விருது: கடிதம்

அன்புள்ள சாரு நிவேதிதா சார்,                           

உங்களுக்கு விஷ்ணுபுரம் விருது  கண்டிப்பாக அளிக்கப்படும் என்று உங்களையும், ஜெயமோகன் சாரையும் படிக்கும் எளிய வாசகர் கூட கணித்து விடக் கூடியதாகவே இருந்தது. ஆனால் எந்த வருடம் என்பதைத்தான் யாராலும் யூகிக்க முடியவில்லை.

விஷ்ணுபுரம் விருது தரமான எழுத்தாளர்களை முன்வைப்பது. அது உங்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். மற்றும் நீங்களும் ஜெயமோகன் சாரும் எதிரெதிர் துருவங்கள் என்று எல்லோரும் (நீங்கள் உட்பட) கூறுகிறார்கள். ‌‌‌ஆனால் எனக்கு அப்படித் தெரியவில்லை. நீங்கள் இரண்டு பேரும் செவ்வியல் இலக்கியம், வணிக எழுத்து, நவீன இலக்கியம் என அனைத்து தரப்பு எழுத்தாளர்களையும் சரியாகப் பிரித்து வாசகர்களுக்கு அடையாளம் காட்டுகிறீர்கள். ஆன்மீகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களில் தெளிவான கருத்துக்களை வழங்குகிறீர்கள். முக்கியமாக இடதுசாரி மற்றும் திராவிட‌ அரசியல் கொள்கைகளை இங்கேயுள்ள 95 சதவீதம் எழுத்தாளர்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றனர். அந்த அரசியலின் உண்மை முகத்தை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவதில் எனக்குத் தெரிந்த வரையில் நீங்களும் ஜெயமோகன் சாரும் மட்டுமே சிறந்த எழுத்தாளர்கள் என‌க் கருதுவேன்.

இப்படி இன்னும்‌ நிறைய ஒற்றுமைகளைக் கூறலாம்.

ஒரு மனிதனுக்கு வலது கண் மட்டும் போதுமா அல்லது இடது கண் மட்டும் போதுமா என்று கேட்டால் இரண்டுமே முக்கியம் என்று தானே கூறுவார்கள். அதுபோலத் தான் நீங்கள் இரண்டு பேரும் தமிழ் இலக்கிய உலகில்.

மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் சார்.            அன்புடன்                                                     

கண்ணன்