விசாகப்பட்டினத்தில் ’ராஸ லீலா’…

நண்பரும் வாசகருமான அருண்குமார் விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு சிறிய நூலகமும் ஒரு வாசகர் சங்கமும் உள்ளன. அங்கே மாதத்தில் இரண்டு முறை புத்தக மதிப்புரை தொடர்பான வாசகர் சந்திப்பு நடந்து வருகிறது. இதுவரை பதினோரு புத்தகங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். அந்த நூலகத்தின் உரிமையாளர் ஹரி இந்த முறை ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பற்றி மதிப்புரை செய்யலாமே என்கிறார். இதுவரை அங்கே ஆங்கிலம் மற்றும் தெலுங்கு நூல்கள் மட்டுமே மதிப்புரைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன.

சென்ற வாரம் நண்பர் அருண்குமார் ராஸ லீலாவை மதிப்புரை செய்திருக்கிறார்.

அந்த நூலக உரிமையாளருக்கும் அருண்குமாருக்கும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தெலுங்கு வாசகர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றியும். நிகழ்ச்சி குறித்த இரண்டு புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன். ராஸ லீலாவைத் தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதினேன். எழுதப்பட்ட நாவல் மலையாள வாரப் பத்திரிகை கலா கௌமுதியில் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்தது. இப்போது விசாகப்பட்டினத்தில் நூல் மதிப்புரைக் கூட்டம். தமிழ்நாட்டில் நடக்காதது வெளியில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. இதற்குக் காரணமாக அனைத்து நண்பர்களுக்கும் அருண்குமாருக்கும் என் நன்றி.