வாசகர் வட்டம்

இரண்டு பேருக்குத்தான் தமிழ் இலக்கிய சூழலில் வாசகர் வட்டம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜெயமோகனின் வாசகர் வட்டம் உலகளாவியது. வடகிழக்கு மாகாணங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை பரவியிருப்பது. அவர்களின் செயல்திறனும் உலகம் அறிந்தது. ஜக்கிக்கு அடுத்தபடியான மக்கள் திரளைக் கொண்டது ஜெ. வாசகர் வட்டம்.

என்னுடைய வாசகர் வட்டம் அளவில் மிகவும் சிறியது. என்றாலும் ஒரு காலத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்ததுதான். இல்லாவிட்டால் காமராஜர் அரங்கத்தில் இரண்டு முறை புத்தக வெளியீட்டு விழா நடத்தியிருக்க முடியாது. இப்போது என் வாசகர் வட்டத்தில் மூன்று பேர்தான் இருக்கிறோம். சீனி, நான், வினித். இது பற்றி சீனி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதை இங்கே பகிர்கிறேன்.

வாசகர் வட்ட ரிட்டயர்மெண்ட் அறிவிப்பு மற்றும் ஆக்டிவாக இயங்க புது ஆட்கள் வரவேற்பு.

அராத்து

வேலையில் 60 வயதில் ரிட்டயர்மெண்ட் என்றால் வாசகர் வட்டத்தில் 35 வயதில் ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொள்கிறார்கள். நம் வட்டம் ஒழுக்கரீதியான வட்டமல்லதான். அதற்காக குடித்துக் களிக்கும் வட்டம் மட்டுமல்ல. நிறைய திட்டங்களும் வேலைகளும் உள்ளன. ஆனால் செய்வதற்கு ஆளில்லை. ஏதேனும் விழா , டூர் என்றால் , நானும் வரேன் சார் என ஆஜர் ஆவபவர்கள் (அதிலும் ஒரு திட்டமிடலிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். ரூம் உட்பட நாம்தான் போட வேண்டும். கடைசி நேரத்தில் கன்ஃபார்ம் செய்யறேன் என கழுத்தறுப்பார்கள் ) இலக்கியப்பணி , பிழை திருத்துதல் , காப்பி எடிட்டிங்க் என்றால் காத தூரம் ஓடிப்போய் விடுவார்கள். நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

1)சாரு மீதும் , அவர் எழுத்து மீதும் ஆர்வம் உள்ள இறங்கி வேலை செய்யும் நண்பர்கள் தேவை.

2) ஆட்டோ நேரேடிவ் – முதலாளி இல்லாத பதிப்பகம். இதற்கு பொறுப்பெடுத்து (பகுதி நேரமாகத்தான்) வேலை செய்ய …ஒவ்வோரு டிபார்டெம்ண்டுக்கும் தேவை. சின்னச் சின்ன வேலைதான். பகிர்ந்து செய்ய வேண்டும்.

3)சிறுகதை அமர்வு ஆரம்பித்தோம். ஒரு மாதத்தோடு நின்று விட்டது. இடம் இருக்கிறது. ஆர்கனைஸ் செய்ய யாருக்கும் முனைப்பில்லை. எல்லாவற்றையும் எப்போதும் நானும் சாருவும் தான் நொட்ட வேண்டும்.

4)சாரு புத்தகம் , என் புத்தகம் சார்ந்து சில எடிட்டிங் , மொழிபெயர்ப்பு சார்ந்து சில வேலைகள் உள்ளன.

5)வலைத்தளம், பிளாக் , சோஷியல் மீடியா சார்ந்து சில வேலைகள்.

6)பாண்டி ரைட்டர் ரெஸிடன்ஸ் சார்ந்து சில வேலைகள்.இப்படி ஒரு ஆக்டிவ் குழு உருவானால் மாதம் ஒரு முறை பாண்டியில் சந்திக்கலாம், திட்டமிடலாம். அந்த மாதம் செய்த வேலைகளை விவாதிக்கலாம்.

