வாசகர் சந்திப்பு : பெங்களூர்

ஏப்ரல் 5, 6, 7, 8 தேதிகளில் பெங்களூரில் நம்முடைய வாசகர் சந்திப்பு நடைபெற உள்ளது. சில காரணங்களால் மார்ச்சிலேயே நடக்க இருந்த சந்திப்பு இப்போது ஏப்ரலுக்குத் தள்ளிப் போயிருக்கிறது. இந்த முறை எந்த மாற்றமும் இராது. நிச்சயம் மேற்கண்ட தேதிகளில் பெங்களூரில் இருப்பேன்.

வர விரும்பும் நண்பர்கள் வரலாம். வழக்கம் போல் கோரமங்கலாவில் தங்குவேன்.