என் கையெழுத்தின் கட்டணம் 5000 ரூ. ஏன்?

1.திங்கள் கிழமை அன்று மாலை சரியாக ஆறரை மணிக்குக் கூட்டம் ஆரம்பித்து விடும்.  இந்த விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை.  முடியும் நேரம் எட்டரை என்று வைத்திருக்கிறோம்.  ஒருவேளை ஒன்பது ஆகலாம்.  ஒன்பதுக்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிகம் ஆகாது.  பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று நான் படாத அவஸ்தை பட்டிருக்கிறேன் என்பதால்தான் இந்தத் தீவிரமான முடிவு.  அது மட்டும் அல்லாமல் நேரம் தவறாமையை நான் ஒரு தீவிரவாதியைப் போல் என் வாழ்வில் கடைப்பிடித்து … Read more

ஜனவரி 5 : புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா

ஜனவரி 5 மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் புதிய எக்ஸைல் வெளியீட்டு விழாவைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக சென்னை நகர் எங்கும் ஐநூறு தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  இந்த அபாரமான பணியை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி.  படங்கள்:

புதிய எக்ஸைல் : ஜனவரி 5 : விளம்பரம்

ஜனவரி 5-ஆம் தேதி நடக்க இருக்கும் புதிய எக்ஸைல் வெளியீட்டு விழாவை பொதுமக்களுக்கு அறிவிக்கும் நிமித்தமாக காமராஜ் அரங்கில் நேற்று மிகப் பெரிய ஃப்லெக்ஸ் போர்ட் நிறுவப்பட்டுள்ளது.    இதை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.  குறிப்பாக, சுப்ரமணியன், நந்தா ப்ரதீப், பெரியார் சம்பந்தர், தர்ம சேனன்.

ஜனவரி 5 விழா: கலந்து கொள்ள முயல்கிறேன் : ஜெயமோகன்

ஜனவரி 5 விழாவுக்கு ஜெயமோகனை அழைத்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  அதற்கு ஜெயமோகன் எழுதிய கடிதமும் என் பதிலும்.  பொதுவாக நான் அந்தரங்கக் கடிதங்களை வெளியிடுவதில்லை என்றாலும் இது இலக்கியம் சார்ந்ததாக இருப்பதால் சற்றே எடிட் செய்து வெளியிடுகிறேன்; ஜெயமோகன் தவறாக நினைக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன்.  ஜனவரி 5 விழாவுக்கு எஸ்.ராமகிருஷ்ணனும், மனுஷ்ய புத்திரனும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.  எங்கள் நால்வரையும் ஒருசேரப் புகைப்படம் எடுத்தால் அந்தப் புகைப்படம் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து பல லட்சங்கள் … Read more