கலையின் பண்பு பரிச்சய நீக்கம் (defamiliarise) செய்வதே! – அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ் எழுதியுள்ள “பேசாப்பொருளை பேசத்துணிந்தேன் “என்ற புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் அபூர்வமான கட்டுரை இது. சற்றே நீண்ட கட்டுரைதான். ஆனாலும் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. முக்கியமாக எல்லாவற்றையும் ரொமாண்டிஸைஸ் செய்வதும், “துலாபாரத்” துன்பங்களும் தற்காலத் தமிழிலக்கியத்தில் ப்ரீ மெச்சூர் எஜாக்குலேஷனாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தக் கட்டுரை மிக முக்கியமானதாக ஆகிறது. புதிதாக எழுத வருபவர்கள், ஏற்கனவே எழுதிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அவசியம் நேரம் எடுத்து வாசிக்க வேண்டிய கட்டுரை. அ.மார்க்ஸை தற்கால இளைஞர்களுக்கு ஒரு கட்டுரையாளராகவும் களப்போராளியாகவும்தான் ஓரளவுக்குத் தெரியும். அவர் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசிப்பாளராகவும், விமர்சகராவும் இருந்திருக்கிறார் என்பது தெரியாது. எனக்கே சாரு சொல்லித்தான் தெரியும். அந்த வகையில் அ.மார்க்ஸ் ஒரு அபூர்வ காம்போ.

இந்தக் கட்டுரையைப் படித்ததன் மூலம் இனி நானும் என்னுடைய கடந்த கால தவறுகளைச் செய்ய மாட்டேன் ! – அராத்து

***

அ. மார்க்ஸ் எனது ஆசான்களில் ஒருவர். இலக்கியம் மற்றும் கலை சார்ந்த துறைகளையும் தாண்டி என்னை இட்டுச் சென்றவர்களில் முதன்மையானவர். எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், என்னுடைய வேறு சில ஆசான்களுடன் என்னால் இரண்டு நிமிடம் கூடப் பேச முடியவில்லை. கிழடு தட்டிப் போயிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என். நாகராசன் என்ற பேரறிஞருடன் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கும் எனக்கும் அடிதடி அளவுக்குப் போய், மார்க்ஸ்தான் விலக்கி விட்டார். அடிதடி அளவுக்குப் போனதற்குக் காரணம், நாகராசன் என் குடும்பத்தை இழுத்துப் பேசியதுதான். அந்த வார்த்தைகள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன. நாகராசன் சொன்னார்: ”முதல்ல உம் பொண்டாட்டியத் திருத்துய்யா, அப்றமா வா சபைக்கு…” இந்த வாக்கியத்தில் உள்ள ஆணாதிக்கத் தடித்தனத்தைப் பாருங்கள். என் மனைவியை நான் திருத்த வேண்டுமாம்.

அந்த நாகராசன் இன்றளவும் ஒரு இம்மி மாறாமல் அப்படியேதான் இருந்தார். தமிழவன் என் ஆரம்பக்கால ஆசிரியர். ஆனால் இன்று அவரோடு பேசினால் ஒரு ஜாய்ண்ட் செக்ட்ரியோடு (அப்படித்தான் நார்த்தில் உச்சரிப்பார்கள்!) பேசுவது போல் இருக்கிறது. டை ஒன்றுதான் குறைச்சல். ஆனால் அ. மார்க்ஸோடு பேசும் போது மட்டும்தான் அதே போல் – நிறப்பிரிகை நாட்களைப் போலவே இருக்கிறது. அதே கிண்டல், அதே நக்கல், அதே குடி, அதே நிதானம், அதே பாசம், அதே தழுதழுப்பு, அதே சாந்தம்… எல்லாம் அதே. அராத்து குறிப்பிடும் அந்தக் கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறேன். இப்போது தமிழில் நாவல் என்று வெளிவரும் பல பிரதிகளை என்னால் பத்துப் பக்கத்துக்கு மேல் புரட்ட முடியவில்லை. காரணம், எல்லாமே அரதப் பழசாக உள்ளன. சொல்முறை, மொழி, வாழ்வு குறித்த பார்வை எல்லாமே அரதப் பழசு. அரதப் பழசு என்பது கூட தவறு. ஏனென்றால், ஜீவனாம்சம் என்ற அரதப் பழசான விஷயத்தை உலகத் தரமான நாவலாக செல்லப்பா எழுதியிருக்கிறாரே? தஞ்சை ப்ரகாஷ், எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், க.நா.சு., செல்லப்பா, கரிச்சான் குஞ்சு, அசோகமித்திரன், ஆதவன் என்று பழைய ஆட்கள் எல்லோருமே நாவலில் அதகளம் பண்ணினார்களே? இப்போது ஏன் படிக்கவே முடியவில்லை?

