பின் வருவது அராத்து தன் முகநூலில் எழுதியது:
வெண்முரசு விழாவைப்பற்றி ஏதும் எழுதவில்லையே நீங்கள் என ஜெயமோகன் போனில் கேட்டுவிட்டதால் இந்த பதிவு.
புத்தகத்துக்கு ஏன் மார்கெட்டிங்க் என இன்னமும் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் ஒன்றரை லூஸுக்களுக்கு இதற்கு மேலும் பதில் சொல்லாமல், மார்கெட்டிங்கை இதை விட நூறு மடங்கு முன்னணி எழுத்தாளர்கள் செய்தாக வேண்டும். பதிப்பகமும் விளம்பரங்கள் செய்ய வேண்டும் , விழாக்கள் எடுக்க வேண்டும் எனினும் , செலவு என வந்து விட்டால் பதிப்பகங்கள் இன்னமும் விழா நடத்தும் எழுத்தாளர்கள் பின்னால் பம்மிக்கொண்டு இருக்கும் சூழலே உள்ளது.இப்போது செய்யப்படும் மார்கெட்டிங்க் எல்லாம் எல்.கே.ஜி அளவிலேதான் உள்ளது. அடையாள உண்ணாவிரதம் என ஒன்று இருப்பார்களே , அதைப்போல அடையாள மார்கெட்டிங்க்.
வெண்முரசு புத்தக வரிசையை அதிக வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியே இந்த மார்கெட்டிங்கும் , இந்த விழாவும் , கமலும் , இளையராஜாவும் பின்ன அசோகமித்திரனும் என ஜெமோ சொல்லியிருந்தார். அப்போதுதான் அதிக புத்தகங்கள் விற்பனையாகும் . பதிப்பகம் நஷ்டத்தை சந்திக்காது என சொல்லியிருந்தார்.தனக்கு சல்லிக்காசு வேணாம் என்றும் சொல்லியிருந்தார்.விழாச் செலவை ஏற்று நடத்தியது அவரின் நண்பர்கள்.
விழாவுக்கு ஆன செலவில் பாதி கூட ஒரு வருட புத்தக விற்பனையில் கிடைக்காது.இதைத் தாண்டிய உலக உண்மை ஒன்று கூட இல்லை.
பதிப்பாளருக்கு நஷ்டம் வரக்கூடாது , அதிக வாசகரைச் சென்று சேரவேண்டும் என எல்லாவற்றையும் தாண்டி , ஒரு எழுத்தாளனுக்கு , தன் படைப்பை முன் வைத்து , குறைந்த பட்சம் தனக்கு ஒரு விழா நடக்க வேண்டும் என்ற மிக மிக அடிப்படையான , நியாயமான ஆசை இருக்கும். இது ஒரு அல்ப ஆசைதான். இதனால் ஒரு புண்ணியம் இல்லை.ஆனால் இந்த அல்ப ஆசை கூட சாதாரணமாக நிறைவேறுவதில்லை. அவனேதான் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய கேவலமான சூழல் நிலவுகிறது. என்ன ? என் நண்பர்கள் செலவு செய்து நடத்தினார்கள் என பேப்பர் நாப்கினை எடுத்து துடைத்துக்கொண்டே தர்மசங்கடமாக விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.
சாரு, தன் வாசகர்களிடம் பகிரங்கமாக பணம் கேட்டு , பொது பாஷையில் சொன்னால் ,பிச்சை கேட்டு ,தன் புத்தக வெளியீட்டை நடத்துவார். அந்த பிச்சை காசில் போடும் ஓசி மாலை சிற்றுண்டியை , பிச்சையை விமர்சிக்கும் நாகரீக கனவான்கள் இரண்டாம் முறையாக சாப்பிட்டு , ஏப்பம் விட்டு , இலக்கிய இன்பம் துய்ப்பார்கள்.
நான் நடத்திய புத்தக விழாவைப்பற்றியும் பல கேள்விகள் விமர்சனங்கள். விழா நடந்த நேரத்தில் , நான் கொஞ்சம் காசு சேர்த்து வைத்திருந்ததால், மொத்த செலவும் நானே செய்தேன். என் புத்தக வெளியீட்டு விழாவை , என் நண்பர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் , என் பிறந்த நாள் கொண்டாட்டம் போலவும் எடுத்துக்கொண்டேன்.
பொருளாதார ரீதியாக இந்த புத்தக வெளியீட்டு விழாக்களால் , புத்தகம் எழுதியவனுக்கு ஒரு லாபமும் இல்லை. இது விழா நடத்தும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் தெரியும்.தெரிந்தே செய்கிறார்கள். பிறகு ஏன் தானே நடத்திக்கொள்ளும் இந்த விழாக்கள்?
சும்மா வெட்டி பந்தா , அல்ப ஆசை , ஜாலி , குஜால் , ரவுஸு , லந்து , அடுத்தவங்க வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வது …..இன்ன பிற
Comments are closed.