வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள் பற்றி (2)
ஒருவழியாக வராந்தாவில் நின்றபடி, தொலைவில் அல்லாடிக் கொண்டிருந்தவரை கண்டுபிடித்து அழைத்தேன். ராஜன், அறையின் உள்ளே நுழைந்ததும், முதலில் சாருவை அடையாளம் கண்டு கொண்டார். வந்தவருக்கு வயது ஐம்பதை நெருங்கியிருக்கும் என்று தோன்றியது. அவர் நிறை போதையில் இருந்தார். கையில் புகைந்து கொண்டிருத்த சிகரட்டில் புகையிலை மட்டுமில்லை. வேறு வஸ்துகளும் இருந்தன. “ஆமா சார்… கஞ்சா… அம்பது ரூவா வித்துக்கிட்டு இருந்தது… இங்கே ஐநூறு சொல்றான்” என்றார். தொடர்ந்து…“நான் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நண்பன். பதினைந்து வருடமாக அவருடன் எனக்கு … Read more