முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஜனவரி 5 திங்கள் கிழமை. அதிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து அலுவலகம் தொடங்கும் முதல் நாள். ஆனால் எனக்கு வேறு வழியே இல்லை. ம்யூஸியம் தியேட்டரில் வைத்தால் நூறு பேர் நிற்க வேண்டியிருக்கும். அதை நான் விரும்ப மாட்டேன். ஆயிரம் பேர் திரும்பி்ப் போக வேண்டியிருக்கும். அதுவும் சரியில்லை. ஒரு 2000 பேராவது வந்து அமர்ந்து பார்க்கும் வகையில் உள்ள அரங்கம் தான் தேவை. அப்படிப்பட்ட அரங்கம் காமராஜர் அரங்கம்தான். டிசம்பர், ஜனவரி இசை விழாக் காலம் என்பதால் அந்த இரண்டு மாதங்களிலும் ஜனவரி 5-ஐ விட்டால் வேறு ஒருநாள் கூட கிடைக்கவில்லை. ஜனவரி 21 தான் உள்ளது. ஆனால் அதற்குள் புத்தக விழா முடிந்து விடும். எனவே வேறு வழியே இல்லாமல் ஜனவரி 5-ஐத் தேர்ந்தெடுத்து விட்டேன். புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா ஜனவரி 5-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு காமராஜர் அரங்கில் (சென்னை – தேனாம்பேட்டை) நடைபெறும்.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் கொள்ளளவு 5000 இருக்கும். ஆனால் அந்த அரங்கத்திற்குக் கட்டணம் 5 லட்சம் ரூபாய் என்பதால் விட்டு விட்டோம். எனவே நண்பர்கள் சிரமம் பார்க்காமல் இப்போதே ஜனவரி 5-க்கு ரயில் டிக்கட்டை முன்பதிவு செய்து விடுங்கள். காமராஜர் அரங்கம் கொள்ளளவு 2000. எனவே நண்பர்கள் இதைத் தங்களின் விழாவாகக் கருதி வந்து விட வேண்டும் என்று அழைக்கிறேன். விழா செலவுக்குத் தங்களால் இயன்ற பண உதவியும் செய்யலாம். ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
Comments are closed.