பிரம்ம – நாயகன்



புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

படித்திருக்கிறாயா

அதில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை

நான்தான்

ஒரு வித்தியாசம்

துயரத்தின் குறியீடு அவர்

கொண்டாட்ட

நாயகன்நான்

சடலங்களின் மீது நின்றுகொண்

டிருக்கும் நீயா

கொண்டாட்ட நாயகனென்றார் 

சிலர்

வாதையின் ரேகை படிந்த

முகமும்

சட்ட திட்டங்களின்

கடுவிதிகளைக்
கொண்ட புனிதநூலுமாகவரும்
தீர்க்கதரிசிகளின்

அபாய சைகைகளுக்கு

எதிரானது என்

பாடல்

பாழ்பிறவிக்கடலில்

மூழ்கி மூழ்கி

முத்தறியத் தூண்டுவது
என் பாடல்

நாடி நரம்புகளில்

உச்சம்கொண்

டாடுவது என்

பாடல்

ஆதலால்

ஆதலால்

என் நண்ப,

என்னருகே

நெருங்கி வருகையில்

சடலம் கண்டு அஞ்சி

ஓடி விடாதே

என்
அந்தப் பாடல்

ஒரு பூனைக்குட்டியின்

முத்தத்துக்கு

நிகரானது

உன் காதலியின்

ஸ்பரிஸத்துக்கும்