அதற்கான பதிலை மிலன் குந்தேரா சொல்கிறார். அதை அ. மார்க்ஸ் இங்கே விளக்குகிறார். வழக்கம் போல் இது பற்றி ஒரு கடிதம் கூடப் போடாதீர்கள். அதுதான் அ.மா.வுக்கும் எனக்குமான மரியாதை!!!

***

“அன்றாட வாழ்வின் சுவையற்ற பழகிப்போன நடைமுறைகள் இந்த உலக வாழ்வின், மனித இருப்பின் அதிசயங்களைக் கண்டு வியக்கும் ஆற்றலை நம்மிடமிருந்து வடித்தெடுத்து விடுகின்றது. எனவே கலையின் பண்பு இத்தகைய பரிச்சய உணர்வை போக்குவதே; பரிச்சய நீக்கம்(Defamiliaristion)செய்வதே.”———

“ஆக, புதிதாக எதையும் சொல்லாத ஒன்று ” புதினமாக இருக்க இயலாது. புதிதாகச் சொல்ல இயலாதவை தோற்றுப் போனவை. தோற்றுப் போனவைகட்குக் கலை இலக்கிய வரலாற்றில் இடமில்லை.” ———-

முழு கட்டுரையையும் வாசிக்க ….

மிலன் குந்தேராவின் புதிய Non-fiction நூல் குறித்த விமர்சனங்களைப் படித்துவிட்டு நண்பர் ராஜகோபாலனிடம் பேசிக் கொண்டிருந்தேன். சென்னைப் புத்தகக் கடைகளுக்கு அந்நூல் வந்தவுடன் வாங்கிப் பரிசளித்தார். எனினும் சில வாரங்களுக்கு முன்னர் தான் அதைப் படிக்க வாய்த்தது. கவிஞர் கலாப்ரியா ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடத்துகிற இலக்கியச் சந்திப்பில் இம்முறை “உலக மயமும் தமிழ்ப் புனைவுகளும்” என்பது போன்ற தலைப்பில் என்னை பேசுமாறு கேட்டிருந்தார். ரொம்பவும் தனிப்பட்ட ஒரு காரணத்தால் என்னால் அந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. எனினும் அக்கட்டுரைத் தயாரிப்பிற்க்கா நான் புதிதாய் வந்திருந்த சில புதினங்களையும் சிறுகதைகளையும் வாசித்து கொண்டிருந்தபோது தான் குந்தேராவின் ‘மூடுதிரை’ என்னும் நூலையும் புரட்டினேன்.சுமார் இருபது ஆண்டுகட்கு முன்பு வந்த அவருடைய முதல் கட்டுரை ‘The art of the novel’ ஓரளவு தமிழ்ச்சூழலில் பிரசித்தம். இரண்டாவது ‘Testaments Betrayed’ இங்கே அவ்வுளவு பரிச்சியமில்லை. நானும் படித்ததில்லை. இம்மூன்றாம் நூல் ஒரு குறிப்பிட்ட அளவு அவரது முதல் நூலில் முன் வைக்கப்பட்ட சில இருத்தாக்கங்களுக்கு மேலும் அழுத்தத்தைத் தருவதாக அமைந்துள்ளது. அழகியல் தொடர்பான கட்டுரை ஒன்றை ஒரு விமர்சகர் எழுதுவதற்கும் புனைவு எழுத்தாளர் எழுதுவதற்குமான வேறுபாட்டிற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு குந்தேரா. புனைவு வகைப்பட்ட, வகைப்படாத – எவ்விதமான எழுத்தாயினும் குந்தேராவின் தனிப் பண்பு அவரின் எளிமை(unbearable lightness). ‘உண்மையைப் போல் எளிமையானது’ என்பது ஒரு தேய்ந்து போன வசனம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் இங்கே அதைப் பயன்படுத்தியிருக்கலாம்.குந்தேராவின் புதிய கட்டுரை சொல்லுகிற செய்தி மேலோட்டமாகப் பார்த்தால் ரொம்பச் சாதாரணமானதுதான். ஆனால் முக்கியமானது, நமது சிந்தனைக்குரியது, நமது சூழலுக்குப் பொருத்திப் பார்க்க மிகவும் தகுதியானது. ‘The Curtain’ என்பதை மூடுதிரை என மொழியாக்கியுள்ளேன். வெறும் திரை என்றால் screen என்கிற பொருள் வந்துவிடக்கூடாது என்பதற்காக.