ஒரு சினிமா காட்சி: அராத்து

ஜட்ஜ் : ரேப் பண்ணியா?

கலைஞன் : ஐயா நான் கலைஞன். இருள் ஒளிப்பாதையில் பயணிக்கும்போது கிடைக்கும் நுட்பமான அனுபவங்களை அதன் இருண்மைத் தன்மையோடு ….

ஜட்ஜ் : யோவ் இன்ஸ்பெக்டர் …ஒனக்கு இதே வேலையாப்போச்சி. இவரு மெண்டல் போலருக்கு …மொதல்ல மெண்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பணும்…

இன்ஸ் : இல்லீங்க ஐயா …மெண்டல் மாதிரி நடிக்கிறாரு. பத்துப்பதினஞ்சி பேர இதே மாதிரி பண்ணிருக்காரு.

ஜட்ஜ் : மெண்டல் மாதிரி நடிக்கிறியா?

கலைஞன் : ஒரு தடவை என்கூட ராத்தங்கி பாருங்க ஐயா. என் கலை இலக்கியத்தை எல்லாம் எப்படி உங்களுக்கு கடத்தறேன்னு பாத்துட்டு பேசுங்க.

ஜட்ஜ் : அதுக்கெல்லாம் சட்டத்துல இடம் இல்ல…இன்ஸ்பெக்டர் , எதுக்கும் இவரு சொல்றதையும் கணக்குல எடுத்துட்டு முடிவு பண்ணா என்னா? ஒரு மாதிரி நல்லாதான் பேசறாரு. நீங்க வேணா ஒன் நைட் இவரு கூட தங்கி பாக்கறீங்களா?

இன்ஸ் : நான் ரிஸைன் பண்றேங்கய்யா ….