கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். நான் பாட்டுக்கு என் குகையில் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை எல்லாம் வந்திருக்காது. என் வாசகர் வட்ட நண்பர்களும் பெரிய மகாத்மாக்களாக இருக்கிறார்கள். அந்தப் போனால் குட்டை என்று எனக்கு அறிவுறுத்தலாம் அல்லவா? அமைதியாக இருக்கிறார்கள். இன்று ஒரு மகாத்மா கேட்டார், ”சாரு, நீங்கள் எடுத்த அந்தப் பேட்டியை வட்டத்தில் போடலாமா?” அடப்பாவி… ரோம் பற்றி எரிகிறது… சாரு, உங்கள் அத்திம்பேரைப் பார்த்தேன், உங்களை நலம் விசாரித்தார் என்கிறார். ம்… இந்த நிலையில் இந்தக் கடிதம் எனக்கு ஆறுதலாக இருந்தது… யாரோ ஒருவருக்காவது நம் எழுத்து ஏதோ நல்லதைச் செய்கிறது என்று…
டியர் சாரு….
ஒரு சிறந்த குணம் என்பது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி எனக்கு நிறைய குழப்பங்கள் இருந்து வந்தது… உங்களது எழுத்தைப் படித்த பிறகுதான் ஒரு முழுமையான புரிதல் வந்தது. ஒரு ஞானியின் மனநிலை போல உங்கள் மனம் உள்ளது என்பதை உங்கள் சமீபத்திய கட்டுரைகள் மூலம் புரிந்து கொண்டேன்.. இப்போது நான் தெளிவு அடைந்து விட்டேன் ..எல்லோரும் உங்களைப் போல இருந்துவிட்டால்… சாத்தியம் குறைவுதான்… இது ஒன்றும் பாராட்டு பத்திரம் அல்ல எனது இயல்பான வார்த்தைகள்.. எத்தனையோ முறை இக்கடிதத்தை உங்களுக்கு எழுத நினைத்திருக்கிறேன் ஆனால் உங்களை பாராட்ட என்ன தகுதி இருக்கிறது என்று எண்ணி கொள்வேன்..தான் பெரிய ஆளை இருந்தால்தான் மற்றவரை பாராட்டவேண்டும் என்ற மேதாவித்தனம் போலியானது என்பதை புரிய வைத்ததே உங்கள் எழுத்துதான்…
wim mertens,pedro aznar,kousiki chakrabarthy
இன்னும் பலரை எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி என்றும்
அன்புடன்,
jakkariya
டியர் ஜக்கரியா…
நான் எப்போதும் என்னைப் பற்றி நான் ஒரு குழந்தை போல என்று சொல்லிக் கொள்வேன். எல்லோரும் அதைத் தற்பெருமை என்றே பார்ப்பார்கள். சிலர் மட்டும் இந்த அயோக்கியனா குழந்தை என்று நினைப்பார்கள். ஆனால் எனக்கு என்னவோ நாம் அப்படித்தான் என்றே எண்ணம். ஏனென்றால் என்னால் எல்லோரையும் அற்புதம் என்றே பார்க்கத் தோன்றுகிறது. திரு சுந்தரத்தைக் கூட இவன் ஒரு அற்புதன் என்றே அவந்திகாவிடம் சொன்னேன். என்னைப் போல் ஒருவன் என்றேன். இனிமேலும் இப்படித்தான் இருப்பேன். எல்லோரையுமே நல்லவர்கள் என்று நினைக்க எவ்வளவு நல்ல மனம் வேண்டும்? அது ஒரு கொடுப்பினை.
உங்கள் கடிதம் இன்று எனக்குக் கிடைத்த ஆக்ஸிஜன்…
சாரு
29.8.2014
Comments are closed.