இரண்டு விஷயங்கள். புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா தொடர்பாக செல்வகுமார் கடும் மழையிலும் அலைந்து திரிந்து விசாரித்ததில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் ஒரு மாலைப் பொழுதுக்குக் கட்டணம் ஐந்து லட்சம்ரூபாய் (ஒரு மணி நேரத்துக்கு என்று சொன்னதாக ஞாபகம்) என்று தெரிந்ததால் அந்தத் திட்டம் கைவிடப் படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் வெளியீட்டு விழா இருக்கும். வேறொரு அரங்கத்தில் பேசி இருக்கிறோம். 72000 ரூ. கட்டினால் அரங்கம் கிடைக்கும். டிசம்பர், ஜனவரி இசைக் காலம் என்றபடியால் அரங்குகள் கிடைப்பதில்லை. அதோடு புத்தக வெளியீட்டு சீஸன் வேறு. எனவே உடனடியாக முந்தினால்தான் அரங்கம் கிடைக்கும். இதன் பொருட்டு நண்பர்களிடம் பண உதவி எதிர்பார்க்கிறேன். 1000 ரூ. என்றால் கூட அனுப்பி வையுங்கள். நண்பர்களிடம் திரட்டி, கடன் வாங்கி நாளை அரங்கத்தை முன்பதிவு செய்து விடலாம். எனவே நாளைக்குள் பணம் அனுப்புவது சாத்தியம் இல்லை என்று சும்மா இருந்து விட வேண்டாம். டிசம்பரில் கூட பணம் அனுப்பி வையுங்கள். பணம் அனுப்பும் நண்பர்களுக்கு என் கையெழுத்திட்ட எக்ஸைல் கிடைக்கும்.
இரண்டாவது விஷயமும் பணம் பற்றியதே. என்னுடைய மருத்துவமனை செலவு சுமார் இரண்டு லட்சம் ஆகியிருக்கிறது. நேற்று கூட மாத்திரை கணக்கை 5000 ரூ. என்று தவறாக எழுதி விட்டேன். மாதாமாதம் சாப்பிட வேண்டிய மாத்திரைகளின் விலை 7000-ஐத் தாண்டுகிறது. ஆறு மாதம் சாப்பிட வேண்டும். ஆபரேஷன், ஸ்டெண்ட் என்று போயிருந்தால் ஆறு ஏழு லட்சங்கள் ஆகியிருக்கும். அது தவிர உடல் வலுவும் போயிருக்கும். அதை விட இந்த மாத்திரை விஷயம் பரவாயில்லை. Brilinta என்ற மாத்திரை மட்டும் ஒன்று 50 ரூ. மாதம் 60 உட்கொள்ள வேண்டும். போகட்டும். நேற்று அராத்துவிடம் பேசிக் கொண்டிருந்த போது ”பல நண்பர்கள் பணம் அனுப்புவதாகச் சொன்னார்கள். ஆனால் அனுப்பவில்லை. எல்லோரும் நம் நெருங்கிய நண்பர்கள். அதனால்தான் குழப்பமாக இருக்கிறது” என்று சொன்னார். எப்படியும் நாலைந்து லட்சம் சேர்ந்து விடும்; மருத்துவமனை செலவு போக மற்றதை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன் என்றும் சொன்னார். நண்பர்கள் அனுப்பியிருந்தது 40,000 ரூ. அதனால் பல நண்பர்கள் அவசரமாகக் கொடுத்த தொகையை என்னால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. பணம் கேட்டு எழுத அலுப்பாகத்தான் இருக்கிறது. என் ”நண்பர்கள்” குழாம் வேறு பணம் கறப்பதற்காகத்தான் நான் மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டேன் என்று எழுதியிருந்தார்களாம். அவர்கள் நன்றாக இருக்கட்டும். நம் வேலையை நாம் பார்ப்போம். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவை அனுப்பி வையுங்கள். இந்தப் பணச் செலவு காரணமாகத்தான் புத்தக வெளியீட்டு விழாவே வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நண்பர்கள் கேட்கவில்லை. அவர்களின் வற்புறுத்தலால்தான் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு புத்தக வெளியீட்டு விழாவும் எவ்வளவு பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அதேபோல் இந்த வெளியீட்டு விழாவையும் நடத்திச் செல்ல உங்களின் உதவி தேவை. நம் நண்பர்கள் அத்தனை பேரும் மத்தியதர வர்க்கத்தினர் என்று எனக்குத் தெரியும். அது தெரிந்தும்தான் இந்த வேண்டுகோள். எல்லோரும் சேர்ந்தால்தான் தேர் இழுக்க முடியும். இதை ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியாக நினைக்காமல் ஒரு இலக்கிய விழாவாக நினைத்துக் கொள்ளுங்கள். மூன்று ஆண்டுக் காலம் இந்த நாவலுக்காக என் உழைப்பை நல்கியிருக்கிறேன். புதிய எக்ஸைலை வாசிக்கக் கொடுத்த பலரும் அதைப் படித்து முடிக்கவில்லை. ஏனென்றால், இந்த நூல் உங்கள் ஆயுள் முழுவதும் உங்கள் கூடவே பயணம் செய்யும். உங்கள் கூடவே இருக்கும். ஏனென்றால் இது நாவல் மட்டுமல்லாமல் ஒரு User’s Manual-ஆகவும் செயல்படும் தன்மை கொண்டது. நம் தமிழின் பத்தாயிரம் ஆண்டு ஞான மரபை ஒரு ஆவணமாக ஆக்கியிருக்கிறேன்.
பணம் அனுப்புவதற்கான விபரம்:
Name: K. ARIVAZHAGAN
Bank: AXIS branch Radhakrishnan Salai
Account no. 911010057338057
IFS Code Number UTIB0000006
MICR Code 600211002
ICICI bank account No. 602601 505045
K. Arivazhagan
T. Nagar Branch.
IFSC code No. ICIC0006026
Comments are closed.