5. தயிர்வடை சென்ஸிபிலிட்டி குறித்து அராத்து & அராத்துவுக்கு பதில்

பின்வருவது அராத்துவின் கட்டுரை: “அவர் மட்டும் அல்ல.  தி.ஜானகிராமன், சி.சு. செல்லப்பா, க.நா.சு.,  ந. சிதம்பர சுப்ரமணியன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்ற சென்ற தலைமுறையின் பிராமண எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்திலுமே பிராமண அழகியலை நீங்கள் காண முடியாது.” – சாரு நிவேதிதா. இந்த இடத்தில் நான் சாருவிடம் இருந்து மாறுபடுகிறேன். பிராமண எழுத்தாளர்கள் என்றில்லை. தமிழில் எழுதிக்கொண்டிருந்த மற்றும் தற்போது  எழுதிக்கொண்டிருக்கும்  பெரும்பாலான எழுத்தாளார்கள் பிராமண அழகியல் என்று சாரு சொல்லும் தன்மையோடுதான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். என்ன? … Read more

கிரேக்க வாழ்க்கை

கோரா தளத்தில் இதைப் படித்தேன். உங்களோடு பகிராமல் இருக்க முடியவில்லை. எழுதியவர் Debbie Todd. இதைப் படித்தபோது கிரேக்கத்தின் கிராமப்புறங்களில் சில மாதங்கள் சுற்ற வேண்டும் என்று தோன்றியது. இதேபோல் தமிழக கிராமங்கள் பற்றி எழுத முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். வாய்ப்பே இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்றால் முடிந்திருக்கும். இப்போது முடியாது. காரணம், தமிழ்நாடு தன் ஆன்மாவை இழந்து போய் வெகு காலம் ஆகிறது. Q: How is Greece able to maintain … Read more

இன்று மாலைக்குள் ஒரு இலக்கிய அறிக்கை

இலக்கியம் பற்றிய என் அணுகுமுறை என்ன? இலக்கியத்தில் என் அடிப்படைகள் என்ன? – இந்த விஷயங்களைப் பற்றி இன்று எழுதப் போகிறேன். இது தயிர்வடை சென்ஸிபிலிட்டி அல்லது பிராமண அழகியல் என்ற என் கட்டுரைக்கு அராத்து எழுதியிருந்த எதிர்வினைக்கு பதிலாக அமையும். மாலைக்குள் முடித்து விடுவேன். இன்னொரு விஷயம். இந்தத் தளத்தை குறைந்த பட்சம் 8000 பேர் அதிக பட்சம் 10000 பேர் படிக்கிறார்கள். அவர்களில் 45 பேர்தான் சந்தாத் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். 35 பேர் முந்நூறு … Read more

4. கல்லறையிலே உறங்கும் மனிதனைப் போல் இரு…

4. நான்தான் ஔரங்ஸேப்… நாவலை பிஞ்ஜ் என்ற இணையதளத்துக்காக எழுதியபோது சில புதிய விஷயங்களை அனுபவம் கொண்டேன்.  ஆரம்பத்தில் வாரம் இரண்டு முறை என்ற கணக்கில் அத்தியாயங்கள் வெளிவந்தன.  ஆனால் சில தினங்களிலேயே வாசகர்கள் வாரம் மூன்று முறை வேண்டும் என்று கேட்டார்கள்.  அதனால் ஒன்று விட்டு ஒருநாள் என்ற கணக்கில் அத்தியாயங்களைக் கொடுக்க ஆரம்பித்தேன்.  ஒரு அத்தியாயம் சுமார் 1400 வார்த்தைகள்.  ஒரு அத்தியாயத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் தந்தார்கள்.  அந்தப் பணத்தில்தான் அவ்ட்ஸைடர் ஆவணப்படம் எடுத்தது.  … Read more

3. திருவண்ணாமலையில் நடந்த ஒரு கடத்தல் கதை

இதை எழுதலாமா வேண்டாமா என்று கொஞ்சம் தயங்கினேன்.  ஆனால் எப்போதும் எதற்கும் தயங்காமல் எழுதும் நான் இப்போது என் நண்பர்களுக்காகத் தயங்குதல் தவறென எண்ணி இதை எழுதத் துணிந்தேன்.  தயங்கியதற்குக் காரணம், என் நண்பர்களின் மனம் புண்பட்டுவிடலாகாதே என்பதுதான்.  இதை என் நண்பரிடம் தொலைபேசியிலேயே சொல்லியிருக்கலாம்.  ஆனால் எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஏனென்றால், அடுத்தவரை எக்காரணம் கொண்டும் இம்சிக்கக் கூடாது என்பதே என் மதம்.  என் நம்பிக்கை.  என் கொள்கை.  என் வாசகர்கள் அத்தனை … Read more

2. குருவுக்கு வணக்கம்!

மாதா பிதா குரு தெய்வம் என்பது மூத்தோர் வாக்கு.  ஒரு குழந்தையை மனிதனாக மாற்றுவது மாதா பிதாவின் கடமை.  அதனால் அவர்கள் முன்னால் நிற்கிறார்கள்.  அடுத்தது குரு.  அதுவும் தெய்வத்துக்கு முன்னதாக.  அப்படியானால் குரு தெய்வத்தை விட முக்கியமானவரா?  அல்ல.  மாதா பிதாவினால் மனிதனாக உருவாக்கப்பட்ட ஒரு வியக்திக்கு தெய்வத்தை அடையாளம் காண்பிப்பவர் குரு.  தெய்வத்தை நோக்கி அந்த மனிதனை இட்டுச் செல்லும் பாதையையும் வழிமுறைகளையும் கற்பிப்பவர் குரு. இங்கே தெய்வம் என்பதை நீங்கள் பின்நவீனத்துவ காலகட்டத்தின் … Read more