என் தாய்வழித் தாத்தாவின் பெயர் ராமசாமி. ராமசாமியின் பாட்டனார் செட்டிநாடு பகுதியிலிருந்து பர்மாவுக்குப் பெட்டியடியாகப் போய் பெரும் பணம் சம்பாதித்து வட்டிக்கு விட்டு செல்வந்தரானார். பெட்டியடி என்றால் என்ன என்று புயலிலே ஒரு தோணியில் வரும். எல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம். ராமசாமி இந்தியாவையே பார்த்ததில்லை. ரங்கூனிலேயே இன்னொரு பணக்காரக் குடும்பத்தில் ராமசாமிக்குப் பெண் பார்த்துக் கட்டினார்கள்.
இரண்டாம் உலக யுத்தம் வந்த போது ராமசாமி தன் பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றிக்கொண்டு தன் மனைவி பாப்பாத்தியை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு வந்து சேர்ந்தார். பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. என் அம்மா இரட்டை. பத்து, பதினொன்று. பன்னிரண்டாவது ராமசாமி. என் மாமா. அப்போதெல்லாம் தந்தையின் பெயரை பிள்ளைகளில் ஒருவருக்கு வைப்பார்கள்.
முதல் மகளுக்கு புதுக்கோட்டை அரசரின் காரியதரிசியைக் கட்டி வைத்தார்கள். அரச குடும்பத்து சம்பந்தம். மாவட்டமே வியக்கும் வகையில் திருமணம்.
மூத்த ராமசாமிக்கு இடம் பெயர்ந்ததன் காரணமாகக் குடிப்பழக்கம் ஏற்பட்டு, அவரே கள்ளுக்கடை வைத்து (நாகூரில்) சூதுப் பழக்கமும் உண்டாகி சொத்து முழுவதையும் இழந்து, குடியினால் குடல் வெந்து இளம் வயதில் செத்தார்.
அம்மாச்சிக்கு இப்போது பதினோரு குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு. மூத்தவனை (வீரப்பன்) அழைத்துக்கொண்டு சித்தாளாகப் போய் மற்ற பிள்ளைகளைப் படிக்க வைத்தார். வீரப்பனுக்குக் கீழே வந்த சண்முகம் ஊரில் பிரபல ரவுடியாக மாறினார். மற்றவர்கள் படித்தார்கள்.
குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு அம்மாச்சிக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்த மூத்த மகளுக்குக் காகிதம் போட்டார். பதில் இல்லை. நேராகவே போனார். இனிமேல் இந்தப் பக்கம் வராதே என்று விளக்குமாற்றை எடுத்துக் காண்பித்தாள் மூத்த மகள்.
பணம் கொடுக்காவிட்டால்கூடப் பரவாயில்லை. விளக்குமாற்றைக் காண்பித்தது அம்மாச்சிக்குக் கடும் சீற்றத்தை ஏற்படுத்த, நேராக சேர்வராயன் மலைக்குப் போய் சேர்வராயன் கோவிலில் மண்ணை அள்ளி வைத்தார்.
சில மாதங்களிலேயே மூத்த மகளின் மூத்த மகன் (ஆறு வயது) ஜுரம் வந்து செத்தான்.
இது என்னிடம் அம்மாச்சியே சொன்ன கதை. அப்போது என்னவோ ’ஏன் சேர்வராயன் மலைக்குப் போனீர்கள்?’ என்று எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. சேர்வராயன் மலை ஏற்காட்டில் இருக்கிறது.
என் அம்மாச்சியின் மனநிலையில்தான் நான் இப்போது இருக்கிறேன். அம்மாச்சிக்கு மூத்த மகள். எனக்கு எதிரிகூட இல்லை. அறம் பாடுவதற்குக் கூட ஆள் இல்லை.
சீனியிடம் “நாம் வாங்கிய கேமராவை விற்று விடுங்கள்” என்று சொன்னேன். ஏழு லட்சத்துக்கு வாங்கினோம். எழுபதாயிரத்துக்கு வந்தால்கூட விற்று விடலாம் என்றேன். என் ஒரு மாத வீட்டு வாடகைக்கு ஆகும்.
