அன்பு – ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு – ஓர் அனுபவப் பகிர்வு – புவனேஸ்வரி

Charu, first I want to tell you how thankful and priviledged I feel, to recieve the அன்பு novel as my B’day Gift from you. It is one of the most blessed days of my life.

Second, I want to sincerely apologise for such a delayed reply after reading the novel. நானூறு பக்க நாவல் எழுதின உங்க கிட்ட எந்தக் காரணம் சொன்னாலும் சரி ஆகாது.  உங்களுடைய உடல், பொருள், ஆவி, நேரம் எல்லாம் செலவு செய்து உருவாக்கிய படைப்புக்கு நான் சொல்லும் எந்தக் காரணமும் செல்லுபடியாகாது. அப்படி நான் காரணம் சொன்னால் அது உங்களைக் கேவலப்படுத்துவது போல் ஆகும்.  so, I will only ask for your forgiveness.

From the day I received this novel, I was caught in the whirlwind of things in my day to day life , and அன்பு was the only saving grace. உங்கள் புத்தகங்களை நான் வழக்கமாக ஓரிரு தின்ங்களிலேயே முடித்து விடுவேன். குறைந்த பட்சம் இரண்டு தடவை படிப்பேன். ஆனால் அன்பு படிக்க இருபது நாள் ஆயிற்று.. அவ்வளவு distractions .. எப்படியோ முடித்து விட்டேன்.

சாரு, அன்பிறக்கும் உண்டோ அடைக்கும் தாள் – என்னை பொருத்த வரைக்கும் இந்த வரிகளுக்கு நானூறு பக்க விளக்க உரை தான் அன்பு நாவல். எத்தனையெத்தனை விஷயங்கள். எத்தனை பெரிய கருத்துக்கள்! அப்படியே எந்த ஒரு சாமானியனுக்கும் புரிவது போல் பகடியாகவும், நையாண்டியாகவும் எழுதிருக்கிறீர்கள்.  கதைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வலி, வேதனை, இயலாமை, ஆற்றாமை எல்லாவற்றையும் உணரும் போது எனக்குள்ளே ஒரு இனம் புரியாத வலியும் வேதனையும் ஏற்பட்டது. கதை சொல்லும் விதம் ரொம்ப இலகுவாக இருந்தாலும் அடி மனதில் ஒரு சுமை. படிக்கும் போது உதடுகளில் ஒரு புன்முறுவல் வரும். ஆனால் மனசு ஏதோ பாரமாய் சங்கடமாய் இருக்கும். As I always felt and said, your writing takes one on a roller coaster ride of emotions. மனசைப் பந்தாடும்.The characters of your story have the best sample size of this society. Just reflecting the mindset of the people we live our lives with. சில இடங்களைப் படிக்கும் போது நாம் கூட இப்படித் தானே செய்கிறோம் என்று தோன்றியது. என்னையே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் இந்த நாவல் வழி செய்தது. ஒரு எழுத்தைப் படிக்கும் போது, அந்த எழுத்து அதைப் படிப்பவர்களை ஒரு .00005% ஆவது மேம்படுத்த வேண்டும்.   Yours never fails to  do that.  அதற்காக உங்களுக்குக் கோடான கோடி நன்றிகள்.

நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து உங்கள் படைப்புகளைப் படித்து, என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவது எத்தனை பெரிய பாக்கியம்.  Cannot fill words to say how proud I feel.

Forever Till Eternity – Thank you…

புவனேஸ்வரி

அன்பு கிடைக்குமிடம்:

https://tinyurl.com/yhvc8ush