அற்புதம்

அஷோக் கோபால் தெ ப்ரிண்ட் பத்திரிகையில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அரூ பத்திரிகையில் அராத்து என்னைப் பற்றி எழுதியிருந்ததுதான் இதுவரை என்னைப் பற்றி வந்த கட்டுரைகளில் ஆகச் சிறந்தது என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  என் கருத்தும் அதுவே.  ஆனால் என்னை கடந்த ஒரு மாதமாக மட்டுமே அறிந்த ஒரு ஆங்கில எழுத்தாளர் என்னைப் பற்றி இத்தனை விரிவாக எழுதியிருந்தது கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன்.  நம்பவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இந்த … Read more

நாளை மதியம் ஒரு நேர்காணல்

நாளை மதியம் (ஃபெப்ருவரி 29) இரண்டு மணிக்கு ஒரு ஆடியோ நேர்காணல் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேட்கலாம். இதுவரை சொல்லாத விஷயங்களைப் பேசலாம் என்று இருக்கிறேன். லிங்க் கீழே: https://www.swellcast.com/charu_nivedita

தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஓர் உரையாடல்

தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர். கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி நேற்று ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அந்த உரையாடல் வரும் இருபத்தெட்டாம் … Read more