லே மிலன் குந்தேரா(1929) செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர். கீழைத் தேசத்தைச் சேராத எல்லா எழுத்தாளர்களையும் ஒட்டு மொத்தமாய் மேற்கத்திய எழுத்தாளர்கள் எனப் பார்ப்பதுதான் நமது வழக்கம். எனினும் ரஷிய எழுத்துக்கள் குறித்த பரிச்சியமும், அவற்றைத் தனியே பிரித்துப் பார்க்கும் பிரக்ஞையும் நமக்கு நீண்ட காலமாக உண்டு. சென்ற இரு பத்தாண்டுகளில் லத்தீன் அமெரிக்கக் கதைகளைத் தனித்து அணுகும் உணர்வு நமக்குச் சிறு பத்திரிக்கைகளின் ஊடாக வாய்த்தது. எனினும் மத்திய ஐரோப்பிய எழுத்துக்களை இவ்வாறு பொதுப் போக்கிலிருந்து விலக்கி , அவற்றின் தனித்துவத்துடன் அணுகும் போக்கு இங்கே உருப்பெறவில்லை. மத்திய ஐரோப்பாவின் மிக முக்கிய எழுத்தாளரான கஃப்கா கூட இங்கே ஒரு ஜெர்மான் மொழி எழுத்தாளராகவே அறிமுகமாகியுள்ளார்.பல சிறு தேசங்களின் தொகுப்பாக ரஷ்யா, ஜெர்மனி என்கிற இரு பெரும் தேசங்களுக்கு நடுவே சிக்கிக் கிடந்த மத்திய ஐரோப்பாவின் சென்ற நூற்றாண்டின் வரலாறு அம்மக்களுக்கு அத்தனை உவப்பாக இருந்ததில்லை.சிறு தேசங்களைப் பெரும் தேசங்களிலிருந்து வேறுபடுத்துவது வெறும் மக்கள் தொகை எண்ணிக்கை மட்டுமல்ல என்பார் குந்தேரா. அது இன்னும் ஆழமானது. அவர்களின் இருப்பு ஐய்யத்திற்கிடமற்ற ஒன்று அல்ல. எப்போதும் அது ஒரு பிரச்சனையாகவே அமையும். வரலாற்றோட்டத்திற்கு எதிராக எப்போதும் தற்காப்பு நிலையிலேயே இருந்தாக வேண்டிய நிலையில் அம்மக்கள் இருப்பர். வரலாற்றின் இயங்கு கதி அவர்களை என்றும் பொருட்படுத்தத் தக்கவர்களாக மதித்ததில்லை. இந்த வரலாற்றோட்டத்தை எதிர்த்து நிற்பதன் மூலமே நாம் இன்றைய வரலாற்றை எதிர்ப்பது சாத்தியம் என்பார் மத்திய ஐரோப்பாவின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான விடோல்ட் கோம்ப்ரோவிக்ஸ். 1938ல் செக்கோஸ்லோவாக்கியாவின் தலைவிதியை நிர்ணயித்த மியூனிச் பேச்சுவார்த்தையை நினைவுகூர்ந்தார் குந்தேரா. இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு அது நினைவு இருக்கக் கூடும். தமது எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவும் கூட செக் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை. ஜெர்மனி, இத்தாலி, கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் நாட்டுத் தலைவர்கள் மட்டும் நீண்ட நேரம் விவாதித்தனர். இரவு முழுவதும் காத்திருந்த செக் பிரதிநிதிகள் இருவரும் அடுத்த நாள் காலை பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லேனும் பிரெஞ்சு பிரதமர் தலாடியரும் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொட்டாவி விட்டுக்கொண்டே “நாங்கள் அதிகம் அறிந்திராத அந்த தூர தேசத்தை எனத் தொடங்கி தொடங்கி எனத் தொடங்கி தொடங்கி தேசத்தை” எனத் தொடங்கி செக்கோஸ்லோவாக்கியாத் தியாகம் செய்ததை அறிவித்தார் சேம்பர்லேன். உலகப் போருக்குப் பின் சோவியத் அதிகாரத்தின் கீழ் வந்த அதன் மீது கட்டாயமாக சிவப்புச் சாயம் பூசப்பட்ட வரலாற்றையும் அம்மக்கள் எதிர்கொண்டு அடக்குமுறைகளையும் இங்கே விரிவாகச் சொல்லத் தேவையில்லை.