(புதிய) எக்ஸைல் முன்வெளியீட்டு சலுகைத் திட்டம்

புதிய எக்ஸைல் நாவலை முன்வெளியீட்டுத் திட்டத்தின் (Pre-order) கீழ் நீங்கள் வாங்கிப் பயன் அடையலாம்.  உத்தேசமாக நாவலின் பக்கங்கள் 1000 இருக்கலாம்.  விலை 1000 ரூ.  டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு இந்த நூல் 500/- ரூபாய்க்குக் கிடைக்கும்.  ஜனவரி 5 புத்தக வெளியீட்டுக்கு முன்பே உங்களுக்குக் கிடைத்து விடும்.

சில ஃபோன் கம்பெனிகள் இப்படி pre-order மூலம்தான் விற்கின்றன.  ஆங்கிலப் புத்தகங்கள் பெரும் அளவில் இந்த முன் வெளியீட்டுத் திட்டத்தின் படி விற்கப்படுகின்றன.  தமிழில் இதுவே முதல் முறை.  250 ரூ. புத்தகத்தை 200-க்குக் கொடுப்பது முன்வெளியீட்டு சலுகை அல்ல.  50% விலை குறைப்புதான் உண்மையான சலுகை.  இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  குறிப்பாக ஒவ்வொரு வாசகரும் தங்கள் நண்பர்களுக்கு இதைத் தெரிவிக்க வேண்டும்.  வாசகர் வட்ட நண்பர்களும் இதை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.  இதை ஒரு மிகப் பிரம்மாண்டமான விற்பனையாக மாற்ற வேண்டியது உங்கள் கடமை.  பத்ரியிடம் 10000 பிரதிகள் முன்வெளியீட்டுத் திட்டத்தில் விற்கும் என்றேன்.  அதை நீங்கள் மெய்ப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விபரங்களை நீங்கள் New Horizon Media வுக்கு ஃபோன் செய்து கேட்கலாம்.  முன்பதிவும் அங்கேயே செய்யலாம்.  தொடர்புக்கு தொலைபேசி எண்கள்: 94459 01234 மற்றும் 9445 97 97 97.  பின்வருவது புத்தகத்தின் முழுமையான அட்டை அல்ல.  அந்த ஓவியம் மட்டும் இருக்கும்.  மற்றபடி புத்தகத் தலைப்பு, ஆசிரியர் பெயர், கிழக்கு பதிப்பகத்தின் லோகோ மூன்றும் இருக்கும்.  எனக்கு புத்தக அட்டையை இங்கே பதிவேற்றம் செய்யத் தெரியவில்லை.  முடிந்தால் நிஜ அட்டையை நாளை பதிவேற்றம் செய்வேன்.  ஓவியர் சுப்ரமணியன் எக்ஸைலை முழுமையாகத் தன் ஓவியத்தில் கொண்டு வந்து விட்டார்.  அவருக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றி.  

Displaying Exile2_Subramanian Artwork.jpg