(கொடுமையான எழுத்துப் பிழைகளை நான் சரி செய்யவில்லை. கேட்டால் எல்லாருமே இப்படித்தான் எழுதுகிறான் என்கிறார்! எப்படியோ போங்க!)
ரஜினியும் சிகரட்டும்
சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும்.
இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் ,அரசியல்வாதிகள் , பிஸினஸ்மேன்கள் , பல்கலைக்கழக பேராசிரியர்கள் , அறிவு ஜீவிக்கள் என பலரும் சீரியஸாக ஜோக்கர் வேலை பார்ப்பதால் கொஞ்சம் பேலன்ஸ் ஆகி , ரிலாக்ஸ் ஆகி சென்னையில் வாழ்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம்.
ரஜினி அரசியலைப்பற்றியும் , அவரது பட ரிலீஸுக்கு முன்பு , நான் அரசியலுக்கு ….என ஆரம்பித்து ஏதேனும் உளறிக்கொட்டுவதையும் சினிமா போஸ்டர் தின்னும் கழுதை கூட நன்கு அறியும். இப்போது , பயப்படவில்லை , தயங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். எப்ப பார்த்தாலும் அரசியலைப்பார்த்து நான் பயப்படவில்லை , நான் பயப்படவில்லை ….என்றே கூறி வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் வட்டம் , ஒன்றியம் , மாவட்டம் என கணக்கெடுத்தால் பல லட்சக்கணக்கான நபர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் பயப்படாமல் சர்வ சாதாரணமாகத்தான் அரசியலில் இருந்து வருகிறார்கள்.
அவ்வளவு ஏன் ? ஒவ்வொரு கட்சியிலும் மாணவர் அணி உள்ளது. கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.
ரஜினி மட்டும்தான் , பயம் இல்லை , பயப்படலை , பயப்படமாட்டேன் , பயமே கிடையாது என பன்னெடுங்காலமாக வாயை கொஞ்சம் இடது பக்கம் இழுத்து வைத்து சொல்லி வருகிறார்.
அப்புறம் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யணும் என யார் சொன்னாலும் இப்போதெல்லாம் தொங்கிக்கொண்டு இருக்கும் எதையாவது கழட்டி அடிக்கலாம் என்று ஆத்திரம் வருகிறது.
அவ்ளோ கஷ்டப்பட்டு , ஆயிரக்கணக்கான கோடி செலவு செஞ்சி , தேர்தல்ல ஜெயிச்சி ….ஜெயிச்சி , மக்களுக்கு சேவை செய்வீங்க ….போங்கடா டேய் !
அதேபோல தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யணும் …என்ற டயலாக்கை பல காலம் உதிர்த்து வந்திருகிறார் ரஜினி. ஐயா சாமி , தமிழக மக்களுக்கு எந்த மயிரானும் ஒண்ணும் பண்ண வேணாம். மாநிலத்தில் இருப்பதை சுரண்டாமலும் ,ஊழல் பண்ணாமலும் இருந்தால் போதும். தமிழக மக்கள் தாங்களாக முன்னேறி விடுவார்கள்.எதோ தமிழக மக்களெல்லாம் அல்லக்கைகள் போலவும் , நாதியற்று இருப்பதைப் போலவும் , சில கோடிகளை சேர்த்த வுடன் எப்படி பல கோடி மக்களுக்கு தன்னை ஒரு ஆபத்பாந்தவன் போல எண்ணிக்கொள்ள முடிகிறது ?
ரஜினி தன் ரசிகர்களுக்கு பிரியாணி போடுவதாக போக்கு காட்டி விட்டு , பெரும் கூட்டம் கூடும் , சமாளிக்க முடியாது எனக்கூறி அந்த திட்டத்தை கைவிட்டதாக தகவல். ரஜினி கலந்துகொண்ட எஸ்.ரா பாராட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்த போது , 1200 – 1400 நபர்களே கூடியிருப்பார்கள். இதற்கே நல்ல விளம்பரப்படுத்தப்பட்டு நடந்த விழா அது. அதனால் இப்போதெல்லாம் பெருங்கூட்டம் கூடும் என நினைப்பது மித். இல்லையென்றால் ,ரஜினி தன் ரசிகர்களை பிரியாணிக்கு அலைபவர்கள் என தப்புக்கணக்கு போட்டிருக்கக்கூடும். சென்னையில ரஜினி பிரியாணி போடறார் என்றதும் தமிழ்நாட்டின் பல மூலைகளில் இருந்தும் பிரியாணிக்கு அலைந்து கொண்டு லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு விடுவார்களா ?பிரியாணி போடுவது என்பது ஒரு சப்பையான பிளான் ….இதற்கே இந்த பயம், பம்மல் , பதுங்கல்.
என் மனதில் என்ன இருக்கிறது என எனக்கே தெரியாது என்றிருக்கிறார். யாருக்கெல்லாம் தன் மனதில் என்ன இருக்கிறது என்பது அவர்களுகே தெரியாது ? சொல்லுங்கள் பார்க்கலாம். தன் மனதில் என்ன இருக்கிறது , தான் என்ன யோசிக்கிறோம் என எதுவும் தெரியாமல் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கலாம், இமயமலையில் திரியலாம். சீ எம் சேரில் உட்காரலாமா ?
தமிழக அரசியலின் சிகரட்தான் ரஜினி !