அ-காலம்

பின்வரும் பிஞ்ஜ் செயலியில் அ-காலம் என்ற தொடரை எழுதி வருகிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர்களே யாரும் அந்தத் தொடரைப் படிக்கவில்லை என்று தெரிந்தது. இன்னும் நானே படிக்கவில்லை. நான் எழுதியதை நான் கண் கொண்டும் பார்க்க மாட்டேன் என்றாலும் இந்த செயலி ஒரு புதிய தொழில்நுட்பம் என்பதால் சற்றே ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய ஐஃபோனில் இந்த செயலி இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. ஆனால் ஆண்ட்ராய்ட் போனில் இந்தச் செயலி வருகிறது. ஸ்ரீராம் படித்து விட்டார். அவரைத் தவிர வேறு யாரும் படித்ததாகத் தெரியவில்லை. மிகவும் சிரமம் எடுத்து எழுதிக் கொண்டிருக்கும் தொடர் இது. இதற்காக சில பல புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது. அதனால் 1000 வார்த்தைகளை எழுத இரண்டு தினங்கள் எடுக்கின்றன.

என் நண்பனை அழைத்து நான் அறிந்த நான்கு எழுத்தாளர்களையும் (அதில் நானும் ஒருத்தன்) எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்த்து சொல்லச் சொன்னேன். எண்ணிக்கை disgusting ஆக இருந்தது. என்னுடையதை மட்டும் சொல்லவில்லை. மொத்தமாகவே வேதனைக்குரியதுதான். இலவசமாகப் படிக்கக் கொடுத்தால் கூட இவ்வளவுதானா என ஆயாசமாக இருந்தது. என்னதான் ஐஃபோனில் வரவில்லை என்றாலும் இத்தனை கம்மியாகவா படிக்கிறார்கள் என்ற ஆச்சரியம் நீண்ட காலம் நீடிக்கும். ஆனால் யூட்யூபில் பேசினால் ஒரே இரவில் 3000 பேர் பார்த்து விடுகிறார்கள். இனிமேல் எழுத்தை விட பேச்சுக்குத்தான் மதிப்பு போல. ஜக்கி ஞாபகம் வருகிறது…

https://bynge.onelink.me/JzET/3c32fcd