போலந்து நாட்டின் தேசிய கீதத்தின் முதல் வரி இப்படித்தான் அமைந்துள்ளது: “போலந்து இன்னும் அழிந்துவிடவில்லை…” சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு செஸ்லா மிலோஸ்சுக்கு கோம்ப்ரோவிக்ஸ் எழுதிய கடிதவாசகமொன்று “இந்த நூறு ஆண்டுகளில் நமது மொழி இன்னும் உயிர் வாழ்கிறதென்றால்…”இம்மக்களுக்கான ஒரு தனித்துவமான வரலாறு இல்லாமலில்லை. அவர்களின் வேர்களைப் பைசாண்டியப் பழமையில் இனங்காண இயலும். எனினும் அவர்களின் மதம் (சனாதன கிறிஸ்தவம்), சிற்பக்கலை, எழுத்து வரி வடிவம் (கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்ட சிரிலிக்), ஏன் அவர்களுக்கே உரித்தான கம்யூனிசம் உட்பட அவர்களின் தனித்துவமான அடையாளங்கள் என்றும் அங்கீகரிக்கப்பட்டதில்லை. ‘கிழக்கு ஐரோப்பா’ அல்லது ‘ஸ்லாவிய உலகம்’ என்பதாகவே அவர்கள் ஒட்டுமொத்தமாய் அடையாளமிடப்பட்டனர். ஸ்லாவிய நாடுகளுக்கிடையில் மொழி ஒற்றுமை இருந்த போதிலும் ‘ஸ்லாவிய கலாச்சாரம்’, ‘ஸ்லாவிய உலகம்’ என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்கிறார் குந்தேரா. ‘செக்’கள், ‘போல்’கள், ‘ஸ்லோவக்’கள், ‘க்ரோட்’கள், ‘ஸ்லோவின்’கள் ஆகியோரை ஸ்லாவியர்கள் எனச் சொல்வதைக் காட்டிலும் அவர்களின் வரலாறு மேற்குடனும், ஜெர்மனுடனும் அதிகம் இணைந்திருந்ததை கவனம் கொள்வது அவசியம். போலந்து மக்களைத் தவிர மேலே சொன்ன பிறர் ருஷ்யக் கலாச்சாரத்திலிருந்து மிகவும் விலகியே இருந்தனர். இத்தகைய வரலாறு, அடையாளச் சிக்கல், அரசியற் பிரச்னையில் நீக்கமற நிறைந்திருக்கும் தற்காலிகத் தன்மை ஆகியன உருவாக்குகிற இருப்பியற் பிரச்சினைகள் புனைவுகளின் விசாரணைக்குரிய அற்புதமான களமாக அமைந்திருக்கும் அற்புதமான களமாக என்பதில் யாருக்கும் ஐயமிருக்க இயலாது. இந்த வகையில் உலக அளவிலான முக்கிய நாவலாசிரியர்களென செர்வான்டிஸ், ஸ்டெர்ன்,ரெபலாய், டிடேரோ, ஸ்டெந்தால், ஃப்ளாபர்ட், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் பிரவுஸ்ட், ஃபால்க்னர், மார்க்யூஸ் என பட்டியலிடும் குந்தேரா, அவர்களோடு காஃப்கா, முசில், ப்ரோச், கோம்ப்ரோவிக்ஸ் ஆகிய நான்கு மத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு இடமளிப்பார். அவர்களோடு நாம் மிலன் குந்தேராவையும் சேர்த்துக் கொள்ளலாம்.கதையாடல்களால், புராணங்களால், தொன்பங்களால், புனைவுகளால் பின்னப்பட்ட ஒரு திரை உலகத்தின் முன் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைப்பட்ட நம்பிக்கைகள், விளக்கங்கள், ஊகங்கள் ஆகியவற்றுடன் தான் நாம் உலகை எதிர்கொள்கிறோம். ஏற்கனவே அளிக்கப்பட்ட விளக்கங்கள் ஒரு திரைச்சீலையாய் எதார்த்தத்தின் முன் தொங்கிக் கொண்டிருக்கிறது. செர்வான்டிஸ் டான் குயிக்ஸாட்டை அனுப்பி அந்த திரைச் சீலையைக் கிழித்தெறிந்தார் என்கிறார் குந்தேரா. இந்த உலகம் அதனுடைய எல்லா விதமான கேலிக்குரிய அம்மணத்தன்மையுடன் தன்னை திறந்து கொண்டது. ஆக ஜோசப் கோன்ராட் சொல்வதுபோல நாவலாசிரியரின் பணி “உங்களைப் பார்த்துச் செய்வதே”. சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் ரஷ்ய வடிவியலாளர்கள்(formalists) சொன்னது போல அன்றாட வாழ்வின் சுவையற்ற பழகிப்போன நடைமுறைகள் இந்த உலக வாழ்வின், மனித இருப்பின் அதிசயங்களைக் கண்டு வியக்கும் ஆற்றலை நம்மிடமிருந்து வடித்தெடுத்து விடுகின்றது. எனவே கலையின் பண்பு இத்தகைய பரிச்சய உணர்வை போக்குவதே; பரிச்சய நீக்கம்(Defamiliaristion)செய்வதே.