பூனைகளால்தான் இத்தனை வாடகை. 150 வீடு பார்த்தோம். இதில் 140 பிராமண ஓனர்கள். அத்தனை பேருமே இரட்டிப்பு வாடகை கேட்டார்கள். அதை விடக் கொடுமை, வீட்டில் பிராணி இருக்கக் கூடாது என்றார்கள். இப்போதைய வீட்டு ஓனர் யானை கூட வளருங்கள் என்று சொல்லி விட்டார். ஆனால் இரட்டிப்பு வாடகை. கொடுமை என்னவென்றால், நாங்கள் இங்கே வந்து ஆறு மாதம்கூட ஆகவில்லை. வீட்டை விற்கப் போகிறேன் என்கிறார்.
ஒரு நண்பர் எனக்கு மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்தார். பிறகு அவருடைய நிதி நிலைமையின் காரணமாக அனுப்புவதில்லை. சென்ற வாரம் அவரைத் தொலைபேசியில் அழைத்து பூனை உணவுக்காக ஏதேனும் பணம் அனுப்ப முடியுமா என்று கேட்டேன். இதை பிச்சை என்று அழைப்பதை விட வேறு என்ன வார்த்தை இருக்கிறது என்று தெரியவில்லை. அவரும் பத்தாயிரம் அனுப்பி வைத்தார்.
எனக்குப் பணமே தேவையில்லை. எனக்கு வரும் ஓய்வு ஊதியமே எனக்கு தாராளம். பூனைகளுக்காகத்தான் பணம் தேவை. பூனை உணவுக்கும், பூனைகள் வசிப்பதற்காக இத்தனை பெரிய வீட்டின் வாடகைக்கும்.
என்னுடைய இந்தப் பிச்சைக்கார நிலைக்குக் காரணம், என் மனைவியும் என் மகனும்தான். என் மகனின் மாத ஊதியம் பத்து லட்சம் இருக்கலாம். எனக்கு அவன் வேலைக்குப் போய் ஒரு பைசா அனுப்பியதில்லை. இன்று வரை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவனுடைய மரீன் இஞ்ஜினியரிங் படிப்புக்காக ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பேன். நான் வேலையை விட்டதால் கிடைத்தது இரண்டரை லட்சம். மீதி என் வாசகர்கள் கொடுத்தது.
என்னுடைய இந்தப் பிச்சைக்கார நிலைக்கு இன்னொரு காரணம், என் மனைவி. ஒரே ஒரு பூனை இருக்கும்போது அதற்குக் கர்ப்பத்தடை செய்து விடலாம் என்றேன். இதுவரை என் மனைவி நான் சொன்ன எதையுமே கேட்டதில்லை. அப்போதும் கேட்கவில்லை. ஒன்று பத்தாகப் பெருகி விட்டது. பிறகு பத்துக்கும் கர்ப்பத்தடை பண்ணினேன். ஒரு லட்சம் ரூபாய் ஆயிற்று. இப்போது இந்தப் பத்து பூனைகளின் உணவுக்காக நான் தெருத் தெருவாக பிச்சை எடுக்கிறேன். என் வயது 73.
என் மகளைப் போன்ற ஒரு பெண் (வாசகியாக அறிமுகமானவள்) சிவில் சர்விஸுக்குப் படிக்கிறாள். நீ வேலைக்குப் போய் என்னைக் காப்பாற்று என்றேன். நீ கேட்காமலேயே செய்வேன் என்றாள்.
”அவர் அந்தப் பரீட்சையில் தேர்வாக மாட்டார். தேர்வானாலும் உங்களுக்கு உதவி செய்ய மாட்டார்” என்றார் என் நெருங்கிய நண்பர். ஒரு தமிழ் எழுத்தாளர் தன்னைப் பார்க்க வரும் வாசகர்களை இரவில் தங்க வைத்து அவர்கள் தூங்கும்போது தன் குறியை அவர்களின் வாயில் விட்டு ஆட்டியதாக பலரும் புகார் சொன்னார்கள். புகார் சொன்னவர்கள் ஆண்கள் என்பதால் அது அப்படியே காற்றில் மறைந்தது. நண்பர் சொன்னதைக் கேட்ட போது எனக்கு அந்த எழுத்தாளரின் வாசகர்களைப் போல்தான் இருந்தது. என்ன செய்வது, நண்பர். வாயில் ஊற்றிய கஞ்சியைத் துப்பி விட்டேன். ததாகதனே என் ஆதர்சம். ததாகதனின் முகத்தில் ஒருவர் காறி உமிழ்ந்தபோது அவர் முகத்தைத்தான் கழுவிக் கொண்டாராம்.
