படித்ததில் பிடித்தது…

எனக்கு காங்கிரஸைப் பிடிக்காது.  ராகுல் காந்தியை அதை விடவும் பிடிக்காது.  வெறும் ஸ்டண்ட்.  வெத்து வேட்டு.  இந்தியா பற்றி ஒரு ஆட்டோக்காரருக்குப் புரிந்திருக்கும் அளவுக்குக் கூட ராகுலுக்குப் புரிந்திருக்காது என்பதே என் கருத்து.  ஒரு காலத்தில் ராகுல் பிரதம மந்திரியாக ஆனால் இந்தியாவுக்கு அது சாபம்.  இப்படியெல்லாம் நினைத்தாலும் ராகுலை அர்னாப் கோஸ்வாமி என்ற ஊடக ரவுடி பேட்டி எடுத்த போது அர்னாபின் உடல் மொழியும் திமிரும் அகங்காரமும் சகிக்க முடியாதபடி இருந்தது.  ஒருவருக்குப் பேசத் தெரியவில்லை … Read more

அர்னாப் கோஸ்வாமி என்ற ஊடக தாதா…

அர்னாப் கோஸ்வாமி என்ற ஊடக தாதா பற்றி நிறையவே கேள்விப்பட்டேன்.  ராகுல் காந்தியை திணற அடித்தார், இத்யாதி, இத்யாதி.  பிறகு அவருடைய நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன்.  ரவுடித்தனத்தைத் தவிர வேறு எதுவுமே அதில் இல்லை.  பேச்சுத் திறமை இருந்தால் எவனையும் வீழ்த்தி விடலாம் என்ற திமிர் தான் அர்னாபிடம் காணக் கிடைத்தது.  என்னைப் போன்ற ஒரு ஆள் அந்த தாதாவிடம் மாட்டினால் மறுநாளே நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்னை வீழ்த்தி விடுவார் என்று தோன்றியது.  … Read more

பாலு மகேந்திரா பற்றி…

மறைந்த பாலு மகேந்திரா பற்றி என்னுடைய எண்ணங்களை எழுத வேண்டும் என்றால் ஒரு புத்தகமே எழுதலாம் போல் இருக்கிறது.  இவ்வளவுக்கும் ஒரே ஒரு முறைதான் அவருடைய பட்டறைக்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறேன்.  மற்ற சந்திப்புகள் சம்பிரதாயமாக புத்தக வெளியீட்டு விழாக்களிலும் ப்ரிவியூ காட்சிகளிலும் நடந்ததுதான்.  ஆனால் முடிந்தவரை அப்போதெல்லாம் அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்வேன்.  கடந்த ஒரு வாரமாக அவரைப் பற்றியே கனத்த இதயத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன்.  தலைமுறைகள் படத்தைப் பார்த்த பிறகு பாலு தான் … Read more

அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை: ஆழி செந்தில்நாதன்

அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை – (தமிழில்): ஆழி செந்தில்நாதன் அரசியல் பேச்சின் மாஸ்டர் பீஸ்! (ஆம் ஆத்மி பற்றிய எனது நூறாயிரம் சந்தேகங்களுக்கு அப்பால், இப்போதும் அவர்கள் மீது எந்த ஒரு அசாதாரண காதலும்கொள்ளாத நிலையிலும், அரவிந்த் கேஜ்ரிவால் மீது அப்படியொரு பெரிய நம்பிக்கை இல்லாதபோதிலும், இன்று தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது அவர் ஆற்றிய உரை சமீப கால அரசியல் வரலாற்றில் மிகவும் அற்புதமான ஒரு உரை என்றே கருதுவேன். அதனால் காதலர் … Read more