அறிவியலின் வரலாற்றுக்கும் கலையின் வரலாற்றிற்கும் ஒரு வித்தியாசமுண்டு. அறிவியல் வரலாற்றின் அடிப்படை ‘வளர்ச்சி’ – Progress என்கிற கருத்தாக்கம். பழைய கண்டுபிடிப்பை வீழ்த்தி அல்லது பொய்யாக்கி புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. மருத்துவத்தில் புதிய மருந்து கண்டுபிடிக்கும்போது அது பழையதை காட்டிலும் அதிக நோய் ஆற்று திறன் கொண்டதாக உள்ளது. கலை இலக்கியங்களின் வரலாற்றில் இத்தகைய வளர்ச்சி, திறன் மேம்பாடு, முன்னோக்கிய நகர்வு என்பன கிடையா. நாவலாசிரியரின் பெருநோக்கம் தனது முன்னோர்களைக் காட்டிலும் சிறப்பாக செய்வதல்ல. மாறாக “அவர்கள் சொல்லா ஒன்றைச் சொல்வதே”என்கிறார் குந்தேரா. தனக்கு முந்தியவர்களால் பார்க்க இயலாத ஒன்றை பார்க்கும் திறன் உடையவராக அவர் இருக்க வேண்டும்.

ஆக, புதிதாக எதையும் சொல்லாத ஒன்று புதினமாக புதினமாக இருக்க இயலாது. புதிதாகச் சொல்ல இயலாதவை தோற்றுப் போனவை. தோற்றுப் போனவைகட்குக் கலை இலக்கிய வரலாற்றில் இடமில்லை. பிற வரலாறுகட்கும் கலை இலக்கிய வரலாற்றுக்கும் இன்னொரு வித்தியாசம் இது. பிற வரலாறுகளில் தோல்விக்கும் இடமுண்டு. நெப்போலியனின் வாட்டர்ல தோல்வியின்றி பிரெஞ்சு வரலாறு கிடையாது. பிளாசிப்போர் தோல்வியின்றி இந்திய வரலாறு இல்லை. எல்லா தோல்விகளிலும் அவற்றின் இன்னொரு புறமாக வெற்றிகள் உண்டு. இலக்கிய தோல்வியின் பின் யாருடைய வெற்றியும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.பொதுவாக வரலாறு எனில் “இன்று நம்மோடு இல்லாதவற்றின்” வரலாறே ஆகும். கலை, இலக்கியங்களில் மட்டுமே வரலாறு என்பது இன்றும் நம்மோடு இருப்பவற்றின் வரலாறாக அமைவது சாத்தியம். சங்க இலக்கியங்களையும் இன்றைய கவிதைகளும் நாம் ஒரு சேர வாசிக்கிறோம். இசை, சிற்பம் ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். கலை இலக்கியங்களின் வரலாறு விழுமியங்களின் வரலாறாக உள்ளது. அது சம்பவங்களின் வரலாறு அல்ல. எடிசன் பல்பைக் கண்டுபிடிக்காவிட்டால் வேறு யாராவது கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு புதிய உத்தியை நாவலாசிரியன் கண்டுபிடிக்காது விட்டிருந்தால் அது கண்டுபிடிக்கப்படாமலே போயிருக்கும். புதின வரலாறு வேறுவிதமாய்ப் போயிருக்கும். செர்வாண்டிஸ் காலம் தொடங்கி இன்றுவரை நாவல்கள் இருப்பியற் கேள்விகளை அலசும் சாதனமாகிவிட்டன. அந்த வகையில் தத்துவச் செயல்பாடுகளுக்கும் நாவலுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. பதில்கள், பதில்கள் என எங்கும் பதில்கள் நிறைந்திருந்து சலிப்பேற்றும். உலகில் புதிய கேள்விகளைத் தெரிவிப்பதுதான் தத்துவத்தின் பணி. எல்லாம் தெரிந்தவைதான், ஏற்கனவே அறிந்தவை தான் என்கிற மனநிலையை தகர்த்து “நீ நினைப்பது போல வாழ்க்கை எளிதானதல்ல” எனச் சொல்வதுதான் நாவலின் பணி. இதன் பொருள் தத்துவத்தின் பிரதிபலிப்புதான் நாவல் என்பது அல்ல. கவிதையும் தத்துவமும் தனக்குள் நாவலை உள்ளடக்கி விட இயலாது. ஆனால் நாவலோ கவிதையையும் தத்துவத்தையும் தனக்குள் அடக்கி விடும் வல்லமை உடையது. இவ்வுலகில் மனிதனாக இருப்பதன் பொருள் என்ன என்பதை மனிதாயப்படுத்திச் சொல்லவல்லது நாவல்.அன்றாட வாழ்க்கை, தினசரி இருப்பு நாவலின் பாடு பொருள். நாவலின் வெளிப்பாட்டு வடிவமான (prose) இந்த ச் சாத்தியத்தை எளிதாக்கிவிடுகிறது. Prose/ Prosaic என்கிற சொற்களுக்கு ‘நயமற்ற, சலிப்பான, புதுமையற்ற, சாதாரணமான’ என்கிற பொருளுண்டு.பார்க்க (ஏசி செட்டியார் அகராதி) .