகு பற்றி எதுவுமே தெரியாது. பார்த்தது கூட இல்லை. கம்பு பற்றி கேள்வியே பட்டதில்லை. இருபது வயதுக்கு மேல்தான் காட்பாடி பக்கம் வந்த போது அங்கே கேழ்வரகு கூழ் குடிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நான் கூழுக்கு அடிமையாகி … Read more

பாராட்டும் திட்டும்

டியர் சாரு, ”நீங்கள் திட்டினால் திட்டு வாங்குபவர் அரிவாளால் தன் நெஞ்சைப் பிளந்து இதயத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு கதறுவார்கள்” என்று ஒருமுறை அராத்து நம்முடைய கலந்துரையாடலின்போது சொன்னார். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லாமல் மிகவும் மென்மையாகி விட்டீர்கள் என்றும் கூடவே சேர்த்துக்கொண்டார். ஆனால் இன்னொரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் யாரையாவது பாராட்டினால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. சாமியாரிலிருந்து ஆரம்பித்து ”இப்போது” வரை அதுதான் நடக்கிறது. இந்த விதியிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே ஒருவர் … Read more

வாசகர் வட்டம்

சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று இன்று யாரும் இல்லை. இப்போதைய பிரிவு, ஜனரஞ்சக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். அவ்வளவுதான். ஜனரஞ்சக எழுத்தாளருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளையும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் இப்போது அனுமதிக்கின்றன. லா.ச.ரா. மட்டும் வாழ்நாள் முழுக்கவும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதியவர். அவருக்கு ஜனரஞ்சகம் இடம் கொடுத்தது. அசோகமித்திரன் ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும் கணையாழி, தீபம் போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும் எழுதியவர். அவரையும் சிறுபத்திரிகை வட்டத்தில் குறுக்க முடியாது. சுந்தர ராமசாமி அப்படி இல்லை. தீவிர … Read more