தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஓர் உரையாடல்

தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர்.

கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி நேற்று ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அந்த உரையாடல் வரும் இருபத்தெட்டாம் தேதி மாலை ஆறரை மணிக்கு வெளிவருகிறது. எல்லோரும் பார்க்கலாம். அதற்கான இணைப்பை கீழே தருகிறேன்.

இதுவரையிலான என் உரையாடலில் இது மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. எந்தத் தங்குதடையும் இல்லாமல் வெகு சரளமாகப் பேசியிருக்கிறேன். பாருங்கள்.