பூச்சி 108

ஜெபமாலையில் 108 மணிகள் இருக்கும்.  108 இந்திய மரபில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்திய மரபு என்பது இந்து, பௌத்தம், சமணம்.  சித்தர் மரபில் அண்டமும் பிண்டமும் என்பார்கள் இல்லையா, அண்டம் உங்களுக்குத் தெரியும்.  பிரபஞ்சம்.  பிண்டம் சரீரம்.  அந்த சரீரத்தையும் பிரபஞ்சத்தையும் இணைப்பது சரீரத்தில் உள்ள 108 புள்ளிகள்.  வர்மம், மர்மம் என்றும் சொல்வார்கள்.  சித்தா மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் அடிப்படையும் இதுதான்.  சரீரத்தில் 108 புள்ளிகள் உள்ளன.  தலை முதல் கழுத்து வரை 25, … Read more

பூச்சி 107

மற்றவர்களுக்கெல்லாம் இதோடு நாலு மாதம் லாக் டவுன் என்றால் எனக்கு ஐந்து மாதம்.  கொரோனாவுக்கு முன்பே ஸிஸ்ஸிக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்து விட்டதால் ஒரு மாத காலம் ஸிஸ்ஸியை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்க வேண்டியதாகி விட்டது.  கதவைத் திறந்தாலே வெளியே பாய்ந்து விடும்.  வெளியே போனால் காயத்தில் தொற்று ஏற்பட்டு சீழ் பிடித்து பெரிய ரணகளமாகி விடும்.  திரும்பத் திரும்ப தையல் போடுவது ஆபத்து.  நண்பர்களை சந்தித்தே ஐந்து மாதம் ஆகிறது.  திடீரென்று இன்று … Read more

பாற்கடல்

ஆண்டன் செகாவ் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களை என் சக எழுத்தாளர்களும் வாசகர்களும் வியந்து வியந்து போற்றும் போது செகாவுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத – இன்னும் சொல்லப் போனால் – அவரிலும் மேம்பட்ட நம் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி யார் பேசுவார், எப்போது பேசுவார் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து போவது என் வழக்கம்.  பச்சைக் கனவு என்று ஒரு கதை.  ஜனனி என்று ஒரு கதை.  வேண்டப்படாதவர்கள் என்று ஒரு கதை.  லாசராவைப் போய் புரியாமல் எழுதுகிறார் … Read more

பூச்சி 106

இதுவரை எனக்கு எத்தனையோ பேர் உதவியிருக்கிறார்கள்.  உதவிக் கொண்டும் இருக்கிறார்கள்.  உங்களின் உதவியினால்தான் என் ஜீவனோபாயமே நடந்து கொண்டிருக்கிறது.  அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.  இந்த அளவுக்கு ஒரு வாசகர் குழு ஒரு எழுத்தாளனை வாழ வைக்குமா என்று உலக சரித்திரத்திலேயே பார்க்க இயலாது என்றுதான் நினைக்கிறேன்.  ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு எழுத்தாளர் – பெயர் மறந்து விட்டது, சீனி சொன்னார் – அவர் புத்தகத்தை அவரேதான் வெளியிடுவாராம்.  விலை என்று எதுவும் இல்லை.  நீங்கள் கொடுப்பதுதான்.  … Read more

பூச்சி 104

எதிர்மறையான விஷயங்களை எழுதக் கூடாது என்று நினைத்தாலும் நடப்பது பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன.  நண்பரைப் பற்றிப் பாராட்டி எழுதி ஈரம் காயவில்லை; அதற்குள் அவர் வைரமுத்து போற்றி எழுதிவிட்டார்.  இங்கே பிரச்சினையே என்னவென்றால், சிறு பத்திரிகைகளில் 22 வயது இளைஞர்கள் முதல் சிறுகதை எழுதுவார்கள்.  அவர்களது பயிற்சி, புதுமைப்பித்தன், செல்லப்பா, க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், ஆதவன் என்று தொடங்கி வந்திருக்கும். இந்த முன்னோடிகளிடமிருந்து கற்ற பிறகு … Read more