பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 3)

‘சா. கந்தசாமியின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் உலகத் தரமான சிறுகதைகள் 1872 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வாழ்க்கையை மிகுந்த கலையம்சத்துடன் பதிவு செய்தத் தமிழ் எழுத்தாளர்களில் முதல் வரிசையில் வர வேண்டியவர் சா. கந்தசாமி. அதற்கு ‘சாயாவனம்’ நாவலும் ‘உயிர்கள்’, ‘பாய்ச்சல்’ போன்ற சிறுகதைகளுமே சாட்சி. ஆனாலும் அதிகம் பேசப்படாதவராக, அதிகம் கொண்டாடப்படாதவராக இருக்கிறார். மேலும் படிக்க: http://bit.ly/2a80kGG

ஒரு அறிவிப்பு

இன்று நடக்கவிருந்த ஆத்மார்த்தி புத்தகங்கள் விமர்சனக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப் படும். – ஸ்ரீராம்  

பழுப்பு நிறப் பக்ககங்கள்: சா. கந்தசாமி (பகுதி 2)

“புளிய மரத்தடியில் பத்துக்குத்து ஆடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தபோது சார் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். மனம் திக்கென்றது. அப்பீட் எடுக்கவில்லை. சாட்டையைப் பையில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு ‘சார்’ என்றான்.” இந்த இரண்டு வாக்கியங்களில் இன்றைய வாழ்வில் காணாமல் போய் விட்ட பத்துக்குத்து, அப்பீட், சாட்டை என்ற மூன்று வார்த்தைகள் உள்ளன. இப்படியே கந்தசாமியின் அத்தனை எழுத்துக்களிலும் தேடி ஒரு தனி அகராதியையே உருவாக்கலாம். ஆக, இப்படிப்பட்ட கலைஞர்களின் மூலம்தான் ஒரு மொழி நூற்றாண்டுகளைத் தாண்டி … Read more