ஒண்ணு, ரெண்டு, மூணு…

நேற்று என்னுடைய கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலின் முன்வெளியீட்டுத் திட்டம் குறித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன்.  அது குறித்து சில விஷயங்களும் எழுதினேன்.  முன்பெல்லாம் 1200 பிரதிகள் போடுவார்கள்.  அதில் 200 மதிப்புரைக்கான இலவசப் பிரதிகள்.  இப்போது போடுவதே 200 தான்.  அதிலும் எனக்கே இந்த நிலை.  ஏகாரத்து மன்னித்து விடுங்கள்.  எல்லோருக்கும் இதே நிலைதான்.  ஜனநாயகம்.  இன்று காலையில் ஸீரோ டிகிரி அலுவலகத்துக்கு ஃபோன் செய்து வித்யாவிடம் முன்பதிவுத் திட்டத்துக்கு யாரும் பணம் அனுப்பினார்களா, ஏதாவது ஒண்ணாவது வந்ததா என்று கேட்டேன். 

ம், வந்ததே, நிறைய வந்தது என்றார் வித்யா. 

அப்படியா, என்ன, அஞ்சு பத்து…?

இதோ இருங்கள், பார்த்து சொல்கிறேன் என்ற வித்யா, ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு என்று எண்ணி பதினொன்றோடு நிறுத்தினார்.  சாரு, பதினொண்ணு வந்திருக்கு என்றார். 

இப்போது புரிகிறதா, தமிழ்நாட்டை ஏன் ஃபிலிஸ்டைன் சமூகம் என்று வர்ணிக்கிறேன் என்று?  மனுஷ்ய புத்திரனின் மிஸ் யூ மாதிரி அம்பதாயிரம் பிரதி விற்காவிட்டாலும் ஒரு அம்பதாவது விற்க வேண்டாமா?

ஸ்மாஷன் தாரா கவிதைத் தொகுதி.  முன்வெளியீட்டுத் திட்டம் விவரங்கள் கீழே.  தொகுதிக்கு மனுஷ்ய புத்திரன், ஆத்மார்த்தி, நேசமித்ரன், அராத்து ஆகியோர் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள்.    

https://tinyurl.com/smashandhara