ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா மற்றும் என் உரை

நாளை (16ஆம் தேதி) மாலை நடக்க இருக்கும் விழா பற்றி அராத்து எழுதியிருப்பது:

விழா – ஃபைனல் கால் மற்றும் விரிவான விளக்கங்கள். சாரு நிவேதிதா , ராஜ சுந்தரராஜன் மற்றும் நம்பிள் கலந்து கொள்ள இருக்கும் பதிப்பகத் தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 16 வெள்ளி மாலை முதல் நள்ளிரவு வரை.

எங்கே ?

கோவை வட சித்தூரில் இருக்கும் ஒரு பண்ணை வீடு ?

லொக்கேஷன் ?

கமெண்டில் மேப் லொக்கேஷன் உள்ளது.

எத்தனை மணிக்கு ?

மாலை 4 மணி முதலே வரலாம். நிகழ்ச்சி குத்துமதிப்பாக 6 மணி முதல் ஆரம்பிக்கும். சாரு கடைசியாக இரவு 10 மணிக்கு பேச ஆரம்பிப்பார்.

நாங்கள் கலந்து கொள்ளலாமா ?

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனாலும் ஃபேஸ்புக் குரூப்பில் தகவல் அளித்து விட்டு வந்தால் திட்டமிட வசதியாக இருக்கும்.

குரூப் லிங்க் கமெண்டில்.கட்டணம் உண்டா ?

கட்டணம் இல்லை. கட்டணம் கொடுக்க விரும்பினால் தடை ஏதும் இல்லை. ஆனால் ஒருவர் 2 லட்சத்திற்கு மேல் கொடுக்க அனுமதியில்லை.

உணவு ?

ஸ்டிரிக்ட்லீ நான் வெஜ். நள்ளிரவு வரை விழா நடக்க இருப்பதால் சிம்பிளாக பிரியாணி மட்டும் ஏற்பாடு செய்துள்ளோம். வெஜிடேரியன் நண்பர்களுக்கு காய்கறி சாலட் மற்றும் பழங்கள் உண்டு. தயிர் சாதம் ஏற்பாடு செய்ய முடியுமா என பார்க்கிறோம். நண்பர்கள் குரூப்பில் இணைந்து உறுதியாக தெரிவித்தால் உணவு ஏற்பாடு செய்ய இயலும்.

தண்ணி அடிக்கலாமா ?

அடிக்கலாம். ஆனால் தங்களுக்கு வேண்டியதைத் தாங்களே வாங்கி வர வேண்டும். அடுத்தவர் சரக்கில் கை வைக்கலாகாது. அடுத்தவருக்கு மனமுவந்து கொடுப்பதில் தடையேதும் இல்லை. இது முதன்மையாக மது விருந்து நிகழ்ச்சி அல்ல. அதனால் அளவாகக் குடித்து விட்டு நிகழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். மாலை 8 மணிக்கு மேல்தான் குடிக்க ஆரம்பிக்க வேண்டும். குடித்த பிறகு ஒரே விஷயத்தை 3 முறைக்கு மேல் சொல்ல அனுமதியில்லை.

தங்கலாமா ?

தங்கலாம்.ஹோட்டல் போல அறை வசதி இல்லை. ஆனால் பெரிய ஹால் உள்ளது. தங்க நினைப்பவர்கள் கையோடு ஒரு போர்வை கொண்டு வந்தால் தரையில் படுத்துக்கொள்ளலாம். 50 பேர் வரை உருளலாம்.

நீச்சல் குளத்தில் குளிக்கலாமா ?

குளிக்கலாம். நிர்வாணமாகக் குளிக்கத் தடை. தண்ணி அடித்து விட்டு குளித்தலைத் தவிர்த்தல் நலம். விழா முடியும் வரை நீரில் மூழ்கி இறக்கத் தடை.

பெண்கள் வரலாமா ?

இது என்ன சமூக விரோத நிகழ்ச்சியா ? தாராளமாக வரலாம். ஆனால் பெண்கள் தங்கத் தனியறை இல்லை. அதனால் திரும்பிச்செல்ல வாகன வசதியுடன் வருவது நல்லது. நிறைய நண்பர்கள் திரும்பிச் செல்வார்கள். அவர்களுடன் இணைந்து கொள்ளலாம். வாகனம்குழுவில் பேசுங்கள். நிறைய பேர் கார் பைக்குகளில் வருவார்கள். தங்கள் வாகனங்களில் இருக்கும் இடம் ,கிளம்பும் நேரம் மற்றும் கிளம்பும் இடம் ஆகியவைகளை தெரிவித்து மற்றவர்களுக்கு உதவலாம்.

ஏதேனும் எடுத்து வரலாமா ?

தாராளமாக. இது நமக்கு நாமே நடத்திக்கொள்ளும் விழா. வீட்டில் செய்த தீனி அல்லது கடையில் வாங்கிய தின்பண்டங்கள் / உணவு/ பழங்கள் /பழச்சாறு , போன்றவைகளை எடுத்து வந்து பொதுவில் வைக்கலாம்.

நிகழ்ச்சி நிரல் ?

நிகழ்ச்சி நிரலே கிடையாது. கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் பேசலாம். இருந்தாலும் அடுத்த பதிவில் குத்துமதிப்பான நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.

டேன்ஸ் ஆடலாமா ?

ஆடலாம். மற்றவர்களை கட்டிப்பிடித்து ஆடக்கூடாது.

மறுநாள் எத்தனை மணி வரை தூங்கலாம் ?

நண்பகல் 12 மணிக்கு செக் அவுட்.

தங்க கட்டணம் உண்டா ?

இல்லை…ஆனால் படுக்கத் தேவையானதை கொண்டு வாருங்கள். அட் லீஸ்ட் போர்வை. தோப்பில் மண் தரையில் தான் படுப்பேன் என அடம் பிடிப்பவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். பாம்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாருங்கள் நண்பர்களே …ஜாலியாக ஓர் இரவைக் கொண்டாடுவோம்.

மெயின் ரோட்

10°49’46.5″N 77°04’14.4″E

https://maps.app.goo.gl/JxhNZn5Y85YHtgTr8?g_st=ic

தோட்டம்

10°49’05.9″N 77°04’01.8″E

https://maps.app.goo.gl/8NzWXxzKzUNfusSL9?g_st=ic