சென்னை வாழ்க்கை
இந்தியாவிலேயே சென்னைதான் மனிதர்கள் வாழவே முடியாத நகரமாக மாறியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா என்று தெரியாது. நான் முப்பத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளாக இப்படித்தான் கதை. நான் எழுதப் போவது சென்னைவாசிகளுக்கும் சென்னைக்குக் குடியேறிய எழுத்தாள சிகாமணிகளுக்கும் பிடிக்காது. ஏனென்றால், அப்படி வந்த எழுத்தாளர்கள் ஏதோ சென்னையை ஒரு சொர்க்கலோகம் மாதிரி எழுதித் தள்ளுகிறார்கள். மைலாப்பூரில் ஒரு பிராமணர் (ஐயர்) முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். கர்னாடக இசை ஒலிக்கும். முகப்பில் மஹா பெரியவரின் பெரிய படம். … Read more