இப்போது எல்லாமே கிணற்றில் போட்ட் கல்லாகக் கிடக்கிறது. இதில் பல வேலைகளை களத்தில் இறங்கி எல்லாம் செய்ய வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே உட்கார்ந்த இடத்தில் செய்யலாம்.யாரெல்லாம் இந்தக் குழுவில் இணையலாம்/ இணையத் தேவையில்லை.

1)இளைஞர்கள் (வயது முக்கியமல்ல , மனதளவில்)

2)சென்ஸிபிளான , முழு மனநலம் உள்ளவர்கள் .

3)சாரு மற்றும் அவர் எழுத்தை சரியான அர்த்தத்தில் நேசிப்பவரக்ள்.

4)வழவழ கொழகொழ அல்லாமல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என நேரடியாகப் பேசுபவர்கள்.

5)ப்ராக்டிக்கலான ரிஸல்ட் ஒரியண்டட் ஆட்கள். ——————

வேண்டாம்

1)அடிக்கடி உடம்பு முடியாமல் போய்விடுபவர்கள் , எப்போதும் எதற்கேனும் ஆஸ்பத்திரியிலேயே பழியாகக் கிடப்பவர்கள் .

)மெண்டல்கள் , ரிங்க் அடித்தால் போனையே பேஸ்த் அடித்து பார்த்துக்கொண்டிருப்பவர்கள் , மூட் ஸ்விங்க் உள்ளவர்கள், ஸ்டிரெஸ் உள்ளவர்கள் .

3) சம்பளம் வாங்குமிடத்தில் கடும் பிஸியாக கிடப்பவர்கள்

4)குழந்தையைக் கொண்டு போய் பள்ளியில் விட்டு அழைத்துக்கொண்டு வருபவர்கள்.

5)கோயில் குளம் , நோன்பு , விரத கோஷ்டிகள்.

6)தினமும் இரவு வீட்டுக்குப் போயே ஆக வேண்டி இருப்பவர்கள்.

7)குடித்து விட்டு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்பவர்கள் மற்றும் குடித்து விட்டு கலாட்டா செய்து மட்டையாவபர்கள்.

8)பண விஷயத்தில் தந்திரமாக , அமுக்கமாகச் செயல்படுபவர்கள்.

9)மச்சினிச்சி வளகாப்பு , காதுகுத்தி ,கிரஹப் பிரவேசம் , முதலிரவு போன்ற திருவிழாக்களுக்கு செல்லும் பழக்கம் இருப்பவர்கள் .

இதைப்போல 100 பாயிண்டுகள் எழுதிக்கொண்டே செல்லலாம். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு சாரு வாசகர் வட்டத்தில் சிறப்பாகச் செயலப்டுக்கொண்டிருப்பது சாரு மட்டுமே.

ஓரளவு செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் :- நான் , வினித் , செல்வா ,கமலேஷ் , ஶ்ரீதர் , ஶ்ரீராம் மட்டுமே .இவ்வளவு குறைவான ஆட்களை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்ய இயலவில்லை. அதிலும் ஶ்ரீராம் , நேரடியாக சாருவுக்கு உதவுவார். ஶ்ரீதர் ஆடிட்டிங்க் பார்ப்பார். அதனால் மீதம் இருப்பது 4 பேர் மட்டுமே.

அரசுவை மோட்டிவேட் செய்து இணைத்துக்கொண்டால் செயல்படுவார் எனத் தெரிகிறது. விருப்பமுள்ளவர்கள் கமெண்ட் அல்லது இன்பாக்ஸில் தெரிவிக்கவும். ஏப்ரலில் ஒரு வார இறுதியில் விருப்பம் தெரிவித்தவர்களுடன் பாண்டியில் ஒரு சந்திப்பைப் போடலாம். திட்டமிடலாம் , விவாதிக்கலாம். முதலில் ஆன்லைனில் செய்வதற்கு ஒரு ப்ராஜக்ட் உள்ளது. எந்த ஸ்கில்லும் தேவையில்லை. ஆர்வம் போதும். இதில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கவும். இங்கிருந்து தொடங்கலாம்.

நன்றி வணக்கம்.