இந்த அன்றாட வாழ்வின் நயமற்றத் தன்மையைப் பாடு பொருளாக்கி மனித இருப்பையும் இயற்கையையும் ஆய்வு செய்ய உரைநடை ஒரு சிறந்த கருவி. உலகம் துக்க மாயமானது என்றார் புத்தர். ‘துக்க’ என்கிற புத்தக் கருத்தாக்கம் ‘இன்பம் அல்லது மகிழ்ச்சி’ என்பதன் நேரடியான எதிர்க் கருத்தாக்கமன்று. ‘துக்க’ என்பதன் பொருள் ‘குறைபாடுடைய, முழுமையற்ற, திருப்தியற்ற’ என்கிற நிலைதான். இந்த பிரச்சனைகளை, இந்த நிலையை திரை இந்த நிலையைத் திரைவிலக்கிப் பார்க்கும் சாதனமாகவே நாவல்கள் அமைகின்றன.”எனவே இருப்பின் இதுவரை அறியப்படாத ஏதோ ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துவதில் தோல்வியுறும் நாவல் அறக்கேடானது (immoral-ஒழுக்கக்கேடானது)என்கிறார் மிலன் குந்தேரா. இப்படி நாவலுக்கு ஒரு அரை அடிப்படையிலான நிபந்தனையைத் துணிந்து முன்வைக்கிறார். ஒரு வறட்டுத்தனமான அறவியலாளர்(moral absolutist) அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மனித இருப்பு குறித்துப் புதியனவற்றைச் சொல்ல இயலாத புதினங்களின் அற இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறார் குந்தேரா.சில தருணங்களில் ‘திருப்பிச் சொல்லுதல்’ தவிர்க்க இயலாதது தானே என்கிற கேள்வி ஒருவருக்கு உருவாகக்கூடும். ஆனால் இதற்கொரு உடன்பாடான பதிலைச் சொல்ல தயாராக இல்லை. மாறாக திருப்பிச் சொல்லுதலை வெட்கக்கேடானது என்கிறார்.ஒரு சம்பவம்: 1989ல் கம்யூனிச ஆட்சி வீழ்ந்த பின் குந்தேரா பிரேக் நகருக்குச் செல்கிறார். அவரது நண்பர் ஒருவர் இன்றைய அபத்தங்களை விளக்குவதற்கு இன்னொரு பால்ஸாக் வேண்டுமென்கிறார். முதலாளித்துவத்தை மீண்டும் நிறுவும் முயற்சியில் வெளிப்படும் முட்டாள்தனங்கள், கொடூரங்கள், ஆபாசங்கள் அவரை இப்படிச் சொல்ல வைக்கிறது. ஒரு வயதான கம்யூனிஸ்டின் கதையும் அந்த நண்பர் சொல்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன் தன் மகளை கம்யூனிஸ்ட் ஆட்சியினால் சொத்துக்கள் பறிக்கப்பட்ட ஒரு பூர்சுவா குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுத்த ஒரு கம்யூனிஸ்ட் தான் அந்த முதியவர். இன்று அந்த பூர்சுவா குடும்பத்திற்குப் பழைய சொத்துக்கள் கிடைத்து விட்டன. ஆனால் இந்த முன்னாள் கம்யூனிஸ்ட்டான கிழவரை இப்போது யாரும் கவனிப்பதில்லை. பழைய கம்யூனிஸ்ட் கட்சி காரரான தன் தந்தையை மகளும் கூட ரகசியமாகவே வந்து பார்த்து செல்லவேண்டியுள்ளது. சொல்லிவிட்டு நண்பர் சிரிக்கிறார். பிரெஞ்சுப் புரட்சியின் எதிரிகள் மீது கடும் பயங்கர வாதத்தை விதைத்த காலகட்டம் குறித்த(Reign of Terror) ‘பெரி கேரியட்’ எனும் பால்ஸாக் எழுதிய நாவலின் உண்மை அரங்கேற்றம் ஆக இந்நிகழ்வு உள்ளதை உணர்ந்த குந்தேராவும் சிரிப்பில் கலந்து கொள்கிறார்.கார்ல் மார்க்ஸ் சொன்னது போல வரலாற்றில் எல்லாம் இருமுறை வரலாற்றில் எல்லாம் இருமுறை போல வரலாற்றில் எல்லாம் இருமுறை அரங்கேறுகின்றன. முதலில் சோகமானதாய், மறுபடி கேலிக்குரியதாய்.நண்பர் சொன்ன கதை ஏன் நகைப்புக்குரியதாக உள்ளது? அந்த பழைய கம்யூனிஸ்ட் கேலிக்குரியவரா? இன்னொருவரின் அனுபவத்தை திருப்பி அனுபவிப்பதாலா அவர் கேலிக்குரியவராகிறார்? ஆனால் திருப்பி செய்துகொள்வது அவரல்லவே. வரலாறல்லவா தன்னைத்தானே திருப்பி நிகழ்த்திக் கொள்கிறது? அப்படிச் செய்வது உண்மையிலேயே வெட்கக்கேடானதுதான். அபத்தமானதுதான். முட்டாள்தன மானதுதான். நல்ல ரசனையற்ற தன்மை தான். வரலாற்றின் இந்த ரசனையற்ற முட்டாள்தனம் தான் அவர்களை அப்படிச் சிரிக்க வைத்து விட்டது.

