டி.எம். கிருஷ்ணா – 2

இன்னும் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. ரஞ்சனி, காயத்ரி இருவரும் பெரியார் பற்றிக் கூறிய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். பாப் பாடகர் பாப் டிலனுக்கு 2016இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவுக்கும் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் திட்டுபவர்களுக்கும் அவதூறு செய்பவர்களுக்கும் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. இதை என் விஷயத்திலேயே கவனித்து விட்டுத்தான் சொல்கிறேன். … Read more

டி.எம். கிருஷ்ணா

ஒரு மாதத்துக்கு முன்னால் ஒருநாள் வினித் ஒரு ஆடியோ பதிவைப் போட்டுக் காண்பித்தார்.  கர்னாடக இசை.  அந்தப் பாடகரின் குரலும் பாவமும் தீவிரமும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் மட்டுமே காணக் கூடியதாக இருந்தது.  யாரப்பா இது, இதுவரை நான் இவரைக் கேட்டதில்லையே, பூரணமான இறையருள் பெற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்றேன்.  சிரித்துக் கொண்டே அவருடைய இன்னொரு காணொலியைக் காண்பித்தார் வினித்.  இருபது வயது இளைஞன் ஒருவன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் துலங்க அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தான்.  பார்ப்பதற்கு … Read more