Crossword Book Awards…

Crossword Book Awards – Crossword.in Crossword Book Awards இந்தியாவில் மிகவும் கௌரவமான விருதாகக் கருதப்படுகிறது. இதன் குறிப்பிட்ட அம்சம் இதைத் தேர்ந்தெடுப்பது ஒரு குழு அல்ல, வாசகர்கள். இந்த விருதுக்கு இந்த ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு நூல்களுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb: A Novel தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் மேலே செல்ல வேண்டுமானால் நீங்கள் இதற்கு வாக்கு அளிக்க வேண்டும். அதற்கான விவரம் மேலே உள்ள இணைப்பில் உள்ளது. உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.

திரும்பி விட்டேன்…

இரண்டு வார ஜப்பானியப் பயணம் இனிதே முடிந்து நேற்று (24.10.2024) நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தேன். பொதுவாக என் தோற்றத்தின் காரணமாகவோ என்னவோ கஸ்டம்ஸில் என்னை வாட்டி எடுப்பார்கள். நேற்று அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை. ஜப்பான் ஒரு சில விஷயங்களில் மலிவாகவும் ஒரு சில விஷயங்களில் நம்ப முடியாத அளவுக்கு செலவு வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இப்போது ஆகியிருக்கும் செலவில் நான் இரண்டு வாரம் சீலே, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்திருக்க முடியும். சீலேயில் … Read more

வர்ண மேகங்களிடையே இருந்து… (நெடுங்கதை) மனுஷா ப்ரபானி திஸாநாயக்க சிங்களத்திலிருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

(ஒரு முன்குறிப்பு: மனுஷா ப்ரபானி திஸாநாயக்கவின் இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம். இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை … Read more

சான்றோர் சென்ற நெறி

அஞ்சல் துறையில் ஓய்வு ஊதியம் பெறுவதற்கு ஒரு ஏடிஎம் அட்டை கொடுத்திருக்கிறார்கள். அது இந்த அக்டோபருடன் முடிவுக்கு வருகிறது. அதைப் புதுப்பித்துக் கொள்வதற்காக நானும் அவந்திகாவும் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் சென்றோம். பொதுவாக நாங்கள் இருவருமே அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனென்றால், பார்க்கின்ற அத்தனை பேருமே “ஏன் இளைத்துப் போய் விட்டீர்கள், ஷுகரா?” என்று கேட்டு அதற்கு நாலாவிதமான மருத்துவமும் சொல்வார்கள். திரும்பி வரும்போது நம்மை ஒரு பிரேதமாகவே மாற்றித்தான் அனுப்புவார்கள். … Read more

தலைப்பிடப் படாத ஒரு குறுங்கதை: காயத்ரி. ஆர்

செப்டம்பர் 30,2024 சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு தூக்கக் கலக்கத்தில் தள்ளாட்டமாய் பால்கனியில் நின்று பார்த்தேன். பூனைக்குட்டி எதிர் அபார்ட்மெண்டில் இருக்கிறது போல. கியா கியாவென்று சத்தம் அதிகமாக இருந்தது. பல் தேய்த்துவிட்டு கீழிறங்கிப் பார்க்கலாம் என்று பேஸ்டை பிரஷ்ஷில் … Read more