அன்பு நாவலை வாங்குவதற்கு…

இன்றும் புத்தக விழாவுக்கு ஐந்து மணிக்கு வந்து ஒன்பது வரை இருப்பேன்.

நேற்று ஔரங்ஸேப் நாவலை வாங்கி என்னிடம் கையெழுத்து வாங்கியவர்களிடம் கூட அன்பு நாவல் வாங்கவில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆம், அந்த நாவலை நான் முச்சந்தியில் நின்று விற்க விரும்புகிறேன். காசு பார்ப்பதற்காக அல்ல. எனக்குத் தேவை லட்சங்களில். புத்தகம் எத்தனைதான் விற்றாலும் ராயல்டி ஆயிரங்களில்தான் கிடைக்கும். அன்பு நாவல் லட்சக்கணக்கான பேரிடம் சேர வேண்டும் என்று நான் நினைப்பதன் காரணம், அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றுதான். அப்படி அந்த நாவல் பிரபலமானால் என் குடும்ப வாழ்க்கை அழிந்து போகும். போனாலும் பரவாயில்லை. மனிதர்களின் வாழ்க்கை சிறப்புற வேண்டும். இனிமேலும் மனிதாபிமானம், அன்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் சித்ரவதை செய்யக் கூடாது என்று நான் விரும்புகிறேன். நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை, மனித குலம் நற்கதி அடைய வேண்டும் என்று தனக்குக் கிடைத்த மந்திரத்தை உலகுக்குச் சொன்னார் இல்லையா உடையவர், அந்த மனநிலையில்தான் சொல்கிறேன்.

அன்பு நாவலை வாங்கிப் படிப்பதோடு இல்லாமல் உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் பரிந்துரை செய்யுங்கள். இலக்கியமே தெரியாதவர்கள் கூட இந்த நாவலைப் படிக்கலாம்.

ஆன்மீகவாதிகள் ஒரு விஷயத்தை வலியுறுத்துவார்கள். உங்களுக்கு என்னென்ன சொல்ல இருக்கிறதோ அதையெல்லாம் எழுதி கடவுளிடம் சமர்ப்பியுங்கள் என்று. அது போன்ற ஒரு சமர்ப்பணம்தான் இது. ஆனால் கடவுளிடம் சமர்ப்பிக்கவில்லை. எந்த மானுட குலம் எனக்கு இந்த நாவலின் அனுபவங்களைக் கொடுத்ததோ அந்த மானுடத்துக்கே இதை சமர்ப்பித்திருக்கிறேன்.

நாவலை வாங்குவதற்கு:

https://tinyurl.com/yhvc8ush