என் இதயத்தில் பாதி அடைப்பு உள்ளது. அதனால் வீட்டு வாசலில் காரில் கொண்டு வந்து விட்டால் கேட்டிலிருந்து வீட்டுக்கு வரும் 200 அடி தூரம் நடந்தால் நெஞ்சு வலிக்கிறது.
கோபப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது.
திகில் படமோ, த்ரில்லரோ பார்த்தால் நெஞ்சு ரொம்பவே வலிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், உணர்ச்சிவசப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது.
ஆனால் மதியம் மூன்று மணி வரை பத்து கி.மீ. தூரம் வரை நடக்கிறேன். எந்த வலியும் இல்லை. மாலையிலிருந்துதான் மேற்கண்ட பிரச்சினை.
இதற்காக ஒரு ஹோமியோ மருந்து உட்கொள்கிறேன். 50 சதவிகித வலி போய் விட்டது. புத்தக விழாவில் நன்றாகவே சுற்றினேன்.
இந்த நிலையில் பழையபடி குடித்து விட்டு தகராறு செய்பவர்களோடு, குடி போதையில் விவாதிப்பவர்களோடு எல்லாம் என்னால் மல்லுக்கு நிற்க முடியாது.
இது எல்லாம் இல்லாமல் என்னால் படு ஆரோக்கியமாக 90 வயது வரை வாழ முடியும். இப்போது நாவலை எழுதிக் கொண்டும் வீட்டு வேலை செய்து கொண்டும் இருப்பதால் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைக்கிறேன். இதில் பெரும்பகுதி உடல் உழைப்பு. இதிலெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆறு மாதம் முன்னால் கோவாவில் செங்குத்தான குன்று ஒன்றில் ஏறினேன். பிரச்சினை இல்லை. ஆனால் மன உளைச்சல் தரும் விஷயங்களைக் கேள்வியுற்றால் பிரச்சினை ஆகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இதுவரை நடந்த 66 சந்திப்புகளிலும் குடித்து விட்டு கலாட்டா பண்ணினவர்கள் இந்த சந்திப்புக்கும் வருவோம் என்று அடம் பிடித்தால் நான் என்னய்யா செய்யட்டும்? மட்டுமல்லாமல் தச்சு வேலை செய்யும் ஒரு நண்பர் ரேஷன் கடையில் கொரோனா காலத்தில் கொடுத்த ஆயிரத்தையும் ரெண்டாயிரத்தையும் எனக்கு சந்தாவாக அனுப்பினார் என்று எத்தனை முறை எழுதியிருந்தேன்? அதையெல்லாம் படித்து விட்டு ஆசனவாயை மூடிக்கொண்டு இருக்கிறீர்? இப்போது சந்திப்புக்கு வருகிறேன் என்றால் என்ன அர்த்தம்?
நானே உங்கள் நிலையில் இருந்தேன் என்றால், 66 சந்திப்பிலும் கலாட்டா செய்தவனாக இருந்தால், இந்த சந்திப்பு செலவு ஒரு லட்சத்தையும் ஏற்கிறேன், ஆனால் நேரில் வரவில்லை, அடுத்த சந்திப்புக்கு வருகிறேன், ஆனால் குடிக்க மாட்டேன் என்று சொல்லுவேன். பிறகு எப்படி ஐயா பிராயச்சித்தம் செய்வது?
நான் எல்லோரிடமும் சந்தாவோ நன்கொடையோ கேட்கவில்லை. ஆனால் எதுவுமே நடக்காதது போல் மௌனமாக இருந்து கொண்டு சந்திப்புக்கு வருகிறேன் என்றால் என்ன அர்த்தம்? நூறு ரூபாய் மாதாமாதம் அனுப்புபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் என்ன வீடு கட்டவும் என் சொந்த செலவுக்குமா கேட்கிறேன்? எனக்கு வரும் பணம் எல்லாமே என் எழுத்துக்கான செலவுதான். ஔரங்ஸேபுக்கு எத்தனை புத்தகங்கள் வாங்கியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? அடுத்து, பூனைகள் இருபது. என்னிடம் பத்து. தரைத் தளத்தில் பத்து.
நான் தனிப்பட்ட முறையில் பணம் கேட்கவில்லை. விருப்பம் இருந்தால் சந்தா என்று நினைத்துக் கொண்டு அனுப்புங்கள். விருப்பம் இல்லையா, அனுப்பும் அளவுக்குப் பணம் இல்லையா, என் எழுத்தைப் படியுங்கள். எனக்கு எந்தப் புகாரும் இல்லை, பிரச்சினையும் இல்லை. ஆனால் ஜெயமோகனின் போன் நம்பர் என்ன என்று கேட்டு எனக்கு போன் போடாதீர்கள். கடும் கோபம் உண்டாகிறது. அது என் உடல் நலனுக்குக் கேடு. போன் நம்பர் கேட்ட ஆள் என்னை என்ன கேட்டார் தெரியுமா?
இப்போது என்ன சாரு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
அவரை என்ன செய்யலாம்?
அதனால் இனிமேல் இதற்கு ஒரு கட்டணம் வைக்கலாம் என்று இருக்கிறேன். ஜெயமோகன் போன் நம்பர் – அம்பதாயிரம்
எஸ்.ரா. போன் நம்பர் – அம்பதாயிரம் (கீழே மேலே போனால் என் தலைக்கு ஆபத்து)
மனுஷ் போன் நம்பர் – அறுபது (மிஸ் யூவுக்குப் பிறகு)
அராத்து போன் நம்பர் – ஒரு லட்சம் (போட்டுத் தாக்கு)
இன்னும் இருக்கிறது பட்டியல்…
சந்தா/நன்கொடை அனுப்ப:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai