விநாயகர் சதுர்த்தியும் புத்திஜீவிகளும்… (2)

அபிலாஷ் என் நெருங்கிய நண்பர். பிரச்சினை என்னவென்றால், எந்த இடத்தில் என்ன பேசுவது என்று தெரியாது. ஒரு ஹிந்துப் பண்டிகை தினத்திலா இதைப் போய் பேசுவது? அதுவும் நாடு இப்போது இருக்கும் நிலையில்? பண்டிகை என்பது கொண்டாடுவதற்குத்தானே? நான் காலையிலிருந்து கொழுக்கட்டை சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அங்கே வந்து ரகளை செஞ்சால் நான் எப்படி இனிக்க இனிக்கக் கொழுக்கட்டை சாப்பிடுவது? சரி, பகுத்தறிவுவாதிகளே, நீங்கள் எப்போது கொழுக்கட்டை தருவீர்கள்? கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்திலா?

மஞ்சள் விநாயகர்

மனிதனின் கற்பனை உச்சங்களில் ஒன்று, விநாயகர். எப்போதும் போல் நேற்று இரவும் பத்து மணிக்கு நான் உறங்கப் போய் விட்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கும் அவந்திகாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்து பார்த்தால் ஹாலில் இந்த மஞ்சள் விநாயகர். எங்கள் வீட்டில் இரண்டு பால்கனிகள் உள்ளன. ஒன்றில் பூச்செடிகள். இன்னொன்றில் மூலிகை. என்னவோ தெரியவில்லை, காய்கறிகளே வருவதில்லை. பூந்தோட்டத்தில் பறித்தது அந்த இரண்டு பூக்களும். கண்கள் என்ன என்றேன். மிளகு என்றாள்.

நான்தான் ஔரங்கசீப் – பாபர் உரை – ஶ்ரீராம்

சாரு ஒரு மாதத்திற்கு முன் நான்தான் ஒளரங்கசீப் நாவலில் வரும் பாபரின் உரையை அனுப்பியிருந்தார். முகநூலிலும் பாபரின் உரையை பற்றி இவ்வாறு எழுதியிருத்தார்: “மார்ட்டின் லூதர் கிங்கின் எனக்கொரு கனவு இருந்தது, லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, நெல்ஸன் மண்டேலாவின் நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன், சர்ச்சிலின் we shall fight on the beaches ஆகிய பேச்சுக்களை விஞ்ச வேண்டும் என்று எண்ணினேன். இதையெல்லாம் விட 1095-இல் போப் அர்பன் – 2 பேசிய உணர்ச்சிகரமான பேச்சை … Read more