என் வாழ்வில் எனக்கு நிகழ்ந்த ஆகப் பெரிய வன்முறை என்று தோன்றியது. ஆனாலும் எல்லா வன்முறைகளையும் ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்வது என் பழக்கம் என்பதால் அதையும் அப்படியே கடந்து போனேன்.
இதுவரை நான் சொன்னது எதுவுமே பலிக்காமல் போனதில்லை. என் வார்த்தை கண்டு சோவே பரிகாசம் செய்தார். திமுகவுக்கு 25 இடம் கிடைக்கும் என்று துக்ளக்கில் எழுதினேன். 250 என்று விகடன் எழுதியது. என்ன சார் இது, அதிமுககாரர்களே இப்படி நினைக்கவில்லை என்றார் சோ. துரைமுருகனே என் ஆரூடத்தை உண்மையாக்கியவர். தமிழ்நாடு இருளில் இருந்த போது துரைமுருகன் சும்மா இருந்திருந்தாலே விகடன் வாக்கு பலித்திருக்கும். துரைமுருகன் பேசினார். திமுகவுக்குக் கிடைத்தது 21. 25 என்று தவறாகச் சொல்லி விட்டேன் என்று மன்னிப்புக் கேட்டேன் வாசகர்களிடம்.
இப்படி ஒரு நூறு உள்ளன.
அப்படியே இப்போதும் என் வாக்கு பலிக்கும்.
போகட்டும். தொடங்கின இடத்துக்கு வருகிறேன். இனிமேல் என் ப்ளாகை நன்கொடையோ சந்தாவோ அனுப்பாமல் யாரும் படிக்காதீர்கள்.
ஒரு பத்தே பத்து பேரைத் தவிர வேறு யாருமே நன்கொடையோ சந்தாவோ அனுப்புவதில்லை. இனிமேல் யாரும் 300 ரூபாயும் அனுப்ப வேண்டாம். அது பிச்சைக்காரனிடம் ஒரு ரூபாய் நாணயத்தைப் பிச்சை போடுவது போல. ரெண்டு மாதத்துக்கு ஒருமுறை ஒரு வாசகர் 300 ரூ. அனுப்புகிறார். அது எனக்கு வேண்டாம். வாசகர் வட்ட நண்பர்களும் பணம் அனுப்புவதில்லை. அவர்கள் இனி என்னை சந்திக்கவோ இதைப் படிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அன்னபூரணி, ஸ்ரீராம், ஸ்ரீ, சீனி, கற்பகம், குமரேசன், ராஜா, ப்ரவீன் குமார், வளன் போன்றவர்கள் எனக்கு வேறு பல வகைகளில் உதவி செய்கிறார்கள். ஒரு முக்கியமான தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த ஸ்ரீ அதை நிறுத்தி விட்டு ஒரு மாத காலம் எனக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தாள். அதையெல்லாம் பணத்தால் ஈடு செய்ய முடியுமா? சமீபத்தில் சீனி எனக்கு ஒரு உதவி செய்தார். என்ன என்று சொல்ல மாட்டேன். அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கட்டாது. இத்தனைக்கும் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதை யாருமே என்னிடம் சொன்னதில்லை. சீனிதான் சொன்னார். இப்படிப்பட்ட நண்பர்கள் ஓரிருவரைத் தவிர வேறு எவரும் எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை. பணமும் அனுப்புவதில்லை. அவர்கள் யாரும் இனி இந்த ப்ளாகைப் படிக்க வேண்டாம். குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் யாரும் என்னைப் படிக்க வேண்டாம் என்பது என் விசேஷ வேண்டுகோள். அங்கிருந்து ஒரே ஒரு நண்பரைத் தவிர வேறு யாருமே எனக்கு சந்தா/நன்கொடை அனுப்புவதில்லை.
இதற்கிடையில் என் கவிதை மீது விமர்சனம் வேறு. அந்த மட்டி மூடர்களை நான் ரொலாந் பார்த் எழுதிய எ லவர்ஸ் டிஸ்கோர்ஸ் என்ற நூலைப் படிக்கும்படி பரிந்துரை செய்கிறேன்.
சந்தாவோ நன்கொடையோ செலுத்தாதவர்கள் இனி இந்த ப்ளாகைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சந்தா/நன்கொடை செலுத்த விரும்பினால், விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai