ஸ்மாஷன் தாரா: முன் வெளியீட்டுத் திட்டம்

ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புகை நடனமாக மேக உருவுகளின் ஓயாத சலன இசையாக வெளிப்படுகின்றன. காலம் ஒரு நீர்க்கடிகாரமாய் மழையாகவும் ஆவியாகவும் வானத்திற்கும் பூமிக்குமாக பொழிவதும் பறப்பதுமாக சாருவின் கவிதைகளில் இயங்குகிறது. இது வாழ்வின் … Read more

சாருவின் புத்தம் புதிய கவிதை
கனாவிலொரு பூனை
ஆத்மார்த்தியின் குரலில்…

கனாவிலொரு பூனை ஸ்னேகிதீ… உன்னைப் போலத்தான் நானும் மனிதர்களைக் காட்டிலும் பூனைகளையே அதிகம் நேசிக்கிறேன் ஆனால் பூனைகள் வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல் சிந்திக்கின்றன நடந்து கொள்கின்றன திடீர் திடீரென காணாமல் போய் திடீர் திடீரெனத் தோன்றும் புதிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன பூனைகளின் மனதில் என்ன இருக்கிறதென்று பூனைகளின் கடவுளுக்கே தெரியாது பூனைகளுக்கே தெரியுமா என்பதும் ஐயம்தான் சமயங்களில் மனம் மிக நொந்து பூனைகளே வேண்டாமென்று வாழ்ந்திருக்கிறேன் சிருஷ்டியின் வினோதம் பூனையின்றி வாழ்க்கையில்லை என்கிறது போ போ மீண்டும் … Read more

சந்தா/நன்கொடை செலுத்த

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான தொகையை சந்தாவாகச் செலுத்தலாம். நவீன தமிழிலக்கியம், உலக சினிமா, உலக இலக்கியம், அதிகம் கண்டுகொள்ளப்படாத டிரான்ஸ்கிரஸிவ் லிட்ரேச்சர், அரபி இலக்கியம், உலக அரசியல் என கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தளம் உலகத் தமிழர்களுக்கு வழங்கியது ஏராளம். ஒரு பல்கலைக் கழகம் அல்லது தமிழிலக்கிய ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பெரு அறிவுசார் துறைகள் செய்ய வேண்டியதை ஒற்றை ஆளாக சாரு நிவேதிதா செய்து வந்திருக்கிறார். கடந்த 25 … Read more