ஒரு சிறிய திட்டத்தில் ஒரு மிகச் சிறிய மாற்றம்

பல நண்பர்கள் தினம் பத்து ரூபாய் அனுப்புவதற்குப் பதிலாக மாதம் 300 ரூ. குறைந்த பட்ச நன்கொடை என்று வைத்தால் அனுப்புவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அதனால் தினமும் பத்து ரூபாய் அனுப்ப வேண்டாம். மாதம் 300 ரூ. என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு குறைந்த பட்ச நன்கொடைதான். அதிகப்படுத்திக்கொள்வது உங்கள் விருப்பமும் உங்களுடைய சாத்தியத்தையும் பொருத்தது. ஜீபே செய்வதற்கான எண்: 92457 35566 ஜீபே எண்ணில் உள்ள பெயர்: ராஜா வங்கி … Read more

ஒரு சிறிய திட்டம்

பொதுவாக லௌகீக விஷயங்களில் நான் சீனியிடம்தான் யோசனை கேட்பேன். தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் அதன்படி செய்வேன். காரியம் வெற்றிகரமாக நடக்கும். சில அரிய சந்தர்ப்பங்களில் அவர் யோசனையைக் கேட்பதில்லை. அப்போதும் காரியம் வெற்றிகரமாக நடக்கும். ஒருவேளை அந்த விஷயத்தில் அவர் யோசனையைக் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எனக்குக் குறுகுறுப்பாக இருக்கும். லௌகீக விஷயங்களில் மற்றபடி நான் யார் யோசனையையும் பேச்சையும் கேட்பதில்லை. இன்னொரு நண்பர் இருக்கிறார். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு செய்திருப்பேன். அந்த … Read more

மதிப்பீடுகளின் வீழ்ச்சி: கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி

கமல்ஹாசனும் ஜெயமோகனும் ஹிந்து பத்திரிகைக்காக உரையாடிய ஒளிப்பதிவைப் பார்த்தேன்.  In conversation with actor Kamal Haasan and writer Jeyamohan என்பதுதான் அந்த உரையாடலின் தலைப்பு.  முதலில் இந்தத் தலைப்பே அருவருப்பானது, எழுத்தாளனை அசிங்கப்படுத்துவது.  ஏன்? நடிகர்கள் என்ன இருந்தாலும் கேளிக்கையாளர்கள்தான் (entertainers).  ஆனால் எழுத்தாளர்கள் அப்படி அல்ல.  நிரூபணங்கள் நிறைய உண்டு.  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாகவதர்.  அவர் எப்படி வாழ்ந்தார் என்பது வரலாறு.  தங்கத் தட்டில் சாப்பிட்டவர்.  அவர் … Read more

தயிர்வடை சென்ஸிபிலிட்டி

இப்போது நான் எழுதப் போவது ஒரு கணித விளையாட்டைப் போன்றது.  சென்னையில் உள்ள பிஹெச்.டி. ஆய்வு செய்யும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், அதில் தலித் இலக்கியத்தை ஆய்வு செய்பவர்கள் பத்து பேர் என்று வைத்துக் கொள்வோம்.  அதில் ஒன்பது பேர் பிராமணராக இருப்பார்கள்.  அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  இது போன்ற ஒரு எண் ஆராய்ச்சி விளையாட்டைத்தான் இப்போது எழுதப் போகிறேன்.  இது நான் கண்ட உண்மை.  நான் கண்ட எதார்த்தம்.  நான் கண்ட அந்த எதார்த்தம் … Read more

உலகத் திரைப்படம் எடுப்பது எப்படி?

அன்புள்ள சாரு, நான் நந்தகுமார்.  உங்களின் சமீபத்திய வாசகன்.  ஜூன் 30 அன்று திருவண்ணாமலையில் நடந்த உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றவன்.  சுமார் ஒன்பது மணி நேரம் நீங்கள் நிகழ்த்திய உரை, நீங்கள் காண்பித்த திரைப்படங்கள் எல்லாமுமே எனக்குப் பெரும் திறப்பை அளித்தன.  அதற்கு நான் செலுத்திய கட்டணம் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் எனக்கு ஒரு குறை உண்டு.  அதைச் சொன்னால் நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்பதால் … Read more

வனத்தில் சில இரவுகள்

திருவண்ணாமலையில் ஜூன் முப்பதாம் தேதி உலக சினிமா பயிலரங்கை முடித்துவிட்டு மறுநாள் நானும் சீனியும் ராஜா வெங்கடேஷும் அந்த வனத்தை நோக்கிக் கிளம்பினோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அந்த அடர்ந்த வனம். பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதை அரசாங்கமே சுற்றுலாப் பயணிகளின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சீனியும் ராஜாவும் மாற்றி மாற்றி கார் ஓட்டினார்கள். வழியில் கறி விருந்துக் கடைகள் நிறைய இருந்தன. உணவு உலகத் தரம். இங்கே சென்னையில் ஈரல் வறுவல் என்று கேட்டால் … Read more