நடனமும் இசையும்…

சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அதற்கு ஆடியவர்கள் நடிகர்கள் இல்லை. சராசரி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள். மத்திம வயதுக்காரர்கள். நூற்றுக்கணக்கான – உண்மையில் ஆயிரக்கணக்கில் அந்தப் பாடலுக்கு ஆடி காணொலிகளை விட்டுக் கொண்டிருந்தனர். நானே ஒரு ஐம்பது ஜோடிகளின் ஆடலைப் பார்த்திருப்பேன். அந்தப் பாடலின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், நாட்டுப்புறத்தன்மை எல்லாம் சேர்ந்து அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் பிடித்து விட்டது என்று தெரிந்தது. சினிமாப் பாடலா, வேறு நாட்டுப் பாடலா என்று தெரியாமல் கூகிளில் தேடினேன். எனிமி என்ற படம் என்று தெரிந்தது. ஆனால் சினிமாவில் காணும் ஆட்டத்தை விட தனி நபர்கள் ஆடியது பிரமாதமாக இருந்தது. சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகியது இது. எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டவில்லை.

புதுசா ஒரு வெட்கம் முளைக்குது

https://www.google.co.in/search?q=pudhusa+oru+vetkam&ie=UTF-8&oe=UTF-8&hl=en-in&client=safari#fpstate=ive&vld=cid:34ec5582,vid:WEf4JrvP-bY