சாரு நிவேதிதா நான் தான் ஔரங்கசீப் 100 வது அத்தியாயம் நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் விதமாக பாண்டி ஆரோவில்லில் வாசகர் சந்திப்பு மற்றும் கொண்டாட்டம். முன்பே இதைப்பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தாலும் , நண்பர்கள் நேரில் சந்திக்கையில் , எப்பவாச்சும் மீட் பண்ணா சொல்லுங்க, கலந்துக்கணும்னு ஆர்வமா இருக்கு என்கிறார்கள். போஸ்டுகள் பலர் பார்வைக்கும் செல்வதில்லை. மார்ச் 19 காலை முதல் இரவு வரை. வர ஆர்வம் உள்ளவர்கள் கீழே கமெண்டில் இருக்கும் லிங்கை சொடுக்கி குழுவில் இணைந்து கொள்ளவும். தங்குமிடம் தேவை என்பவர்கள் குழுவில் இருக்கும் வினீத்திடம் சொல்லி ஏற்பாடு செய்துகொள்ளலாம். இந்த முறை பெண்களுக்கும் அனுமதி உண்டு
ஆனால் பெண்களுக்கு தங்குமிடம் தனிதான். ஒன்றாகத்தான் தங்குவோம் என்று அடம்பிடிக்கக் கூடாது. இதைத்தவிர பெண்களுக்கு வேறேதும் ரெஸ்ட்ரிக்ஷன் இல்லை. குழுவில் இணந்து தங்குமிடம் தேவைப்படும் பெண்கள் “தமிழ்க்காதலி தாரணியை” தொடர்பு கொள்ளவும் . தாங்களே தங்குமிடம் ஏற்பாடு செய்துகொள்பவர்கள் அவர்களுக்கு பிடித்த இடத்தில் ஏற்பாடு செய்துகொள்ளலாம். நான் தான் ஔரங்கசீப் பற்றி கலந்துரையாடல் இருக்கும் .படித்து விட்டு வந்தால் உரையாடலாம். இல்லையென்றால் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். நான் இதுவரைக்கும் சாரு புக் ஒண்ணு கூட படிச்சதில்ல , ஆனா …என ஆரம்பித்து பேச மட்டும் தடை.
சாருவின் பேருரை இருக்கும். மேடை போட்டு அஃபீஷியலான விழா இல்லை என்பதால் உரை என்ற பெயரில் யாரும் அறுக்க மாட்டார்கள். அறுக்கவும் விட மாட்டோம். ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சாருவின் எழுத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். சிறப்பு அழைப்பாளர்கள் என்று தனியாக யாருமில்லை.
மாலை 7 மணி வரை விழா “சீரியஸாக” நடக்க இருப்பதால் மதுவுக்கு அனுமதியில்லை. 7 மணிக்கு மேல் அவரவர் விருப்பம்.
வரும் வாசகர்களுக்கு டீ,காபி , இட்லி , சுண்டல் , சாப்பாடு,பிரியாணி, சிக்கன் ,மட்டன் ,மீன் ,ஸ்நாக்ஸ் எல்லாம் ஏற்பாடு செய்கிறோம். வாசகர் வட்ட கொள்கையின்படி மது அருந்துதலை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதால் அவரவருக்குத் தேவையான மதுவை அவரவரே வாங்கிக்கொள்ள வேண்டும்.
நுழைவுக்கட்டணம் இல்லை. இதற்கு ஆகும் செலவை பகிர்ந்துகொள்ள இருப்பதால், விருப்பம் உள்ளவர்கள், விருப்பம் இல்லாதவர்கள் என யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம். அளிக்காமலும் போகலாம்.
எச்சரிக்கை 1 : பவுன்ஸர்கள் உண்டு.
எச்சரிக்கை 2 : இது பாராட்டு விழா. பாராட்டு மட்டுமே ஏற்கப்படும். விமர்சனங்களுக்கு அனுமதியில்லை. விமர்சனம் அது இது என்ற பெயரில் , சரக்கைப் போட்டு ,சிறுபத்திரிக்கை கலாச்சாரம் என்ற கிழிந்த போர்வையில் ஏண்டா சாரு …நீல்லாம் என ஆரம்பித்தால் கும்மாங்குத்துதான் விழும்.