செக் நாட்டில் மீண்டும் முதலாளித்துவம் திருப்பி அமைக்கப்பட்டது குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுத மீண்டும் ஒரு பால்ஸாக் வேண்டும் என அந்நாட்டு மக்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு நல்ல நாவலாசிரியன் அப்படி ஒரு நாவலை எழுதத் துணியமாட்டான் என்கிறார் குந்தேரா. பிற வரலாறுகள் வேண்டுமானால் தன்னைத்தானே திருப்பி நிகழ்த்திக் கொள்ளும் ரசனை கெட்டதாக இருக்கக்கூடும். ஆனால் கலையின் வரலாற்றில் அத்தகைய அபத்தத்திற்கு இடமில்லை.

குந்தேராவின் புதிய நூல் இப்படி பல புதிய கேள்விகளை நமக்குப் பரிசளிக்கிறது. நூலின் தொடக்கமே ஒரு நல்ல கேள்வியுடன் முளை விடுகிறது. பாரதியின் இதுவரை வெளிவராத ஒரு பாடலை ஒரு ‘பாரதி அன்பர்’ கண்டுபிடித்து வெளியிடுகிறார் என்போம். நாம் வியக்கிறோம். மகிழ்கிறோம். பாரதியின் விசாலப் பார்வையையும் சொற்திறன்களையும் கவிதா ஆளுமையும் கண்டு மீண்டும் ஒருமுறை பிரமிக்கிறோம். ஆனால் பாரதியைப் போன்று அதே அளவு ஆழம், சொல்லாட்சி ஆகியவற்றுடன் இப்போது நம்முடன் வாழும் கவிஞர் ஒருவர் சமகாலத்தில் எழுதுகிறார் என்றால் அதை நாம் ரசிக்க இயலுமா? நகைப்பிற்குரியதாகவே இம் முயற்சியும் அமையும். ஒரு கணம் யோசித்துப் பார்க்கும்போது இந்நிலை அபத்தமானதாக இல்லையா? அழகியல் உணர்வு என்பது தன்னிச்சையானதில்லையா? அது நமது உணர்வுகள் மீட்டப்படும் விளைபொருள் இல்லையா? மாறாக அது அறிவு சம்பந்தப்பட்டதா? ஒரு கலைப்படைப்பின் அழகை ரசிப்பதற்கு அதன் உருவாக்கத் தேதி தெரிந்தாக வேண்டுமா?கலையின் வரலாற்றுப் பரிமாணத்தை விளங்கிக்கொள்ள விளங்கிக்கொள்ள பரிமாணத்தை விளங்கிக் கொள்ள அழகியல் விழுமியம் குறித்த ஒரு முன்னறிவு தேவையாகிறது என்கிற ஜேன் முகாரோவ்ஸ்கியின் கருத்தொன்றை மேற்கோள் காட்டுவார் குந்தேரா. அழகியல் மதிப்பீடு இல்லாதபோது கலை வரலாறு என்பது வெறுமனே கலைப்படைப்புகளின் கொள்கலனாகிவிடுகிறது. காலவரிசை அமைப்பிற்கு அங்கே பொருளில்லை. இதற்கொரு மறுதலையைச் சொல்கிறார் குந்தேரா: கலையின் வரலாற்றுப் பரிணாமம்(evolution) என்கிற பின்னணியிலேயே அழகியல் விழுமியத்தை நாம் உணர இயலும். அதாவது அழகியலை உணர்வதற்கு வரலாற்றுப் பிரக்ஞை தேவை. இந்த வரலாற்றுப் பரிணாமத்தில் வெற்றியடைந்த கலை படைப்புகளுக்கு படைப்புகளுக்கு மட்டுமே இடமுண்டு என்கிற குவேராவின் என்கிற குவேராவின் வரையறையை இப்போது நினைவு கூர்வோம். புதியனவற்றைச் சொல்ல முடிந்தவையே வெற்றியடைய முடியும் என்பதையும் மனங்கொண்டால் ஒன்று விளங்குகிறது. ஒரு நாவலைப் பொறுத்த மட்டில் அதன் அழகியல் மதிப்பீடு புதியனவற்றைச் சொல்லும் திறனுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அது.ஒன்றை இங்கே குறிப்பிடுவது அவசியம். இப்படி நான் அவளால் சொல்லப்படுகிற ‘புதியன’ என்பன நாவலால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடியதாக அமையும். புதினம் என்கிற கருவியால் மட்டுமே சாதிக்கக் கூடியது அது. மத்திய ஐரோப்பிய நாவலாசிரியர்களின் ஒருவரான ஹெர்மன் புரோச் சொல்வார்: “ஒரு நாவலால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடியதைக் கண்டுபிடிப்பது ஒன்றே ஒரு நாவலின் இருப்பிற்கான நியாயப்பாடு(raison-de-etre).

கலாப்ரியாவின் குற்றாலச் சந்திப்பிற்காக வாசித்துக்கொண்டிருந்த நூல்களில் ஒன்று என ‘The Curtain’ பற்றிச் சொன்னேன். நான் வாசித்த இன்றைய தமிழ் நாவல்கள் பலவும் என்னுடைய கட்டுரைத் தலைப்பான உலகமயம் தமிழ் புனைவுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்பதுடன் பொருந்திப் பார்க்கத்தக்கதாக இல்லை. உலகமயம், சமகால அரசியல், சம கால வரலாறு ஆகியன குறித்த எந்த பிரச்சினையும் அவற்றில் ஊடாடவில்லை. உலகமயம் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்களால் நமது நாவல்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது இதன் பொருளல்ல. உலகமயம் இன்றைய மனிதனின் இருப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நமது நாவல்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. உலகமயம் நமது இருப்பியல் சார்ந்த எந்த கேள்வியையும் எழுப்ப வில்லை என நாம் சொல்லி விட விட என நாம் சொல்லி விட இயலுமா? உலகமயம் நகர்ப்புறங்களை மட்டுமல்ல கிராமப்புறங்களையும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பாதித்துள்ளது. கல்விமுறை, மருத்துவம், பணிச்சூழல்(ஜாப் கல்ச்சர்), நிறுவன அமைப்புகள், தேவை அதிகரிப்பு என பல்வேறு பரிணாமங்களில் உலகமயத்தின் தாக்கத்தை நாம் உணருகிறோம். Corporate stress என்பது கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மீது மட்டுமல்ல, மனித உறவுகளில் இவ்வகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இவர்கள் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் இதயம் பழுதுபட்ட ஒருவரையோ, மைத்திரக்காய் செயலிழந்தவரையோ முன்னைப் போல இப்போது சாக விட்டுவிட இயலாது. பணம் இருந்தால் காப்பாற்றிவிடலாம். நன்றாகப் படிக்கும் மகனை இன்ஜீனியரிங் அல்லது மருத்துவப் படிப்பை சேர்க்காமலிருக்க முடியாது. குக்கிராமம் ஆனாலும் கேபிள் கனெக்சன் இல்லாமல் வாழமுடியாது… இவை மட்டுமன்று இப்படி நிறைய ஏராளமாகச் சொல்லமுடியும். நண்பர் ஒருவர் சொன்னது போல Globalisation என்பது ஒரு perfect crime (ஒரு ல்யோதார்த்தியக் கருத்தாக்கம்). ரொம்பவும் மிக எளிமைப்படுத்திதான் இவற்றைச் சொல்கிறேன். ஒரு நாவலாசிரியருக்கு இன்னும் பல கேள்விகள் எழலாம். எழும்.வரலாறு நம் காலடியில் அதிவேகமாக நழுவிக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாறு ஒவ்வொரு மனிதரின் அனுபவமுமாகிவிட்டது. குந்தேரா சொல்வது போல் தான் ‘எந்த உலகில் பிறக்கிறோமோ அந்த உலகில் சாகப் போவதில்லை’ என்பதை மனிதன் உணர்ந்து கொள்ள தலைப்பட்டு விட்டான். இத்தகைய வரலாற்றுப் பிரக்ஞை உள்ள தமிழ் எழுத்தாளர்களை எண்ணுவதற்கு ஒரு கை விரல்கள் அதிகம். உலகத் தரத்தில் தமிழில் ஏன் நாவல்கள் உருவாகவில்லை என்கிற கேள்வி இங்கே அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. மிலன் குந்தேரா நம் முன் எழுப்புகிற கேள்விகள் மிக அடிப்படையான பிரச்சனைகளை முன்வைத்து தமிழ் நாவல்களின் உலகத் தரம் பற்றிய கேள்விகளை யோசிப்போம்.

நண்பர் யவனிகா ஸ்ரீராம் நேற்றிரவு ஒரு தொலைபேசி உரையாடலில் சொன்னதுபோல நிறப்பிரிகை நிறப்பிரிகைக்குப் பிந்தைய தமிழ் புதினங்கள் குறித்து நாம் பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது.”